Sunday, August 10, 2014

ஷேக்கின் தானம் ஏன் செல்லாது?

ஷேக்கின் தானம் ஏன் செல்லாது?
ஷேக் மொகைதீன் சிறுவயதில் நாகூரில் இருந்தார். இவர் லெப்பை சமுதாயத்தை சேர்ந்த முகமதியர். கலந்தர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும்போது, ஒருநாள் கடல்கடந்து பர்மாவுக்கு வியாபாரமாக வந்தவர், இங்கேயே தங்கி விட்டார். மனைவி நாகூரில். இவர் பர்மாவில். இங்கு பர்மாவில் அவருக்கு வட்டித் தொழில் சிறப்பாக கொடிகட்டிப் பறக்கிறது. எப்போதாவது இந்தியா வந்து மனைவியை பார்த்துப் போவார். பர்மாவில் வேறு ஒரு மனைவியை திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவியும் கொஞ்ச காலத்தில் இறந்துவிட்டார்.

இவரின் வாழ்நாளின் கடைசி காலத்தில், 1914ல், ஏதாவது தர்ம காரியம் செய்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. நாகூரில் அதைச் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி, பர்மாவில் உள்ள சில மதிப்புமிக்க நிலங்களை 20.7.1914ல் தானப் பத்திரமாக எழுதி ரிஜிஸ்டர் செய்து வைத்தார். அதில், இந்த நிலங்களில் வரும் வருமானத்தில் ரூ.450/-ஐ நாகூரில் அவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தர்ம காரியங்களுக்கு மூத்த மனைவி செலவு செய்ய வேண்டும் என்றும், மீதியை அவரின் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், மனைவியின் காலத்துக்குப்பின், அவரின் வாரிசுகள் அதேபோல செய்து வரவேண்டும் என்று எழுதியுள்ளார்.
கொஞ்ச காலத்தில் இவர் இறந்து விடுகிறார். இவரின் மூத்த மனைவி கலந்தர் அம்மாள், தானப் பத்திரப்படி சொத்தை எடுக்கப் போகும்போது, வேறு ஒரு கதை.

ஷேக், பர்மாவில் இவர் வீட்டில் வசித்தபோது, அங்கு வீட்டிலிருந்து Tawa Ma Mi தாவா-மா-மி என்ற பெண்ணுடன்  பழக்கம். அதில் அவர்களுக்கு ஒரு மகன். அவன் பெயர் முகமது யூசுப் -Mahommed Eusoof.
இவர்கள் முதல் மனைவிக்கு எழுதிவைத்த சொத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். பர்மாவில் கோர்ட் வழக்கு.

முகமதியர் சட்டம்:
முகமதியர்களின் சட்டப்படி தானம் கொடுக்கும் சொத்தின் சுவாதீனத்தை (Possession of the gifted property) அன்றே ஒப்படைத்துவிட வேண்டும். இல்லை என்றால் அந்த தானம் செல்லாது. அதுபோல இந்த சொத்தை மனைவியிடம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த தானம் செல்லாது என்று பர்மா மனைவியின் வாதம். இதை ஏற்றுக் கொண்ட பர்மாவில் உள்ள மாவட்ட கோர்ட், முதல்மனைவிக்கு எழுதி வைத்த தானப் பத்திரம் செல்லாது என்று தீர்ப்பு.
அப்பீல் பர்மா ஐகோர்ட்டுக்கு.
"சொத்து மாற்றுச் சட்டம் 1882 (The Transfer of Property Act 1882) நடைமுறைக்கு வரும்போது, முகமதியர்களின் தானத்துக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்லப் பட்டுள்ளது. அதாவது, இந்துக்களின் தானத்தில் சொத்தின் சுவாதீனத்தை அன்றே கொடுக்காமல் தள்ளியும் வைக்கலாம், ஏன், பிறக்காத குழந்தைக்குக் கூட சொத்தை எழுதி வைக்கலாம். அது பிறந்து 21 வயதுக்குள் அந்த சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று சொத்து மாற்றுச் சட்டம் சொல்லியுள்ளது; ஆனால் இவைகள் எல்லாம் முகமதியர்களின் தானப் பத்திரத்துக்கு பொருந்தாது. தானச் சொத்தை அன்றே ஒப்படைத்து விடவேண்டும். இல்லையென்றால் அந்த தானமே செல்லாது."
இந்த சொத்துரிமைச் சட்டத்தின் இந்த பிரிவு இங்கு பர்மாவுக்கு அங்குள்ள அரசு அமலுக்குக் கொண்டுவரவில்லை என்ற காரணத்தைக் கூறி பர்மா ஐகோர்ட் முதல் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பை கூறியது.
அதை எதிர்த்து லண்டன் பிரைவி கவுன்சில் கோர்ட்டில் அப்பீல்:
பிரைவி கவுன்சில், "இந்த சொத்தின் ரெவின்யூ பெயர் மாற்றத்தில் மனைவி பெயர் உள்ளது. அவரும் காசிம் என்பவரை பவர் ஏஜெண்டாக நியமித்து இந்த வேலைகளைச் செய்துள்ளார். அவருக்கு சொத்தின் சுவாதீனம் கிடைத்துவிட்டது என்ற வாதங்களையெல்லாம்  நம்பாமல் அப்பீல் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

இன்றும் முகமதிய சட்டம் அதுவே. "தானப் பத்திரம் எழுதிப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882ல் குறிப்பிட்டுள்ள தானம் என்பது முகமதியர்களுக்கு செல்லுபடியாகாது. முகமதிய சட்டப்படி, ஒரு சொத்தை தானம் கொடுக்க நினைத்தால், சுவாதீனத்தை (Possession of the gifted property should be given on the same day (in presenti gift) அன்றே கொடுத்துவிட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. ஆனால் தானப் பத்திரம் எழுதிக் கொள்ளத் தேவையில்லை. இன்றும் அப்படியேதான் அந்தச் சட்டம் உள்ளது.
Privy Council Appeal No.95 of 1925 dated 1.11.1926
Ma Mi and another vs. Kallader Ammal.

.

No comments:

Post a Comment