இந்து
வாரிசுகளின் சொத்துரிமை
இந்திய
சுதந்திரத்துக்கு முன், பழைய இந்து சட்டமே இருந்தது. அதன்படி, ஒரு இந்து ஆண் ஒரு
சொத்தை வாங்கினால், அவருக்கு ஒரு மகன் பிறந்தவுடன் அவனும் அந்தச் சொத்தில்
பங்குதாரர் ஆகிவிடுவான். அந்த மகனுக்கு ஒரு மகன் (அதாவது பேரன்) பிறந்துவிட்டால்
அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அந்தப் பேரனுக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும்
ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அதாவது சொத்தை வாங்கியவர் உட்பட மகன், பேரன்,
கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறைகளும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவர்.
இதுதான் பழைய இந்து சட்டத்தின் சிறப்பு. அதனால்தான், 'தாத்தா சொத்தில் பேரனுக்கு
பங்குண்டு' என்ற பழமொழியும் வந்தது. எப்போதுமே இந்த நான்கு தலைமுறையும்
அடுத்தடுத்து தொடரும். இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர் (Hindu Coparcenary property). பொதுவாக அதை பூர்வீகச் சொத்து என்று சொல்வோம்.
இந்த மாதிரியான ஆண்வழிச் சொத்துக்களை மட்டும்தான் பூர்வீகச் சொத்துக்கள் என்று
அர்த்தத்தில் குறிப்பிடுவர். (பெண்வழிச்
சொத்துக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லை. அதாவது அம்மாவின் அப்பாவான, நம்
தாத்தா வழியில் கிடைத்த சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் இல்லை.)
1956ல் புதுச்சட்டம்
இந்திய
சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (The Hindu Succession Act 1956) கொண்டுவரப்பட்டு
பெருத்த மாற்றம் செய்யப்பட்டது. இது 17.6.1956 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி
1956க்கு பின் ஒருவர் ஒரு சொத்தை வாங்கினால், அதில் அவரின் மகனுக்கோ, பேரனுக்கோ,
கொள்ளுப்பேரனுக்கோ, பங்கு கிடையாது. அவனும், அவன் பிறந்தவுடன் பங்குதாரர்
ஆகமுடியாது. அந்த சொத்தை வாங்கியவரின் தனிச் சொத்தாகவே (Separate
property or self acquired property)கருதப்படும். அவ்வாறு
சொத்தை வாங்கியவர் இறந்தபின்னர், அவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள்,
இவர்களுக்கு மட்டுமே அந்த சொத்தை சரிசமமாக வாரிசு என்ற முறையில் கிடைக்கும்.
இறந்தவரின் தகப்பனாருக்கு ஒரு பங்கும் கிடைக்காது. (ஒருசில தாசில்தார்கள்,
தவறுதலாக, இறந்தவருக்கு அவரின் தகப்பனாரும் ஒரு வாரிசு என்று வாரிசு சான்றிதழ்
வழங்குகிறார்கள்; இது சட்டப்படி தவறு). இறந்தவரின் தாயார், மனைவி, மகன்கள்,
மகள்கள் என்று யாருமே இல்லை என்றால்தான், இறந்தவரின் தகப்பனார் ஒரே வாரிசாக
வருவார். அவரும் இல்லையென்றால், இறந்தவரின் சகோதரர்கள், சகோதரிகள் (அப்போது
உயிருடன் இருக்கும் சகோதர, சகோதரிகள் மட்டும்) வாரிசாக சொத்தை எடுத்துக்
கொள்ளலாம். அப்படியும் யாரும் இல்லை என்றால், அந்த இறந்த சகோதர, சகோதரிகளின்
வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படியாக
முதல்வாரிசுகள், 2ம் வாரிசுகள் என்று பல வகையுண்டு.
முதல்
வாரிசுகள்: (Class-I Heirs)
Mother, wife, son,
daughter (any children of the pre-deceased son or daughter)
இரண்டாம்
வாரிசுகள் (Class-II Heirs)
First - Father
If no father is
alive- then Brothers, Sisters,
If no brothers or
sisters are alive, then to their children.
புதுச்சட்டத்தில் பூர்வீகச் சொத்து
ஆனால்
17.6.1956க்கு முன் ஒரு இந்து, அவர் கிரயம் வாங்கிய சொத்தையோ, அல்லது அவரின்
தகப்பனார், பாட்டனார் கிரயம் வாங்கிய சொத்தையோ, விட்டுவிட்டு இறந்திருந்தால் அது
பூர்வீகச் சொத்தாகக் கருதப் பட்டு, பழைய இந்துச் சட்டப்படி சொத்தை ஆண்வாரிசுகள்
பங்கிட்டுக் கொண்டு, இறந்தவருக்கு அதில் கிடைக்கும் பங்கில் அவரின் மகன்களும்,
மகள்களும், மனைவியும் ஒரு சிறு பங்கை அடைவார்கள். இந்த முறைப்படி மகள்களுக்கு ஒரு
சிறு பங்கே கிடைத்தது. ஆண்களைப் போன்று பெண்களுக்கு சம பங்கு கிடைக்கவில்லை. எனவே
தமிழ்நாடு அரசு 1989ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதன்படி திருமணம் ஆன
பெண்கள் தவிர மற்ற பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்க சட்டம்
கொண்டுவந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம்
2005ல் மத்திய
அரசு ஒரு பெரிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்து, அதன்படி திருமணம் ஆகியிருந்தாலும்,
ஆகாமல் இருந்தாலும், பெண்களுக்கும், ஆண்களைப் போன்றே சரிசம பங்கு உண்டு என்று
கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே 20.12.2004க்கு முன்னர் பாகம் பிரித்துக் கொண்ட
சொத்துக்கள் தவிர மற்ற பூர்வீகச் சொத்தில் பெண்களும் உரிமை கொண்டாடலாம்.
.
No comments:
Post a Comment