Saturday, August 16, 2014

Advocate's Privilege

வக்கீலின் தொழில் உரிமை (Advocate's Privilege)
Advocacy is a fundamental human right long established in the common law. It is necessary corollary of the right of any person to obtain skilled advice about the law. Such advice cannot be effectively obtained unless the client is able to put all the facts before the advisor without fear that they may afterwards be disclosed and used to his prejudice.

வக்கீலிடம் உண்மையை  பேசவேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையைச் சொன்னால்தான், வக்கீல் அவருக்குச் சரியான ஆலோசனையைக் கொடுக்க முடியும். கொலை செய்தவன் அதை ஒப்புக் கொண்டு, அவனின் வக்கீலிடம் மட்டும் உண்மையைச் சொல்ல வேண்டும். அந்த வக்கீல், அதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. போலீஸ் கேட்டாலும் சொல்ல தேவையில்லை. இந்த உரிமைக்கு /சலுகைக்கு பெயர்தான் 'வக்கீலின் பிரிவிலெஸ்-Advocate's Privilege. இதன்படி ஒரு வக்கீல், தனக்கும், தன் கட்சிக்காரனுக்கும் நடக்கும் எந்த ரகசிய உரையாடலையும், யாருக்கும் சொல்லத் தேவையில்லை; ஏன் கோர்ட்டுக்குக்கூட சொல்லத் தேவையில்லை; அதைச் சொல்லும்படி யாரும் அந்த வக்கீலைக் கட்டாயப் படுத்த முடியாது; போலீஸ் கூட கேட்க முடியாது.


ஆனாலும், இந்தச் சலுகையானது, அந்த வக்கீலுக்கும்-அவரின் கட்சிக்காரருக்கு மட்டும் நடக்கும் பேச்சுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதைத் தாண்டி உள்ள குற்ற நடவடிக்கைகளில் வக்கீல் ஈடுபட்டால், இந்தச் சலுகை கிடையாது.
.

Friday, August 15, 2014

Sri Sai Baba

Sri Sai Baba Shirdi
Om shree sayee naadhaaya nama.
Om shree laxmi naaraayanaaya nama.
Om shree krishna raama shiva  maaruthyaadhi rupaaya nama.


Thursday, August 14, 2014

இந்திய சுப்ரீம் கோர்ட் (Supreme Court of India)

இந்திய சுப்ரீம் கோர்ட் (Supreme Court of India)

(Supreme Court) சுப்ரீம் கோர்ட்டுக்கு Apex Court என்றும்  மற்றொரு பெயர். இந்திய அளவில் மிகப் பெரிய நீதிமன்றம். இதைத்தான் தமிழில் உச்ச நீதிமன்றம் என்கிறோம்.  மாநில அளவில் உள்ள பெரிய நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் (High Court) என்கிறோம். (உயரத்தைக் காட்டிலும் உயரத்தில் இருந்தால் அது உச்சம். அதற்குமேலே உயரமே இல்லை.)

இந்திய சுப்ரீம் கோர்ட்டானது, 1950ல் இந்தியா ஜனநாயக நாடாக ஆனபோது இதுவும் உருவானது. சரியான தேதி: 28 ஜனவரி 1950. டெல்லியில் உள்ள திலக் மார்க் என்ற பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சுப்ரீம் கோர்ட் வருவதற்கு முன்னால், 1935 முதல் டெல்லியில் 'சுப்ரீம் கோர்ட் போல' இயங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு பெயர் The Federal Court of India பெடரல் கோர்ட் ஆப் இந்தியா. இதில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவாக இருந்தது. அதற்குமேல் அப்பீல் போகவேண்டும் என்றால் பிரைவி கவுன்சில் என்று லண்டனில் இருந்தது, அங்குதான் அப்பீல் போகவேண்டும். அதன் பெயர் The Judicial Committee of the PRIVY COUNCIL in London. (JCPC). இதுதான் பிரிட்டீஸ் ஆண்ட எல்லா நாடுகளுக்கும் உச்சநீதி மன்றமாக இருந்து வந்தது. இப்போது இதைவிட்டு நாம் விலகி விட்டோம். நமக்கென்று ஒரு சுப்ரீம் கோர்ட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.

 இப்போதையஇந்திய சுப்ரீம் கோர்ட்:
சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. (தற்போதுள்ள சட்ட நிலவரப்படி). நேற்று (14.8.2014ல்) நான்கு நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டபின், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இன்னும் ஒரு நீதிபதி பதவி காலியாக உள்ளது. (சுப்ரீம் கோர்ட் ஆரம்பித்தபோது அதன் எண்ணிக்கை மொத்தம் 8 நீதிபதிகளே).  இங்கு நீதிபதிகளாக இருப்பவர்கள் அவர்களின் 65 வயதுவரை அந்தப் பதவியில் இருக்கலாம். (ஆனால் மாநிலத்திலுள்ள ஐகோர்ட் நீதிபதி, தனது 62வது வயதுவரை அந்த பதவியில் இருக்கலாம்).

ஐகோர்ட் நீதிபதிகளாக இருப்பவர்களைத்தான் , பொதுவாக, சுப்ரீம் கோர்ட் பதவிக்கு உயர்த்துவார்கள். ஆனாலும் இதுவரை நான்கு வக்கீல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நேரடியாகவே உயர்த்தி உள்ளார்கள். இவர்கள் மிகச் சிறந்த வக்கீல்கள் என்ற பெருமையால் அந்த உயர்வைப் பெற்றார்கள்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள்:


சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கே சொந்தமான Supreme Court Reports  என்ற பத்திரிக்கை வெளியீடு மூலம்தான் வெளியிடுகிறார்கள். இது அல்லாமல் வேறு பல தனியார் பத்திரிக்கை வெளியீடுகளும் காலங்காலமாக இயங்கி வருகின்றன.
.

Tuesday, August 12, 2014

Power of Attorney

The Legality of the Power of Attorney Deeds in India
  1. Every document shall be presented at the proper registration office by the person executing it or the person claiming such document. (Ex. In a Sale deed, the 'Seller' is the person' executing' the document; and the 'Buyer' is the person 'claiming' the document). 
  2. In exceptional cases, the executant's power agent may present the document for registration.
  1. Such a power of attorney deed shall be duly executed and authenticated one .
(Section 32 of Indian Registration Act 1908)

What is mean by the word 'duly authenticated?'

  1. If the Principal is residing in India, he shall execute the power of attorney deed before the Sub-Registrar of his local area and get it authenticated.

  1. If the Principal is residing 'OUT OF INDIA' such power of attorney shall be executed and authenticated before a Notary Public or any Court, Judge, Magistrate, Indian Consul or Vice Consul or representative of Central Govt. 
(If the Principal is residing in the countries like Canada, all States of USA, Australia, Singapore, the Principal may get the authentication from a Notary Public (lawyer) of that country; If the Principal is residing in the countries like, UAE, Saudi Arabia, Omen, Egypt, etc. (where there is no such practice of Notary-Public lawyer system), the Principal may get the authentication from the Indian Consul office.

  1. Exemption: if the Principal who is residing in India - but is in Jail (or) is unable to  attend before the Registrar due to his inconvenience or his bodily infirmity, his presence before the Registrar may be exempted from personal appearance. (Instead, the Registrar has any doubt, he himself shall go to his place and verify such fact).

All the above power of attorney deeds, authenticated as stated above, are all valid on production of its original. No further proof is necessary.
(Section 33 of Indian Registration Act 1908)
 .

Domicile

DOMICILE

In Re Fuld [1968] P 675 Scarman J explained that the legal relationship between a person and the legal system of the territory which invokes his personal law is based on a combination of residence and intention.

Everybody has a domicile of origin, which may be supplanted by a domicile of choice.

He noted two particularly important features of domicile which are relevant to this case:

"First, that the domicile of origin prevails in the absence of a domicile of choice, i.e., if a domicile of choice has never been acquired or, if once acquired, has been abandoned.

Secondly, that a domicile of choice is acquired when a man fixes voluntarily his sole or chief residence in a particular place with an intention of continuing to reside there for an unlimited time." [As pointed out by Buckley LJ in IRC v. Bullock [1976] 1 WLR 1178 at 1184H Scarman J's formulation "for an unlimited time" requires some further definition].

After reviewing the more important authorities and noting the need in each particular case for "a detailed analysis and assessment of facts" in relation to the subjective state of mind of the individual in question, Scarman J stated the law in terms which this court should expressly approve (page 684F-685D)

"(1) The domicile of origin adheres unless displaced by satisfactory evidence of the acquisition and continuance of a domicile of choice;

(2) a domicile of choice is acquired only if it is affirmatively shown that the propositus is resident in a territory subject to a distinctive legal system with the intention, formed independently of external pressures, of residing there indefinitely. If a man intends to return to the land of his birth upon a clearly foreseen and reasonably anticipated contingency, e.g., the end of his job, the intention required by law is lacking; but, if he has in mind only a vague possibility, such as making a fortune (a modern example might be winning a football pool), or some sentiment about dying in the land of his fathers, such a state of mind is consistent with the intention required by law. But no clear line can be drawn; the ultimate decision in each case is one of fact - of the weight to be attached to the various factors and future contingencies in the contemplation of the propositus, their importance to him, and the probability, in his assessment, of the contingencies he has in contemplation being transformed into actualities.


(3) It follows that, though a man has left the territory of his domicile of origin with the intention of never returning, though he be resident in a new territory, yet if his mind be not made up or evidence be lacking or unsatisfactory as to what is his state of mind, his domicile of origin adheres…."

(Courtesy: <www.Bailii.org> England and Wales Court of Appeals [2010] EWCA Civ 335.
.

Sunday, August 10, 2014

மேல்வாரம், குடிவாரம்

மேல்வாரம், குடிவாரம் நிலங்கள்
நிலம் ஒருவருக்கு சொந்தமாய் இருக்கும். குடியான விவசாயி அதில் விவசாயம் செய்து வருவார். விவசாயத்தில் கிடைத்த விளைச்சல் பொருளின் ஒரு பகுதியை அந்த நில உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்.
விவசாயம் செய்யும் குடியானவரின் உரிமை மூன்று விதங்களில் கிடைக்கும். 
1) அடுத்தவருக்கு சொந்தமான நிலத்தை (Landlord), குடியானவர் (Tenant)காலங்காலமாக விவசாயம் செய்து கொண்டுவருவதால் - அவருக்கு விவசாய உரிமை உண்டு. 
2) நிலத்தின் உரிமையாளரே மொத்தமாக ஒரு தொகையை குடியானவரிடம் வாங்கிக் கொண்டு, நிரந்தரமாக விவசாயம் செய்யும் உரிமையைக் கொடுத்திருப்பார்.- அப்போதும் அவருக்கு விவசாய உரிமை உண்டு. 
3) தொடர்ந்து இவ்வளவு காலம் வரை விவசாயம் செய்யும் குடியானவருக்கு இந்த விவசாயம் செய்யும் உரிமை உண்டு என சட்டமும் கொண்டுவரும். -இதன்மூலம் விவசாயிக்கு இந்த விவசாய உரிமை வரும். இதுதான் Tenancy rights.
நிலத்தின் (மண்ணில்) நிலத்துக்குச் சொந்தக்காரருக்கு உள்ள உரிமையை "மேல்வாரம்" (Melvaram) என்று சொல்வர். விவசாயி அந்த நிலத்தில் காலமெல்லாம் விவசாயம் செய்து கொள்ளும் உரிமையை "குடிவாரம்" (Kudivaram) என்று சொல்வர்.
இதில் என்ன சிறப்பு என்றால், இந்த குடிவார உரிமையை கிரயப் பத்திரம் மூலம் மூன்றாம் நபர்களுக்கு விற்பனையும் செய்யலாம். (அந்த சொத்தை விற்பனை செய்வதல்ல; விவசாய உரிமையை விற்பனை செய்வது; அதேபோல அந்த நிலத்தின் (மண்ணின்) சொந்தக்காரரும் அவரின் மேல்வார உரிமையை (மண்ணின் உரிமையை) விற்பனை செய்யலாம். -- ஆக ஒரு சொத்துக்கு இரண்டு உரிமைகள்). இப்போது இப்படியான எந்த பழக்கமும் இல்லை. பின்நாளில், குடிவார உரிமைக்காரருக்கே அந்த நிலத்தை சட்டம் போட்டு சொந்தமாக்கி விட்டது. அவர் இப்போது குடிவார உரிமையாளர் இல்லை; அதற்குப் பதிலாக ரயத்வாரி பட்டாதாரர். (அதாவது உண்மையில் நிலத்தை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பவர் என்று பொதுவான அர்த்தம்).

மதராஸ் சட்டம் 1/1908
மதராஸ் பிரசிடென்சி சட்டம் 1/1908 என்ற சட்டமானது இந்த மாதிரி நிரந்தர குடிவார உரிமைகளை விளக்கியுள்ளது. அதில் எஸ்டேட் நிலங்களுக்கு மட்டும் இந்தச்  சட்டம் பொருந்தும் என்று சொல்லி உள்ளது. எஸ்டேட் என்றால் எது?
"Estate means -- any village of which the land revenue alone has been granted in inam to a person not owning the kudivaram thereof, provided that the grant has been made, confirmed, or recognised by the British Govt or any separated part of such village."

குடிவாரம் (Kudivaram)
குடிவாரம் என்ன என்று எந்தச் சட்டமும் விளக்கம் அளிக்கவில்லை. இருந்தாலும் பிரைவி கவுன்சில் ஒரு வழக்கில் விளக்கம் சொல்லி உள்ளது. (Suryanarayana and ors vs. Patanna and ors in L.R.45 I.A.209). இது ஒரு தமிழ் வார்த்தை என்றும், நிலத்தில் விவசாயம் செய்பவருக்கு வருமானத்தில் ஒரு பங்கு உள்ளதை குறிக்கும் என்றும் (Cultivator's share in the produce of land). அந்த நிலத்தின் சொந்தக்காரர் வாங்கும் பங்கு நிலத்துக்கான பங்கு என்பதால் அதை மேல்வாரம் என்பர்.
.


ஷேக்கின் தானம் ஏன் செல்லாது?

ஷேக்கின் தானம் ஏன் செல்லாது?
ஷேக் மொகைதீன் சிறுவயதில் நாகூரில் இருந்தார். இவர் லெப்பை சமுதாயத்தை சேர்ந்த முகமதியர். கலந்தர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும்போது, ஒருநாள் கடல்கடந்து பர்மாவுக்கு வியாபாரமாக வந்தவர், இங்கேயே தங்கி விட்டார். மனைவி நாகூரில். இவர் பர்மாவில். இங்கு பர்மாவில் அவருக்கு வட்டித் தொழில் சிறப்பாக கொடிகட்டிப் பறக்கிறது. எப்போதாவது இந்தியா வந்து மனைவியை பார்த்துப் போவார். பர்மாவில் வேறு ஒரு மனைவியை திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவியும் கொஞ்ச காலத்தில் இறந்துவிட்டார்.

இவரின் வாழ்நாளின் கடைசி காலத்தில், 1914ல், ஏதாவது தர்ம காரியம் செய்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. நாகூரில் அதைச் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி, பர்மாவில் உள்ள சில மதிப்புமிக்க நிலங்களை 20.7.1914ல் தானப் பத்திரமாக எழுதி ரிஜிஸ்டர் செய்து வைத்தார். அதில், இந்த நிலங்களில் வரும் வருமானத்தில் ரூ.450/-ஐ நாகூரில் அவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தர்ம காரியங்களுக்கு மூத்த மனைவி செலவு செய்ய வேண்டும் என்றும், மீதியை அவரின் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், மனைவியின் காலத்துக்குப்பின், அவரின் வாரிசுகள் அதேபோல செய்து வரவேண்டும் என்று எழுதியுள்ளார்.
கொஞ்ச காலத்தில் இவர் இறந்து விடுகிறார். இவரின் மூத்த மனைவி கலந்தர் அம்மாள், தானப் பத்திரப்படி சொத்தை எடுக்கப் போகும்போது, வேறு ஒரு கதை.

ஷேக், பர்மாவில் இவர் வீட்டில் வசித்தபோது, அங்கு வீட்டிலிருந்து Tawa Ma Mi தாவா-மா-மி என்ற பெண்ணுடன்  பழக்கம். அதில் அவர்களுக்கு ஒரு மகன். அவன் பெயர் முகமது யூசுப் -Mahommed Eusoof.
இவர்கள் முதல் மனைவிக்கு எழுதிவைத்த சொத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். பர்மாவில் கோர்ட் வழக்கு.

முகமதியர் சட்டம்:
முகமதியர்களின் சட்டப்படி தானம் கொடுக்கும் சொத்தின் சுவாதீனத்தை (Possession of the gifted property) அன்றே ஒப்படைத்துவிட வேண்டும். இல்லை என்றால் அந்த தானம் செல்லாது. அதுபோல இந்த சொத்தை மனைவியிடம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த தானம் செல்லாது என்று பர்மா மனைவியின் வாதம். இதை ஏற்றுக் கொண்ட பர்மாவில் உள்ள மாவட்ட கோர்ட், முதல்மனைவிக்கு எழுதி வைத்த தானப் பத்திரம் செல்லாது என்று தீர்ப்பு.
அப்பீல் பர்மா ஐகோர்ட்டுக்கு.
"சொத்து மாற்றுச் சட்டம் 1882 (The Transfer of Property Act 1882) நடைமுறைக்கு வரும்போது, முகமதியர்களின் தானத்துக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்லப் பட்டுள்ளது. அதாவது, இந்துக்களின் தானத்தில் சொத்தின் சுவாதீனத்தை அன்றே கொடுக்காமல் தள்ளியும் வைக்கலாம், ஏன், பிறக்காத குழந்தைக்குக் கூட சொத்தை எழுதி வைக்கலாம். அது பிறந்து 21 வயதுக்குள் அந்த சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று சொத்து மாற்றுச் சட்டம் சொல்லியுள்ளது; ஆனால் இவைகள் எல்லாம் முகமதியர்களின் தானப் பத்திரத்துக்கு பொருந்தாது. தானச் சொத்தை அன்றே ஒப்படைத்து விடவேண்டும். இல்லையென்றால் அந்த தானமே செல்லாது."
இந்த சொத்துரிமைச் சட்டத்தின் இந்த பிரிவு இங்கு பர்மாவுக்கு அங்குள்ள அரசு அமலுக்குக் கொண்டுவரவில்லை என்ற காரணத்தைக் கூறி பர்மா ஐகோர்ட் முதல் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பை கூறியது.
அதை எதிர்த்து லண்டன் பிரைவி கவுன்சில் கோர்ட்டில் அப்பீல்:
பிரைவி கவுன்சில், "இந்த சொத்தின் ரெவின்யூ பெயர் மாற்றத்தில் மனைவி பெயர் உள்ளது. அவரும் காசிம் என்பவரை பவர் ஏஜெண்டாக நியமித்து இந்த வேலைகளைச் செய்துள்ளார். அவருக்கு சொத்தின் சுவாதீனம் கிடைத்துவிட்டது என்ற வாதங்களையெல்லாம்  நம்பாமல் அப்பீல் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

இன்றும் முகமதிய சட்டம் அதுவே. "தானப் பத்திரம் எழுதிப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882ல் குறிப்பிட்டுள்ள தானம் என்பது முகமதியர்களுக்கு செல்லுபடியாகாது. முகமதிய சட்டப்படி, ஒரு சொத்தை தானம் கொடுக்க நினைத்தால், சுவாதீனத்தை (Possession of the gifted property should be given on the same day (in presenti gift) அன்றே கொடுத்துவிட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. ஆனால் தானப் பத்திரம் எழுதிக் கொள்ளத் தேவையில்லை. இன்றும் அப்படியேதான் அந்தச் சட்டம் உள்ளது.
Privy Council Appeal No.95 of 1925 dated 1.11.1926
Ma Mi and another vs. Kallader Ammal.

.

Saturday, August 2, 2014

இந்து மதமும், 2-ம் மனைவியும்

இந்து மதமும், 2-ம் மனைவியும்:

பழைய இந்து மதக் கோட்பாட்டின்படி, ஒரு இந்து ஆண், எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு கட்டுப்பாடும் கிடையாது. இந்த மனைவிகள் இல்லாமல், தனியே வேறு பெண்களையும் திருமணம் செய்து கொள்ளாமல் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.அவர்களை 'அபிமான பாரியாள்' என்று சொல்லிக் கொள்வர். ஒரு இந்து ஆண், எத்தனை மனைவிகள், எத்தனை அபிமான பாரிகள் வைத்துள்ளாரோ அவ்வளவுக்கு அவருக்கு சமுதாயத்தில் கௌரவம் கிடைக்கும். இந்த மாதிரியான பழைய பழக்க வழக்கம் 1955 வரை தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும், திருமணம் செய்து கொண்ட மனைவிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே, சட்டபூர்வ குழந்தைகள்  ஆகும். இவர்களே சொத்தில் பங்கு பெற உரிமையுள்ளவர்கள். வைப்பாட்டி, அபிமான பாரிகள் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை சொத்தில் பங்கு கிடையாது. அவரவர் தாயின் சொத்தில் மட்டும் பங்கு உண்டு.

மதராஸ் பிரசிடென்சி ஒரு சட்டம் கொண்டு வந்தது.
The Madras provincial enactment i.e. Madras Hindu (Bigamy Prevention and Divorce) Act,1949 (Act 6/1949) which introduced strict monogamy among Hindus even prior to HM Act, 1955.

The Bombay presidency enacted the Bombay Prevention and Divorce Act, 1946 (Act 25/1946), which introduced monogamy among Hindus of that province.

புதிய இந்து திருமணச் சட்டம் 1955 (The Hindu Marriage Act 1955):
இந்தப் புதிய சட்டம் 1955ல் கொண்டுவரப்பட்டது. அது முதல், ஒரு இந்து ஆண், ஒரு பெண்ணைத் தான் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. 'ஒருவனுக்கு ஒருத்தி.' ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, வேறு ஒரு பெண்ணை, மனைவியாக திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படித் திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பெண், மனைவி என்ற அந்தஸ்தை சட்டபூர்வமாகப் பெற முடியாது. இரண்டாம் திருமணம் செய்வது குற்றம் என்றாலும், அந்த புகாரை  முதல் மனைவி மட்டுமே கொடுக்க முடியும். வேறு யாரும் கொடுக்க முடியாது. இதனால், சிலர், முதல்மனைவியின் சம்மதம் கிடைத்தால், இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கருதிக் கொண்டு, சம்மதம் பெற்று 2-ம் திருமணம் செய்து கொள்கின்றனர். (முதல் மனைவிக்கு குழந்தையில்லை என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்). (இப்போது இந்தச் சட்டம், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என மாற்றப் பட்டுள்ளது).
இந்தப் புதிய சட்டப்படி, ஒரு மனைவிக்கு மேல் இருக்க முடியாது. (மனைவி இறந்தபின், வேறு ஒரு மனைவியை திருமணம் செய்து கொள்வது சரியே).

ஆனாலும், ஒரு சட்ட குழப்பம் வரும். அதாவது, 1955ல் இந்த புதிய திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு, ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட மற்ற மனைவிகளின் நிலை என்ன? அவர்கள் எல்லா மனைவிகளும் சட்டபூர்வ மனைவிகளே. கணவனின் சொத்தில் மனைவிக்கு என்று ஒரு பங்கு வரும். அந்த ஒரு பங்கை, எல்லா மனைவிகளும் சேர்ந்து எடுத்து அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம். அவர்களின் குழந்தைகள் எல்லாம் சட்டபூர்வ குழந்தைகளே.

.

புரோ நோட்

புராமிசரி நோட் அல்லது புரோ நோட்

அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு இந்த புரோ-நோட்டைத் தான் எழுதிக் கொடுக்க வேண்டும். Promise செய்து எழுதிக் கொடுத்த நோட்டை Promissory Note என்று சொல்வர்.

பழைய காலத்தில், "IOU" (or) 'I owe you'  அல்லது "நான்  உனக்கு கடன் பட்டிருக்கிறேன்" என்று சுருக்கமாக எழுதிக் கொடுப்பார்களாம். இன்றும் கிட்டத்தட்ட அதே நடைமுறைதான்  பின்பற்றப்படுகிறது.

அதாவது, "On Demand, I (name) promise to pay Mr. (name) Rs…  with interest" என்று எழுதப்பட்டிருக்கும். இது அச்சிடப்பட்ட காகிதமாக கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒருரூபாய்க்கு  ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்துச் செய்து கொடுத்து கடன் வாங்கிக் கொள்வார்கள். அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்ள உதவுவதால், இதை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்ளத் தேவையில்லை என்பதால், வெள்ளை பேப்பரில் எழுதி அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் மட்டுமே ஒட்டிக் கொண்டால் போதும் என்ற சட்டம் உள்ளது. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதக் கூடாது. ஆனாலும், பலர் இதை ஸ்டாம்பு பேப்பரில் எழுதினால், நல்லது என்றும், மதிப்பு அதிகம் இருக்கும் என்றும் நினைத்து எழுதுகிறார்கள். இது தவறு.

இந்த புராமிசரி நோட்டில் மேற்சொன்ன உறுதிமொழியைத் தவிர வேறு வாசகங்கள் இடம்பெறக் கூடாது. அப்போதும் இந்த புராமிசரி நோட்டு சட்டப்படி செல்லாததாகிவிடும். வேறுசிலர், 'இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், சொத்தின்மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் 'என்றும் மிரட்டல்போல எழுதி வாங்கிக் கொள்வார்கள். அப்படி எழுதி இருந்தாலும் அது செல்லாது.

புரோநோட் கடனில், பணத்தை வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்மீது சிவில் கோர்ட்டில் மட்டுமே வழக்குப் போடமுடியும். காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்க முடியாது. ஆனாலும் சிலர் போலீஸில் புகார் கொடுத்தால் சுலபமாக வசூல் செய்துவிடலாம் என்று கருதி புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாரை போலீஸ் விசாரிக்கவே அதிகாரம் கிடையாது.

இந்த புராமிசரி நோட்டில் உள்ள முதல் வாசகம் "On Demand" என்று இருக்கும். அதற்கு 'கேட்கும்போது' திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். எனவே அந்த புராமிசரி நோட்டில் 3 மாதத்தில் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றெல்லாம் எழுதக் கூடாது. ஆண்டிமாண்ட் என்ற வார்த்தையே போதுமானது.

ஒரு புராமிசரி நோட்டுக்கு அதிலுள்ள தேதியிலிருந்து மூன்று வருடத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கும். அதற்குப்பின் அதுவே காலாவதி ஆகிவிடும். காலாவதியான புராமிசரி நோட்டை ஒன்றும் செய்ய முடியாது. அதைக் கொண்டு பணம் வசூல் செய்யவும் முடியாது. அதற்கு உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், பணம் வாங்கியவரே அதில் மறுபடியும் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும்.

புராமிசரி நோட்டில் ஒருரூபாய்க்கான ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினாலே போதும். அதில் எவ்வளவு பணத்துக்கு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். பணத்துக்கு ஏற்ப ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பணத்துக்கும் ஒரே ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்புதான்.

புராமிசரி நோட்டுக்கு சாட்சி யாரும் தேவையில்லை. இருந்த போதிலும், அதில் சாட்சியும் வாங்கிக் கொள்கின்றனர். தவறில்லை. சாட்சிகள் அவசியம் இல்லை என அந்த சட்டம் கூறுகிறது.

திருப்பிக் கொடுக்கும் சக்தி இருப்பவருக்கு மட்டும் கடன் கொடுத்தால் திருப்பி வசூல் செய்து கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவருக்குக் கொடுத்தால், எந்த கோர்ட்டுக்குப் போனாலும் வசூல் செய்ய முடியாது. பணம் இருப்பவரிடம்தான் கோர்ட்டும் வசூலித்துக் கொடுக்கும். சொத்தோ, பணமோ இல்லாதவரிடம் எதை வசூலிப்பது? எனவே கடன் கொடுப்பவர்களும் இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

.

கிறிஸ்தவர்களின் வாரிசுரிமைச் சட்டம்

கிறிஸ்தவர்களின் சொத்துரிமைச் சட்டம்

கிறிஸ்தவர்களின் சொத்துக்களை இந்திய வாரிசுரிமைச்  சட்டம் 1925ன்படி (The Indian Succession Act 1925) பிரித்துக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்களிடையே பூர்வீகச் சொத்துக்கள் என்று எதுவும் கிடையாது. (இந்துக்களில் மட்டும்தான் பூர்வீகச்  சொத்துக்கள் என்று உள்ளன). கிறிஸ்தவர்களில் எந்தச் சொத்தாக இருந்தாலும் அது அவர்களின் தனிச் சொத்தே.

எனவே ஒரு ஆண் கிறிஸ்தவர், தனது சொத்தை விட்டுவிட்டு இறந்தால், அந்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு அவரின் மனைவிக்குப் போய்ச் சேரும். மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் மகன்கள், மகள்கள் இவர்களுக்கு சரிசமமாகப் போய் சேரும். பேரன், பேத்திகளுக்கு எந்தப் பங்கும் கிடையாது. (இந்து மத சட்டத்தில்தான் பேரன், பேத்திகளுக்கு பூர்வீகச்  சொத்தில் பங்கு கொடுக்கப் பட்டுள்ளது).
இதேபோல், ஒரு கிறிஸ்தவ பெண்மணி , அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரின் கணவருக்கு மூன்றில் ஒரு பங்கும், மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் மகன்கள், மகள்களுக்கு சரிசமமாக போய்ச் சேரும்.

குழந்தைகள் இல்லையென்றால், வேறு வேறு சட்ட வழிகள் வைத்துள்ளார்கள், அவைகளை எழுதினால் பலபக்கங்கள் தேவைப்படும்.

இந்த கிறிஸ்தவ சட்டமான இந்தியன் வாரிசுரிமைச் சட்டமானது 1925ல் இயற்றப்பட்டு இதுவரை அதில் திருத்தம் செய்யப்படாமல் இருக்கிறது இதன் ஒரு தனிச் சிறப்பு.

ஒருவேளை, 'இந்தியா முழுவதும், எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்படியான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர முயற்சித்தால், இந்த சட்டமே எல்லோருக்கும், எல்லா மதத்தினருக்கும், பொருத்தமான ஒரு சட்டமும் கூட என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதிலும் கணவர் சொத்தில் மனைவிக்கும், மனைவி சொத்தில் கணவருக்கும் பாதி பங்கு கொடுத்தால், எந்த குழப்பமும் இருக்காது, இதுவே நியாயமானதும்கூட.

.

இந்து வாரிசுரிமைச் சட்டம்

இந்து வாரிசுகளின் சொத்துரிமை
இந்திய சுதந்திரத்துக்கு முன், பழைய இந்து சட்டமே இருந்தது. அதன்படி, ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வாங்கினால், அவருக்கு ஒரு மகன் பிறந்தவுடன் அவனும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவான். அந்த மகனுக்கு ஒரு மகன் (அதாவது பேரன்) பிறந்துவிட்டால் அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அந்தப் பேரனுக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அதாவது சொத்தை வாங்கியவர் உட்பட மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறைகளும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவர். இதுதான் பழைய இந்து சட்டத்தின் சிறப்பு. அதனால்தான், 'தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்குண்டு' என்ற பழமொழியும் வந்தது. எப்போதுமே இந்த நான்கு தலைமுறையும் அடுத்தடுத்து தொடரும். இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர் (Hindu Coparcenary property). பொதுவாக அதை பூர்வீகச் சொத்து என்று சொல்வோம். இந்த மாதிரியான ஆண்வழிச் சொத்துக்களை மட்டும்தான் பூர்வீகச் சொத்துக்கள் என்று அர்த்தத்தில் குறிப்பிடுவர். (பெண்வழிச்  சொத்துக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லை. அதாவது அம்மாவின் அப்பாவான, நம் தாத்தா வழியில் கிடைத்த சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் இல்லை.)

1956ல் புதுச்சட்டம்
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (The Hindu Succession Act 1956) கொண்டுவரப்பட்டு பெருத்த மாற்றம் செய்யப்பட்டது. இது 17.6.1956 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி 1956க்கு பின் ஒருவர் ஒரு சொத்தை வாங்கினால், அதில் அவரின் மகனுக்கோ, பேரனுக்கோ, கொள்ளுப்பேரனுக்கோ, பங்கு கிடையாது. அவனும், அவன் பிறந்தவுடன் பங்குதாரர் ஆகமுடியாது. அந்த சொத்தை வாங்கியவரின் தனிச் சொத்தாகவே (Separate property or self acquired property)கருதப்படும். அவ்வாறு சொத்தை வாங்கியவர் இறந்தபின்னர், அவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள், இவர்களுக்கு மட்டுமே அந்த சொத்தை சரிசமமாக வாரிசு என்ற முறையில் கிடைக்கும். இறந்தவரின் தகப்பனாருக்கு ஒரு பங்கும் கிடைக்காது. (ஒருசில தாசில்தார்கள், தவறுதலாக, இறந்தவருக்கு அவரின் தகப்பனாரும் ஒரு வாரிசு என்று வாரிசு சான்றிதழ் வழங்குகிறார்கள்; இது சட்டப்படி தவறு). இறந்தவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள் என்று யாருமே இல்லை என்றால்தான், இறந்தவரின் தகப்பனார் ஒரே வாரிசாக வருவார். அவரும் இல்லையென்றால், இறந்தவரின் சகோதரர்கள், சகோதரிகள் (அப்போது உயிருடன் இருக்கும் சகோதர, சகோதரிகள் மட்டும்) வாரிசாக சொத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படியும் யாரும் இல்லை என்றால், அந்த இறந்த சகோதர, சகோதரிகளின் வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படியாக முதல்வாரிசுகள், 2ம் வாரிசுகள் என்று பல வகையுண்டு.
முதல் வாரிசுகள்: (Class-I Heirs)
Mother, wife, son, daughter (any children of the pre-deceased son or daughter)
இரண்டாம் வாரிசுகள் (Class-II Heirs)
First - Father
If no father is alive- then Brothers, Sisters,
If no brothers or sisters are alive, then to their children.

புதுச்சட்டத்தில் பூர்வீகச் சொத்து
ஆனால் 17.6.1956க்கு முன் ஒரு இந்து, அவர் கிரயம் வாங்கிய சொத்தையோ, அல்லது அவரின் தகப்பனார், பாட்டனார் கிரயம் வாங்கிய சொத்தையோ, விட்டுவிட்டு இறந்திருந்தால் அது பூர்வீகச் சொத்தாகக் கருதப் பட்டு, பழைய இந்துச் சட்டப்படி சொத்தை ஆண்வாரிசுகள் பங்கிட்டுக் கொண்டு, இறந்தவருக்கு அதில் கிடைக்கும் பங்கில் அவரின் மகன்களும், மகள்களும், மனைவியும் ஒரு சிறு பங்கை அடைவார்கள். இந்த முறைப்படி மகள்களுக்கு ஒரு சிறு பங்கே கிடைத்தது. ஆண்களைப் போன்று பெண்களுக்கு சம பங்கு கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு 1989ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதன்படி திருமணம் ஆன பெண்கள் தவிர மற்ற பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்க சட்டம் கொண்டுவந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம்

2005ல் மத்திய அரசு ஒரு பெரிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்து, அதன்படி திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாமல் இருந்தாலும், பெண்களுக்கும், ஆண்களைப் போன்றே சரிசம பங்கு உண்டு என்று கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே 20.12.2004க்கு முன்னர் பாகம் பிரித்துக் கொண்ட சொத்துக்கள் தவிர மற்ற பூர்வீகச் சொத்தில் பெண்களும் உரிமை கொண்டாடலாம்.
.