அம்பரீஷன்: (Ambareeshan)
இரண்டாம் நாபாகன் மகன்.
நபகன் பௌத்திரன். இவன் சுத்த அரி பக்தன். இந்த அம்பரீஷன் துவாதசி விரதத்தை
அநுஷ்டித்து வரும் நாளில் ஒருநாள் துர்வாச முனிவர் அவனிடம் சென்று இன்றைக்கு
உன்னிடத்திலே போஜனம் என்று சொல்லி யமுனா
நதிக்கு ஸ்நானம் செய்ய போனார். அவ்வாறு போனவர் வர தாமதம் ஆனது கண்டு, விரத
முகூர்த்தம் (விரத நேரம்) தப்பிவிடப் போகிறதென்று பயந்து ஆசமனத்தை முடித்து
விட்டான். அம்பரீஷன் தன்னை மதிக்கவில்லை என்று கண்டுகொண்ட துர்வாசர் கோபித்து, தனது சடையிலொன்றை எடுத்து அம்பரீஷனை
பஸ்பமாக்குக என்று எறிந்தார். இதுகண்ட விஷ்ணு தனது சக்கரத்தை ஏகி துர்வாசரின்
சடையை எரித்துவிடுமாறு ஏவினார். இதைகண்ட துர்வாசர் தப்பித்து ஓட, விஷ்ணு சக்கரமும்
அவரை விடாமல் துரத்தியது. கடைசியில் முனிவர் பிரமாதி தேவர்களிடம் அடைந்தார்.
அவர்கள், இதை அம்பரீஷனால் மட்டுமே தடுக்க முடியும் என யோசனை சொன்னார்கள். பின்னர்
அம்பரீஷனிடம் கெஞ்சினார். அவன் சக்கரத்தை தோத்தரித்து தடுத்தான்.
No comments:
Post a Comment