Wednesday, June 13, 2018

சிவகிரி எஸ்டேட் வழக்கு


மெட்ராஸ் எஸ்டேட் அபாலிஷன் ஆக்ட் 26/1948-ன் படி எஸ்டேட்டுகளை எல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டு, அதற்குறிய நஷ்ட ஈட்டை கொடுத்தது. சிவகிரி எஸ்டேட் என்று ஒன்று அப்போது இருந்தது. அதை 3.1.1951-ல் இந்தச் சட்டத்தின்படி அரசு எடுத்துக் கொண்டு, அதற்குறிய நஷ்ட ஈடாக ரூ.7,899/-ஐக் கொடுக்க அரசு ஒப்புக் கொண்டது.
சிவகிரி எஸ்டேட்டின் அப்போதைய ஜமின்தாராக வரகுணபாண்டியன் இருந்தார். இப்படிப்பட்ட எஸ்டேட்டுகள், அரச பதவிகளைப் போல மூத்த மகனே சொத்தின் உரிமையாளராக வருவார். மற்றவர்கள், அவரின் தயவில் இருந்து வருவார்கள். இதை இம்பார்ஷியல் எஸ்டேட் என்று சொல்வார்கள். அதாவது ஜமின்தாரின் பிள்ளைகள் எல்லோருக்கும் பங்கு கிடைக்காது. மூத்த மகனே அடுத்த ஜமின்தாராக வருவார்.
இந்த மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் மற்றும் ரயத்துவாரி மாற்றம்) சட்டம் 1948-ன்படி (ஆக்ட் 26/1948), அந்த எஸ்டேட்டை அரசாங்கம் எடுத்துக் கொள்வதால், அதற்கு கிடைக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையில், முதலில் கடன்காரர்களுக்கு சேரவேண்டிய கடனைக் கொடுப்பார்கள். மீதி உள்ள தொகையில் ஐந்தில் ஒரு பாகத்துக்கு மிகாமல் உள்ள தொகையை, எஸ்டேட்டின் ஜீவனாம்சம் பெற வேண்டியவர்களுக்கு கொடுப்பார்கள். மீதியை வாரிசுகள் பிரித்துக் கொள்வார்கள்.
சிவகிரி எஸ்டேட்டை அரசாங்கம் 3.1.1951-ல் எடுத்துக் கொண்டது. அப்போது சிவகிரி எஸ்டேட்டின் ஜமின்தார் வரகுணபாண்டியனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள் அதில் இரண்டு மகன்கள், அவரின் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்கள். மூன்றாவது மகன், அவரின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவர். இது இல்லாமல், அவர், செல்லப்பாப்பாள் என்ற ஒரு வைப்பாட்டியை நிரந்தரமாக வைத்திருந்தார். அந்த வைப்பாட்டி மூலம் இரண்டு மகன்கள் உண்டு.
பொதுவாக இப்படிப்பட்ட ஜமீன் சொத்துக்களை அரசாங்கம் எடுத்து, அந்த சொத்துக்களை அனுபவித்து வரும் ரயத்துவாரி உடைமையாளர்களுக்குக் கொடுக்கும்போது, அதற்காக நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்கும்போது, அதை சொத்தின் உரிமையாரும் (ஜமின்தாரும்), அவரின் மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் அடைவார்கள்.
சிவகிரி எஸ்டேட்டில் கிடைக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையில், ஜமின்தார் வரகுணபாண்டியன், மற்றும் அவரின் மூன்று மகன்கள் உட்பட, மொத்தம் நான்கு பேர்களுக்கும் தலா நான்கில்-ஒரு பங்கு உரிமை உண்டு. மற்றவர்கள் ஜீவனாம்ச தொகையாக ஒதுக்கிய தொகையில் மட்டுமே பங்கு பெற முடியும். வாரிசாக வர மாட்டார்கள்.
இதற்கிடையில் ஜமின்தார் வரகுணபாண்டியன் 16.8.1955-ல் இறந்து விட்டார். அவரின் நான்கில் ஒரு பங்கு பாகமானது, அவரின் மகன்களுக்கே போய் சேரும்.
இதற்கிடையில், ஜமின்தாரின் மூத்த மனைவியின் இரண்டு மகன்களும், அவர்களுக்கு இருந்த உரிமையை, சுப்பிரமணிய ஐயர் மற்றும் முத்துசாமி ஐயர் ஆகிய இருவருக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள்.
இதில், ஜமின்தாரின் இரண்டாவது மனையின் ஒரே மகனான குட்டி ராஜா, அரசாங்கம் இந்த சட்டம் கொண்டுவந்த பின்னர் பிறந்தவர் ஆவார்.
எனவே ஜமின்தாரின் மனைவியும், மூன்ற மகன்களும், ஜமின்தார் பாகத்தில் தலா ஒரு பங்கு பெறுவார். ஜமின்தாரின் மூத்த மனைவி, ஜமின்தாரின் பங்கில் பங்கு கேட்கிறார். அதில் ஜமின்தாரின் வைப்பாட்டி மகனை ஒரு பார்ட்டியாக சேர்க்கவில்லை.
இவையல்லாமல், ஜமின்தாரின் வேறு இரண்டு மகன்களும் பங்கு கேட்கிறார்கள். அவர்கள் சட்டப்படியான மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் இல்லை.
ஜமின் சொத்தில், ஐந்தில் ஒரு பங்கு ஜீவனாம்ச பெறுபவர்களுக்கு போய் சேரும். மீதியுள்ளதில், ஐந்தில் மூன்று பங்கு, மூன்று மகன்களுக்குப் போய் சேரும். மீதியுள்ள ஐந்தில் ஒரு பங்கு (இறந்த ஜமின்தாரரின் பங்கு) மற்ற வாரிசுகளுக்குப் போய் சேரும்.
ஆனால், வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கு பங்கு இல்லை என்பது மற்ற மகன்களின் வாதம்.
ஆனால், இறந்த ஜமின்தாரின் ஐந்தில் ஒரு பங்கு, அவரின் இறப்பிற்கு பின்னர் கிடைக்கும் இந்தப் பங்கு, அவரின் தனிச் சொத்தாக கருத வேண்டும் என்பது அப்போதைய சட்டம். அது ஜமின்தார் தனிச் சொத்தாக (ஐந்தில் ஒரு பங்கு மட்டும்) இருப்பதால், அதில் சட்டத்துக்கு புறம்பாக பிறந்த வைப்பாட்டியின் மகன்களுக்கும பங்கு உண்டு என்பது அப்போதைய சட்டம்.
எனவே, ஜமின்தாரின் ஐந்தில் ஒரு பங்கு சொத்து, அவரின் எல்லா மகன்களுக்கும் கிடைக்கும் என தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கின் விபரம்: V.S.Subramania Iyer and another Vs. Minor Sangili Veerappa, (1960) 2 MLJ 102  என்ற சட்டத் தொகுப்பில் உள்ளது.
**