இந்திய
சுப்ரீம் கோர்ட் (Supreme Court of India)
(Supreme Court) சுப்ரீம் கோர்ட்டுக்கு Apex Court என்றும்
மற்றொரு பெயர். இந்திய அளவில் மிகப் பெரிய நீதிமன்றம். இதைத்தான் தமிழில்
உச்ச நீதிமன்றம் என்கிறோம். மாநில அளவில்
உள்ள பெரிய நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் (High Court) என்கிறோம். (உயரத்தைக் காட்டிலும் உயரத்தில்
இருந்தால் அது உச்சம். அதற்குமேலே உயரமே இல்லை.)
இந்திய
சுப்ரீம் கோர்ட்டானது, 1950ல் இந்தியா ஜனநாயக நாடாக ஆனபோது இதுவும் உருவானது.
சரியான தேதி: 28 ஜனவரி 1950. டெல்லியில் உள்ள திலக் மார்க் என்ற பகுதியில்
இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த
சுப்ரீம் கோர்ட் வருவதற்கு முன்னால், 1935 முதல் டெல்லியில் 'சுப்ரீம் கோர்ட் போல'
இயங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு பெயர் The Federal Court
of India பெடரல் கோர்ட் ஆப் இந்தியா. இதில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவாக இருந்தது. அதற்குமேல் அப்பீல்
போகவேண்டும் என்றால் பிரைவி கவுன்சில் என்று லண்டனில் இருந்தது, அங்குதான் அப்பீல்
போகவேண்டும். அதன் பெயர் The Judicial Committee of the
PRIVY COUNCIL in London. (JCPC). இதுதான் பிரிட்டீஸ் ஆண்ட எல்லா நாடுகளுக்கும் உச்சநீதி மன்றமாக இருந்து
வந்தது. இப்போது இதைவிட்டு நாம் விலகி விட்டோம். நமக்கென்று ஒரு சுப்ரீம் கோர்ட்டை
ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.
இப்போதையஇந்திய சுப்ரீம் கோர்ட்:
சுப்ரீம்
கோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. (தற்போதுள்ள சட்ட நிலவரப்படி).
நேற்று (14.8.2014ல்) நான்கு நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டபின், சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இன்னும் ஒரு நீதிபதி பதவி காலியாக உள்ளது.
(சுப்ரீம் கோர்ட் ஆரம்பித்தபோது அதன் எண்ணிக்கை மொத்தம் 8 நீதிபதிகளே). இங்கு நீதிபதிகளாக இருப்பவர்கள் அவர்களின் 65
வயதுவரை அந்தப் பதவியில் இருக்கலாம். (ஆனால் மாநிலத்திலுள்ள ஐகோர்ட் நீதிபதி, தனது
62வது வயதுவரை அந்த பதவியில் இருக்கலாம்).
ஐகோர்ட்
நீதிபதிகளாக இருப்பவர்களைத்தான் , பொதுவாக, சுப்ரீம் கோர்ட் பதவிக்கு
உயர்த்துவார்கள். ஆனாலும் இதுவரை நான்கு வக்கீல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு
நீதிபதிகளாக நேரடியாகவே உயர்த்தி உள்ளார்கள். இவர்கள் மிகச் சிறந்த வக்கீல்கள்
என்ற பெருமையால் அந்த உயர்வைப் பெற்றார்கள்.
சுப்ரீம்
கோர்ட் தீர்ப்புகள்:
சுப்ரீம்
கோர்ட் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கே சொந்தமான Supreme Court Reports என்ற பத்திரிக்கை வெளியீடு மூலம்தான்
வெளியிடுகிறார்கள். இது அல்லாமல் வேறு பல தனியார் பத்திரிக்கை வெளியீடுகளும்
காலங்காலமாக இயங்கி வருகின்றன.
.
No comments:
Post a Comment