கிறிஸ்தவர்களின்
சொத்துரிமைச் சட்டம்
கிறிஸ்தவர்களின்
சொத்துக்களை இந்திய வாரிசுரிமைச் சட்டம்
1925ன்படி (The Indian Succession Act 1925) பிரித்துக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்களிடையே
பூர்வீகச் சொத்துக்கள் என்று எதுவும் கிடையாது. (இந்துக்களில் மட்டும்தான்
பூர்வீகச் சொத்துக்கள் என்று உள்ளன).
கிறிஸ்தவர்களில் எந்தச் சொத்தாக இருந்தாலும் அது அவர்களின் தனிச் சொத்தே.
எனவே ஒரு ஆண்
கிறிஸ்தவர், தனது சொத்தை விட்டுவிட்டு இறந்தால், அந்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு
அவரின் மனைவிக்குப் போய்ச் சேரும். மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கு அவர்களின்
மகன்கள், மகள்கள் இவர்களுக்கு சரிசமமாகப் போய் சேரும். பேரன், பேத்திகளுக்கு
எந்தப் பங்கும் கிடையாது. (இந்து மத சட்டத்தில்தான் பேரன், பேத்திகளுக்கு
பூர்வீகச் சொத்தில் பங்கு கொடுக்கப்
பட்டுள்ளது).
இதேபோல், ஒரு
கிறிஸ்தவ பெண்மணி , அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரின் கணவருக்கு
மூன்றில் ஒரு பங்கும், மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் மகன்கள்,
மகள்களுக்கு சரிசமமாக போய்ச் சேரும்.
குழந்தைகள்
இல்லையென்றால், வேறு வேறு சட்ட வழிகள் வைத்துள்ளார்கள், அவைகளை எழுதினால்
பலபக்கங்கள் தேவைப்படும்.
இந்த கிறிஸ்தவ
சட்டமான இந்தியன் வாரிசுரிமைச் சட்டமானது 1925ல் இயற்றப்பட்டு இதுவரை அதில்
திருத்தம் செய்யப்படாமல் இருக்கிறது இதன் ஒரு தனிச் சிறப்பு.
ஒருவேளை,
'இந்தியா முழுவதும், எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்படியான ஒரே சிவில் சட்டம்
கொண்டு வர முயற்சித்தால், இந்த சட்டமே எல்லோருக்கும், எல்லா மதத்தினருக்கும்,
பொருத்தமான ஒரு சட்டமும் கூட என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதிலும் கணவர்
சொத்தில் மனைவிக்கும், மனைவி சொத்தில் கணவருக்கும் பாதி பங்கு கொடுத்தால், எந்த
குழப்பமும் இருக்காது, இதுவே நியாயமானதும்கூட.
.
No comments:
Post a Comment