Tuesday, December 31, 2013

ESCROW

ESCROW

If an instrument is delivered to take effect on the happening of a specified event or upon condition that it is not to be operative until some condition is performed pending the happening of that event or the performance of the condition the instrument is called an escrow.

A deed – after it is written and signed and /or sealed - is required to be delivered to the person in whose favour it is executed.
If not delivered all the rest is to no purpose.

A deed takes effect not from the date it bears but from the date of delivery.
Delivery signifies the handing over of something, for instance, land or an intangible interest in it which could not by physically transferred by hand as a chattel could do.

Date:
Where a deed bears no date – that must be construed as delivery.
But if the deed bears a sensible date – it must be the date of that deed and not that of the delivery.

In an attempted delivery- three possibilities
1)   No deed may be delivered - unconditionally

2)   No deed may be delivered – subject to a certain condition being complied with, until which time the grantor may revoke or reverse the deed. (If this occurs the document is not a deed, it is a nullity)

3)   The deed may be delivered subject to certain conditions or the happening of some event but without any overriding power in the grantor to recall the deed.

This is known as ‘escrow’

Advocate’s Etiquette

Advocate’s Conduct and Etiquette

The Advocate Act 1961 & The Bar Council of India Rules
Sec.49(1)(c) of Advocate Act 1961

“An advocate shall, at all times, comport himself in a manner befitting his status as an officer of the court, a privileged member of the community, and a gentlemen, bearing in mind that what may be lawful and moral for a person who is not a member of the Bar, or for a member of the Bar in his non-professional capacity may still be improper for an Advocate.
Without prejudice to the generality of the foregoing obligation, an Advocate shall fearlessly uphold the interests of his client and in his conduct conform to the rules hereinafter mentioned both in letter and in spirit. The rules hereinafter mentioned contain canons of conduct and etiquette adopted as general guides; yet the specific mention thereof shall not be construed as a denial of the existence of other equally imperative though not specifically mentioned.”
Rule:49: ‘An Advocate shall not be full-time salaried employee of any person, Govt, firm, corporation or concern, so long as he continues to practice and shall, on taking up any such employment intimate the fact to the Bar Council on whose roll his name appears, and shall thereupon cease to practice as an Advocate so long as he continues in such employment.
(Nothing in this Rule shall apply to a Law officer of the Central Govt of a State or of any Public Corporation or body by Statute who is entitled to be enrolled under the rules of his State Bar Council made under sec.28(2)(d) read with sec.24(1) (e) of the Act despite his being a full-time salaried employee.)
Law officer for the purpose of this Rule means a person who is so designated by the terms of his appointment and who, by the said term, is required to act/or plead in courts on behalf of his employer.


Friday, December 20, 2013

Fraud on Court

Fraud on Court
Fraud = “Fraud and justice never dwell together” (frans at jus nunquam cohabitarant).
Chief Justice Edward Coke of England observed, about three centuries ago, that Fraud avoids all judicial acts, ecclesiastical or temporal
No Court or Tribunal can be regarded as powerless to recall its own award if it is proved that it was wangled through fraud or misrepresentation.
It is the settled proposition of law that a judgment or decree obtained by playing fraud on the court is a nullity and ‘non est’ in the eyes of the law.
Such a judgment/ decree granted by the first Court or by the Highest Court have to be treated as a nullity by every Court, whether superior or inferior.
It can be challenged in any court even in collateral proceedings.
Since the fraud affects the solemnity, regularity and orderliness of the proceedings of the court and also amounts to an abuse of the process of court, the Courts have been held to have inherent power to set aside an order obtained by fraud practiced upon that court.
Similarly, where the Court is misled by a party or the Court itself, commits a mistake which prejudices a part, the Court has the inherent power to recall its order.

Tuesday, December 17, 2013

Mortgage means

Mortgage = meaning = It is a French word, which means ‘dead pledge’ (i.e. mort=dead; gage=pledge).

Vivium Vadiam= living pledge: In a mortgage of a property, if the creditor adjusts the mortgaged property’s profits towards principal and interest, it is called ‘vivium vadiam or living pledge.

Morguam Vadium = dead pledge: If the creditor of the mortgage loan adjusts the mortgaged property’s profits towards ‘interest part only’ and the principal is payable, then it is called ‘morgum vadium or dead pledge.

What is immovable property?

What is immovable property?

The General Clauses Act defines: ‘immovable property includes land, benefits to arise out of land & things attached to earth’.

The Transfer of Property Act defines: ‘immovable does not include standing timber, growing crops (exclusive clause).

The Transfer of Property Act defines: ‘attached to earth’ – rooted to earth (like trees); imbedded to earth (like walls, buildings) & attached and so imbedded for the permanent beneficial enjoyment.

As per the Transfer of Property Act – ‘standing timber’ is not immovable – because it is for fire-wood and building materials – such trees would be cut and taken away from the land.

‘attached and imbedded for permanent beneficial enjoyment’ – are immovable or Fixtures (others are movables or chattels)
Chattel become fixture when it is permanently annexed with the land.

Sunday, December 15, 2013

அம்பரீஷன்: (Ambareeshan)

அம்பரீஷன்: (Ambareeshan)
இரண்டாம் நாபாகன் மகன். நபகன் பௌத்திரன். இவன் சுத்த அரி பக்தன். இந்த அம்பரீஷன் துவாதசி விரதத்தை அநுஷ்டித்து வரும் நாளில் ஒருநாள் துர்வாச முனிவர் அவனிடம் சென்று இன்றைக்கு உன்னிடத்திலே போஜனம் என்று சொல்லி  யமுனா நதிக்கு ஸ்நானம் செய்ய போனார். அவ்வாறு போனவர் வர தாமதம் ஆனது கண்டு, விரத முகூர்த்தம் (விரத நேரம்) தப்பிவிடப் போகிறதென்று பயந்து ஆசமனத்தை முடித்து விட்டான். அம்பரீஷன் தன்னை மதிக்கவில்லை என்று கண்டுகொண்ட துர்வாசர்  கோபித்து, தனது சடையிலொன்றை எடுத்து அம்பரீஷனை பஸ்பமாக்குக என்று எறிந்தார். இதுகண்ட விஷ்ணு தனது சக்கரத்தை ஏகி துர்வாசரின் சடையை எரித்துவிடுமாறு ஏவினார். இதைகண்ட துர்வாசர் தப்பித்து ஓட, விஷ்ணு சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. கடைசியில் முனிவர் பிரமாதி தேவர்களிடம் அடைந்தார். அவர்கள், இதை அம்பரீஷனால் மட்டுமே தடுக்க முடியும் என யோசனை சொன்னார்கள். பின்னர் அம்பரீஷனிடம் கெஞ்சினார். அவன் சக்கரத்தை தோத்தரித்து தடுத்தான். 

அப்பூதியடிகள்: (Apputhi Adigal)

அப்பூதியடிகள்:
இந்த நாயனார் திங்களூரில் பிறந்தவர். திருநாவுக்கரசு நாயனாரது பெருமைகளைக் கேள்விப்பட்டு, அவரைக் காண விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், திருநாவுக்கரசே நேரடியாக அங்கு வர, அதுகண்ட அப்பூதியடிகள் அவரை உபசரிக்கும் பொருட்டு, மகனை அனுப்பி சாப்பாட்டு இலை பறித்துவர சொல்ல, அங்கு சென்ற மகனை நாகம் கடித்து இறக்க, அதை மறைத்து திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாற, அவனையும் தம்முடன் உணவருந்த அழைக்க, பின்னர் உண்மை தெரிந்து உயிர் கொடுத்து, அப்பூதி நாயனாரின் பக்தியை மெச்சி போனார். 

Tuesday, December 10, 2013

பகவத்கீதை பிறந்த கதை (Who told the story of Bagavad Gita)

பகவத் கீதை பிறந்த கதை:
பரசுராமனுடைய மகன் வியாச முனிவர். வேதங்களை கொடுத்தவர் இந்த வியாச முனிவர்தான். இவர்தான் மகாபாரதம் என்னும் இதிகாசத்தை கொடுத்தவர். இந்த வியாச முனிவர், மனித தர்மத்தை விளக்கும், மனிதனின் வாழ்வுக்கு பின்னர் என்னவாக ஆவோம் என்பதை விளக்கும், ஒரு அருமையான படிப்பினை கதையை மனதில் யோசித்து வைத்துள்ளார். அதை வேகமாக எழுதக்கூடிய ஒருவரிடம் சொல்லி எழுத வேண்டும் என நினைத்தாராம். உடனே படைக்கும் தேவனான பிரம்மாவின் ஞாபகம் வருகிறது. அவரை நினைத்து அழைக்கிறார். அவர் நேரில் வந்து, இந்த வேலைக்கு மிகச் சரியானவர் கணபதி தான் (பிள்ளையார்) என்று சொல்கிறார். எனவே வியாசர், கணபதியை வணங்கி அழைக்கிறார். அவர் நேரில் வந்தவுடன், அவரிடம் இதை சொல்கிறார். ஆனால், கணபதி ஒரு நிபந்தனையுடன் எழுத ஒப்புக் கொள்கிறார். “நான் எழுதும் போது தடையில்லாமல் சொல்ல வேண்டும்” இதுதான் நிபந்தனை. அதற்கு ஒப்புக் கொண்ட வியாசர், அவரும் ஒரு நிபந்தனையை கேட்கிறார். கணபதி அவ்வாறு வேகமாக எழுதும்போது அதன் அர்த்தத்தை உணர்ந்து எழுத வேண்டும் என்கிறார். அதற்கு கணபதியும் சம்மதித்து எழுதிக் கொடுக்கிறார். இது பின்னர் வியாச முனிவரின் மகனுக்கு இந்த கதை சொல்லப்பட்டு, நாரதர் முனிவரால் வழிவழியாக சொல்லப்பட்டு, பின்னர், பரீச்சித் என்ற மன்னனின் மகன் ‘ஜனமேஜய’ என்ற மன்னனின் அரண்மனையில் பல முனிவர்களுக்கு சொல்லப் பட்டது.

அஸ்வினிதேவர் Asvini Devar (The Great Twin Doctors)

அசுவினிதேவர்:
சூரியன் பாரியாகிய (மனைவியாகிய) வடவாரூபம் பெற்ற சௌஞ்ஞா தேவியுனுடைய நாசியில் பிறந்தவர்கள் இருவர். இருவரும் மிக்க அழகுள்ளவர்கள். இருவரும் தேவ-மருத்துவர்கள். இவர்கள் ஒரே இடத்தில் வசிக்காமல் எங்கும் சென்று, ஔஷதம் (Medicine), சஸ்திரம் (சத்திரச் சிகிச்சை என்னும் Surgery) என்னும் இருவகை வைத்தியத்திலும் அற்புதம் ஏற்படுத்துபவர்கள். 

ஒருமுறை இவர்கள் மிகவும் அழகிய பெண்ணான சுகன்னிகை என்பவளையும் அவளுக்கு விதிவழி வாய்த்த அவளின் கண்தெரியாத கணவன் சியவனனையும் பார்த்து, ‘இவனை நீ ஏன் மணந்தாய்?’ என கேட்டனர். அதற்கு அவள், உங்களிடம் உள்ள குற்றத்தை விட்டு, ஏன் என் குற்றத்தை ஆராய்கிறீர்கள்? என்று பதிலுக்கு கேட்டாள். எங்கள் குற்றமென்ன என்று கேட்டனர். நீங்கள் உங்களின் தேவமருத்துவம் மூலம் என் கணவரின் கண்ணுக்கு பார்வையை கொடுத்தீர்களானால், உங்கள் குற்றம் என்ன என்று நான் சொல்வேன் என்றாள். 

இதற்கு சம்மதித்து, அவள் கணவனின் கண் பார்வையை சரிசெய்து கொடுத்துவிட்டு, இப்போது, ‘நாங்கள் செய்த குற்றம் என்ன?’ என்று கேட்டனர். அதற்கு அவள், ‘நீங்களோ தேவ-மருத்துவர்கள். ஆனால், உங்களை யாகத்தில் வைத்து கொண்டாடாததற்கு என்ன காரணம் என்று கேட்டாள். இது கேட்டு வெள்கிய (வெட்கமடைந்த) அசுவினிதேவர் அவளது அறிவை வியந்து வாழ்த்தினர்.  

இவளின் கணவன் சியவனன் இவர்களின் நன்றியை மறவாமல், அவன் மாமன் சரயாதியை ஒரு யாகம் செய்யச் சொல்லி, அதில் இந்த தேவ-மருத்துவர்களான அசுவினி தேவர்களை கலந்து கொள்ளச் செய்து மரியாதை செய்தான். இது தெரிந்த இந்திரன் சினம் கொண்டு தனது சக்கிராயுதத்தை எடுத்தான். ஆனால் அசுவினிதேவர் அவனுக்கு கையிலே சோர்வு வாத நோயை உண்டாக்கினார். இதை தீர்க்கும்படியும் அதனால் சமரசமாக செல்வதாக இந்திரன் கேட்டுக் கொண்டான். அசுவினிதேவர் இந்த நோயை நீக்கி,  அதுமுதல் தேவர்களோடு சரிசம மரியாதை பெற்றார்கள்.

அவர்களின் மருத்துவ நூலும் அறிவும் நமக்குக் கிடைக்காதது பெரிய இழப்பே!

அகலிகை Agaligai (The Stone Lady)

அகலிகை: Agaligai (a Stone Lady)
முதற்கலன் மகள். கௌதமர் மனைவி. இவர் அழகைக்கண்டு தேவேந்திரன் மயங்கி அவரை அடைய நினைத்து, கௌதமரின் ஆசிமம் சென்று சேவல் உருவில் கூவ, விடிந்ததாக நினைத்த கௌதமர் ஆற்றங்கரைக்கு சென்றார். அப்போது தேவேந்திரன் கெட்ட எண்ணத்துடன் கௌதமர் போல உருமாறிய தேவேந்திரனை, அவரின் கணவர்தான் என நினைத்த அகலிகையை வஞ்சித்து அடைந்தான். இதை அறிந்த கௌதம முனிவர் தேவேந்திரனில் உடல் முழுவதும் ஓட்டைகளாகும்படி சபித்தார். மனைவி அகலிகையை கல் பாறையாக ஆகும்படி சபித்தார். வெகுகாலம் கல்லாகவே இருந்து, ஸ்ரீராமர் அந்தவழியே வந்தபோது அவரின் திருப்பாதம் பட்டு மீண்டும் பெண்ணானாள்.
இதில் அகலிகையின் தவறென்ன? ஏன் கணவர் இவளையும் தண்டிக்க வேண்டும். தவறித் தவறு செய்பவருக்கும் தண்டனையா? 

அக்கினி FIRE

அக்கினிதேவன் (அக்கினி):
பிரம்மாவின் புத்திரன் என்பர் ஒருசிலர். கசியபன் புத்திரன் என்பர் ஒருசிலர். இவனுக்கு கால் மூன்று. நாக்கு ஏழு. முகம் இரண்டு. அர்ஜூனனுக்கு ‘காண்டீவம்’ கொடுத்தது இந்த அக்கினி தேவரே. 

அக்கினி இருவகைப் படும். 1) திரேதாக்கினி, 2) பாஞ்சாக்கினி. இதில் திரேதாக்கினி என்பது, ‘ஆகவனீயம், தக்ஷிணாக்கினி, காருகபத்தியம், என மூன்று பிரிவுகளை கொண்டது. அவைகள் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வேதியில் வளர்க்கப் படுவன. பஞ்சாக்கினி என்பது மேற்சொல்லிய மூன்றுடன் ‘சவ்வியம்’ ‘அபசவ்வியம்’ என ஐந்து பிரிவுகள் கொண்டது. இவை இரண்டும் ‘ஈசான’ திசையில் வளர்க்கப் படுவன. 

அக்கினியானது, பூதங்களுள் நடுநிலையில் உள்ளது. இது உருவத்துடனும், உருவமில்லாமலும் இரு நிலை உண்டு. விண்ணுலகத்தில் சூரியனிடத்தில் ஜோதியாகவும், மேகத்திலே மின்னலாகவும், பூமியிலே தீயாகவும், சமுத்திரத்திலே வடவையாகவும், ஜீவன்களில் உடலிலே ஜாடராக்கினியாகவும், பிரபஞ்சதிலே வெகு வேகமாக பரவக்கூடியதாவும் இருப்பதாக ரிஷிகள் உணர்ந்துள்ளனர். இந்த அக்கினி மண்டலத்தில் உள்ளவர்களை அக்கினித் தேவர்கள் என அழைப்பர்.