Wednesday, March 16, 2016

அன்றைய பெண்களின் நிலை

அன்றைய பெண்களின் நிலை

Krishnayyan and others v. Muthusami, (1883( ILR 7 Mad 407 (a Judgment by the Madras High Court – judgment by Charles A.Turner, Kt. Chief Justice)
1883-ல் நடந்த வழக்கு இது 
(சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நடந்த வழக்கு)
வீரப்ப கவுண்டனும், சுந்தர கவுண்டனும் அண்ணன் தம்பிகள்; இருவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்;
வீரப்ப கவுண்டன்:
இதில் வீரப்ப கவுண்டன் 1866-ல் இறந்து விடுகிறார்; இறந்த வீரப்ப கவுண்டனுக்கு அம்மாசி என்ற வைப்பாட்டியும், அவள் மூலம் பிறந்த மருதமுத்து, பெரியண்ணன் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்;
சுந்தர கவுண்டன்:
அண்ணன் இறந்த ஒருவருடம் கழித்து தம்பி சுந்தர கவுண்டனும் 1867-ல் இறந்து விடுகிறார்; இவருக்கு வீரம்மாள், மீனாட்சி என இரண்டு மனைவிகள் உண்டு, கூட்டுக் குடும்ப சொத்தின் சில நிலங்களை இந்த இரண்டு விதவை மனைவிகளும் ரூ.2 ஆயிரத்துக்கு சடைய கவுண்டனிடம் அடமானம் வைக்கிறார்கள்; சடையன் அந்த அடமான உரிமையை, அன்னம்மாள் என்பவருக்கு மாற்றி விடுகிறார்; அன்னமாள் அந்த அடமான உரிமையை, மறுபடியும், சபாபதி கவுண்டனுக்கு மாற்றி விடுகிறார்;
வழக்கு:
அண்ணன் வீரப்ப கவுண்டனின் மனைவி அம்மாசி உண்மையில் மனைவியா அல்லது வைப்பாட்டியா? அவருக்கு பிறந்த இரண்டு மகன்கள் மருதமுத்து, பெரியண்ணன் இருவரும் சட்டபூர்வ மகன்களா? அல்லது முறைதவறி பிறந்த மகன்களா? இந்த கூட்டு குடும்ப சொத்தில் அவர்களுக்கு பங்கு ஏதும் உண்டா? என்ற கேள்விகள் எழுகிறது;
அப்போது இருந்த வந்த இந்துசட்டப்படி, இந்த சொத்துக்கள், அண்ணன் வீரப்ப கவுண்டரின் “தனிச் சொத்தாக” இருந்தால் அவரின் வைப்பாட்டி பிள்ளைகள் பங்கு பெறலாம் என்றும், கூட்டுக் குடும்ப சொத்தாக இருந்தால், வீரப்ப கவுண்டரின் வைப்பாட்டி பிள்ளைகள் பங்கு பெற முடியாது என்றும் சட்டநிலை இருந்தவந்த காலம் அது;
Virappa was a Goundan by caste, and we see no reason to doubt that his illegitimate sons would be entitled to inherit to him under the Mitakshara law by which his family is governed.
Sanskrit words used in Mitakshara, Chapter I, Section XII, are “Dasi” and “Dasi Putra”, and the very same words are to be found in Sarasvati Vilasa, and there can therefore be no doubt as to the words in the original text.
In the translations of commentaries of authority in Southern India these slave, or a slave girl and as the son of a female slave or slave girl. (Mitakshara, Chapter I, Section XII, Dr. Burnell’s translation of Madaivya, paragraph 33, Foulkes translationof Sarasvati Vilasa, v.395 to 398 Dr. Burnell’s translation of Viyavahara Nirnaya, page 21).
The question then is whether a concubine is a Dasi within the meaning of the Mitakshara.  We should entertain no doubt on the subject upon the authority of decisions in this Presidency, in Bombay rind in Allahabad, Pandaiya Telaver v. Puli Thevar, 1 M.H.C.R. 478, and other cases, in which the Judicial Committee also expressed similar opinion, but for the dictum of the High Court at Calcutta in Narain Dhara v. Rakhal Gain ILR 1 Cal. 1, that the term Dasi under the Dayabhaga law applied only to certain descriptions of slaves and did not include a ‘continuous concubine’.
It was there observed that the Sanskrit word for a concubine was Avarudda, and that Dasi referred only to a woman who was a slave, as defined by the ancient Hindu Law, which is repealed by Act V of 1843.
நாரதா (முனிவர்) கூற்றுப்படி, அடிமைகள் 15 வகைகள் உண்டு;

1)       Graha Dasan, one begotten on a Dasi in the house;
2)       One paid for;
3)       One accepted in gift;
4)       One inherited;
5)       One maintained during a famine in order that he might become a dasa;
6)       One pledged;
7)       One who became a slave by being relieved from debt;
8)       One taken captive in war;
9)       One won as a stake;
10)   One who becomes a slave of his own choice with the declaration;
11)   One who is an apostate from the order of Sanniyasi;
12)   One who becomes a slave for a stipulated time;
13)   One who becomes a slave by becoming a Bakta;
14)   A slave for the sake of his bride;
15)   One who sells himself;
These  15 sorts of slaves are also recognised by the Mitakshara.

“A female purchased for price and enjoyed or cohabited with is termed by former sages a slave. The son who is born to her is considered a Dasi Putra.”

“One who is adopted after tonsure is termed a slave.”
இந்து மித்தாக்க்ஷர கூட்டுக் குடும்ப சொத்துக்களில், பாகம் பிரியாத தகப்பனின் கூட்டுச் சொத்தில், இத்தகைய வைப்பாட்டி மகன்கள் பங்கு ஏதும் கேட்க முடியாதாம்; இந்த வழக்கின் தீர்ப்பு இதுதான்;
இப்போது, காலம் எவ்வளவோ மாறிவிட்டது!
மனித சமுதாயம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது;

பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள்; 
_____________

Tuesday, March 15, 2016

The concept of marriage

The concept of marriage:

In 'Lindo v. Ballisario', (1795) 1 Hag Con 216 at pp. 230, 231 and 232, (A) Sir William Scot J. summarised the legal conception of marriage as he understood it in these words:

"The opinions which have divided the world, or writers at least, on this subject, are generally, two. It is held by some persons that marriage is a contract merely civil, by others, that it is a sacred, religious, and spiritual contract, and only to be so considered. 

The jurisdiction of the Ecclesiastical court was found on ideas of this last described nature; but in a more correct view of the subject, I conceive that neither of these opinions is perfectly accurate. 

According to juster notions of the nature of the marriage contract, it is not merely either a civil or a religious contract; and, at the present time, it is not to be considered as originally and simply one or the other. It is a contract according to the law of nature, antecedent to civil institution, and which may take place to all intents, and purposes wherever two persons of different sexes engage, by mutual contracts, to live together ............ it cannot be a mere casual and temporary commerce, but must be a contract at least extending to such purposes of a more permanent nature, in the intention of the parties.

The contract, thus formed in the state of nature, is adopted as a contract of the greatest importance in civil institutions, and it is charged with a vast variety of obligations merely civil. Bights of property are attached to it on very different principles in different countries ............ In most countries it is also clothed with religious rites, even in rude societies, as well as in those which are more distinguished for their civil and religious institutions."

_________ 

தேசிய அப்பீல் கோர்ட்டுகள் வேண்டுமா?

National Court of Appeal
“தேசிய அப்பீல் கோர்ட்டுகள்” (இந்தியாவில் வருமா?)
அமெரிக்காவின் சட்டதுறையில் கோர்ட்டுகள் வித்தியாசமாகவே இருக்கும்; அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாவட்ட அளவில் உள்ள கோர்ட்டுகள் உள்ளன; அதை அடுத்து அவர்கள் அப்பீல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், சர்க்யூட் கோர்ட்டுக்குத்தான் (Circuit Court) போகமுடியும். அந்த மாநிலத்தில் உள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடியாது; இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஐகோர்ட் என்னும் உயர்நீதி மன்றம் உள்ளது; ஆனால் அமெரிக்காவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சுப்ரீம் கோர்ட் உள்ளது; அது மாநில சுப்ரீம் கோர்ட் ஆகும்; ஆனால் இந்தியாவில் அதற்குப் பெயர் ஐகோர்ட். அதாவது மாநில ஐகோர்ட் ஆகும்;
சுப்ரீம் கோர்ட்:
இந்தியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட் மாதிரியே, அமெரிக்காவில் இருக்கும் சுப்ரீம் கோர்ட்டானது மொத்த அமெரிக்க நாட்டின் சுப்ரீம் கோர்ட் ஆகும்; அதை “அமெரிக்க சுப்ரீம் கோர்ட்” என்பர். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கும், இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமே ஒன்பது நீதிபதிகள்தான்; அங்கு அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் சிக்கல்களை மட்டுமே விசாரனை செய்வர்; தனி மனிதனின் சிவில், கிரிமினல் அப்பீல் வழக்குகளை விசாரிக்க மாட்டார்கள்; ஆனால் இந்தியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில், அரசியலமைப்பு சட்டச் சிக்கல்கள், தனி மனிதனின் சிவில் அப்பீல், கிரிமினல் அப்பீல் வழக்குகள் இவைகளை எல்லாம் விசாரிப்ப்பார்கள்;
அமெரிக்க சர்க்யூட் கோர்ட் முறை:
அமெரிக்காவில், மாநில சுப்ரீம் கோர்ட்டும் அரசியலமைப்பு சட்டங்களை மட்டும் விசாரிக்கும்; தனி மனித சிவில், கிரிமினல் அப்பீல் வழக்குகளை விசாரிக்காது; அதற்கென, தனியே சர்க்யூட் கோர்ட் முறை என்று ஒருவகை கோர்ட்டுகள் உண்டு; அதாவது, இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு ஒரு சர்க்யூட் கோர்ட் முறை இருக்கும்; மொத்த அமெரிக்காவுக்கும் மொத்தம் 13 சர்க்யூட் கோர்ட்டுகள் உள்ளன. அந்த மாநிலத்தின் மாவட்ட கோர்ட்டுகளிலிருந்து வரும் எல்லா சிவில், கிரிமினல் அப்பீல் வழக்குகளை எல்லாம் இந்த சர்க்யூட் கோர்ட்டே விசாரனை செய்யும்; இந்த சர்க்யூட் கோர்ட் தீர்ப்புக்கு மேல், வேறு எங்கும் அப்பீல் போக முடியாது; அதுவே கடைசி; மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கும் போக முடியாது; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கும் போக முடியாது; இப்படிப்பட்ட முறையில், வழக்குகளை எளிதில் குறைந்த காலக் கெடுவுக்குள் ஒரு வழக்கின் முடிவு தெரிந்துவிடும் என்பது சந்தோஷமே!
இந்தியாவில் இப்போது நேஷனல் அப்பீல் கோர்ட் முயற்சி:
அமெரிக்காவில் உள்ளதைப் போல, ஏன் இந்தியாவில் கொண்டுவரலாமே என்று இப்போதுள்ள சட்ட மேதைகள் நினைக்கிறார்கள்; மாநில ஐகோர்ட்டுக்கும், இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்கும் வேலைப்பழு கண்டிப்பாக குறையும்; மக்களுக்கு சீக்கிரம் தீர்ப்பும் கிடைக்கும்; பிரச்சனைக்கு விடிவும் கிடைக்கும் என நினைக்கிறார்கள்;
இந்த நேஷனல் அப்பீல் கோர்ட் அமைப்பது பற்றி, இன்று இந்திய சுப்ரீம் கோர்ட்டில், சென்னை வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்; அந்த வழக்கை விசாரிப்பதற்காக, அரசியலமைப்பு பென்ஞ் அமைக்கப்பட்டுள்ளது; அதன் அடுத்த விசாரனை ஏப்ரல் 4ல் வருமாம்; எதிர்பார்ப்போம் நல்ல தீர்ப்பை!
**