Saturday, August 2, 2014

இந்து மதமும், 2-ம் மனைவியும்

இந்து மதமும், 2-ம் மனைவியும்:

பழைய இந்து மதக் கோட்பாட்டின்படி, ஒரு இந்து ஆண், எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு கட்டுப்பாடும் கிடையாது. இந்த மனைவிகள் இல்லாமல், தனியே வேறு பெண்களையும் திருமணம் செய்து கொள்ளாமல் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.அவர்களை 'அபிமான பாரியாள்' என்று சொல்லிக் கொள்வர். ஒரு இந்து ஆண், எத்தனை மனைவிகள், எத்தனை அபிமான பாரிகள் வைத்துள்ளாரோ அவ்வளவுக்கு அவருக்கு சமுதாயத்தில் கௌரவம் கிடைக்கும். இந்த மாதிரியான பழைய பழக்க வழக்கம் 1955 வரை தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும், திருமணம் செய்து கொண்ட மனைவிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே, சட்டபூர்வ குழந்தைகள்  ஆகும். இவர்களே சொத்தில் பங்கு பெற உரிமையுள்ளவர்கள். வைப்பாட்டி, அபிமான பாரிகள் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை சொத்தில் பங்கு கிடையாது. அவரவர் தாயின் சொத்தில் மட்டும் பங்கு உண்டு.

மதராஸ் பிரசிடென்சி ஒரு சட்டம் கொண்டு வந்தது.
The Madras provincial enactment i.e. Madras Hindu (Bigamy Prevention and Divorce) Act,1949 (Act 6/1949) which introduced strict monogamy among Hindus even prior to HM Act, 1955.

The Bombay presidency enacted the Bombay Prevention and Divorce Act, 1946 (Act 25/1946), which introduced monogamy among Hindus of that province.

புதிய இந்து திருமணச் சட்டம் 1955 (The Hindu Marriage Act 1955):
இந்தப் புதிய சட்டம் 1955ல் கொண்டுவரப்பட்டது. அது முதல், ஒரு இந்து ஆண், ஒரு பெண்ணைத் தான் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. 'ஒருவனுக்கு ஒருத்தி.' ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, வேறு ஒரு பெண்ணை, மனைவியாக திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படித் திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பெண், மனைவி என்ற அந்தஸ்தை சட்டபூர்வமாகப் பெற முடியாது. இரண்டாம் திருமணம் செய்வது குற்றம் என்றாலும், அந்த புகாரை  முதல் மனைவி மட்டுமே கொடுக்க முடியும். வேறு யாரும் கொடுக்க முடியாது. இதனால், சிலர், முதல்மனைவியின் சம்மதம் கிடைத்தால், இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கருதிக் கொண்டு, சம்மதம் பெற்று 2-ம் திருமணம் செய்து கொள்கின்றனர். (முதல் மனைவிக்கு குழந்தையில்லை என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்). (இப்போது இந்தச் சட்டம், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என மாற்றப் பட்டுள்ளது).
இந்தப் புதிய சட்டப்படி, ஒரு மனைவிக்கு மேல் இருக்க முடியாது. (மனைவி இறந்தபின், வேறு ஒரு மனைவியை திருமணம் செய்து கொள்வது சரியே).

ஆனாலும், ஒரு சட்ட குழப்பம் வரும். அதாவது, 1955ல் இந்த புதிய திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு, ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட மற்ற மனைவிகளின் நிலை என்ன? அவர்கள் எல்லா மனைவிகளும் சட்டபூர்வ மனைவிகளே. கணவனின் சொத்தில் மனைவிக்கு என்று ஒரு பங்கு வரும். அந்த ஒரு பங்கை, எல்லா மனைவிகளும் சேர்ந்து எடுத்து அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம். அவர்களின் குழந்தைகள் எல்லாம் சட்டபூர்வ குழந்தைகளே.

.

No comments:

Post a Comment