Thursday, May 24, 2018

மெல்விலி புல்லர், அமெரிக்க தலைமை நீதிபதியாக இருந்தவர்


Melville Fuller, 8th Chief Justice of US
மெல்விலி புல்லர்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 8-வது தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் 1888 முதல் 1910 வரை தலைமை நீதிபதியாக இருந்தவர். நம்ம ஊரில் உள்ளவர்கள் போல பெரிய முறுக்கு மீசை வைத்திருந்தவர். அவர் இறக்கும் வரை நீதிபதியாக இருந்தவர். இவர் பல பிரபல தீர்ப்புகளை வழங்கியவர். Plessy vs. Ferguson, Pollock vs. Farmer’s Loan & Trust Co, US vs. EC Knight Co.
இவரின் தந்தைவழி பாட்டனும், தாய்வழிப் பாட்டனும் நீதிபதிகளாக இருந்தவர்கள். இவர் பிறந்த பின்னர், இவரின் பெற்றோர்கள் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்கள். அப்போது, இவரின் தாய்வழிப் பாட்டனிடம் வளர்ந்து வந்தார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். சிகாகோ நகரில் தன் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார். அதற்கு முன்னர் பத்திரிக்கை நடத்தினார். இவர் வக்கீலாக இருந்தபோது Beach vs. Derby என்ற பிரபல வழக்கை நடத்தினார். இவர் முதன்முதலில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நடத்திய முதல் வழக்கு Traders’ Bank vs. Campbell. அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்ட் இவரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்தார்.
இவர் ஒருமுறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழிப்போக்கர் ஒருவர் இவரிடன் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். அவரும் சிரித்துக் கொண்டே கீழ்கண்ட வாசகங்களை வேடிக்கையாக எழுதிக் கொடுத்தாராம். “It is delicious to be full, but it is heavenly to be Fuller. I am cordially yours, Melville W.Fuller.”
இவர் 1858-ல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர் 6 வருடத்தில் இறந்து விட்ட பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவி மூலம் மொத்தம் ஆறு பெண்கள் பிறந்துள்ளன.
இவர் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக (இவரின் மரணம் வரை) இருந்தபோது, மொத்தம் ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆப்ரகாம் லிங்கனுக்கு எதிராக நின்ற வேட்பாளரான ஸ்டீபன் டக்ளஸ்-க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர். இவர் வக்கீலாக இருந்தபோது, சொத்து விற்பனை சம்மந்தப்பட்ட ரியல் எஸ்டேட் வழக்குகளை அதிகமாக நடத்தியவர்.
இவர், தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பழக்கத்தைக் கொண்டு வந்தார். மற்ற நீதிபதிகளுடன் விசாரனையில் உட்காரும்போது, ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினார். அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறதாம்.
Plessy vs. Ferguson வழக்கு (163 US 537 (1896)
1890-ல் அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் ஒரு சட்டம் கொண்டு வருகிறார்கள். பேருந்துகளிலும், ரயில் பெட்டிகளிலும், வெள்ளையர் கறுப்பர் இன மக்களுக்கு தனித்தனி பகுதிகளில் இடம் ஒதுக்கி சட்டம் வருகிறது. இதை எதிர்த்து வழக்கு வருகிறது. எல்லாரும் சமம் என்கிற போது, எப்படி பிரித்து சட்டம் போட முடியும். இது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வழக்கு. ஆனால், இவர் தலைமை நீதிபதியாக இருக்கும்போது, இவ்வாறு வெள்ளையர், கறுப்பர் பெட்டிகள் என பிரித்தது சரியே என்றும், அப்படிப் பிரித்த அவர்களுக்குள் எந்த பேதமும் காட்டவில்லை என்பதால், “அனைவரும் சமம்என்ற சட்டம் மீறப்படவில்லை என்று ஒரு தீர்ப்பைக் கொடுத்தார்கள். Separate but equal என்று அதற்கு ஒரு புதுத் தத்துவமும் சொல்லிக் கொண்டார்கள். எனவே அந்த தீர்ப்பை எல்லோரும் கண்டித்தார்கள். இன்றுவரை அந்த தீர்ப்பு தவறு என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கிலும் தெளிவு படுத்தவில்லை.