வயதுவந்த
பெண்ணை பெற்றோர் அடைத்துவைத்தல் குற்றமா?
வயதுவந்த
மகளை, அவள் விருப்பப்பட்ட இளைஞனுடன்
சேர்ந்து இருக்க விடாமல், அவளின்
தகப்பன், அவளை தன்வீட்டை விட்டு
வெளியே செல்லவிடாமல் தடுத்து வைப்பது 'சட்டத்துக்கு புறம்பான காவலா' என்ற கேள்விக்கு சமீபத்தில் கேரளா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பின் சாரங்கள்:
ஒரு ஆண்
டாக்டர், உடன் வேலைசெய்யும் பெண்
டாக்டரை காதலித்தார். இளைஞனோ வேறு
ஜாதியைச் சேர்ந்தவன் என்பதாலும், அவன்
வேறுசில பெண்களுடன் பழக்கம் உள்ளவன் என்பதாலும், அந்தப் பெண்ணின் தகப்பனார், அந்தப் பெண்ணை வீட்டைவிட்டு வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே காவல்
வைத்தார்.
இதை
தெரிந்த அந்த இளைஞன், கேரளா
ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் (Habeas Corpus) என்னும் ஆள்கொணர்வு மனுவை போட்டான். (கேபியஸ் கார்பஸ் என்றால், யாரையாவது
சட்டத்துக்குப் புறம்பான அடைத்து வைத்திருந்தால், (காவல்துறையாக இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி) அது அந்த நபரின் சுதந்திரத்தை பறித்ததற்கு சமம். எனவே இந்த ரிட் மனுவை ஐகோர்ட்டில் போட்டு, அவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைத்திருப்பவரை விடுதலை செய்ய
உத்தரவு இடுவதற்குப் பெயர்தான் கேபிஸ் கார்பஸ் அல்லது ஆள் கொண்ர்வு).
அந்த
மனுவை யார் வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் போடலாம். அப்படி, அந்த இளைஞன் அந்த மனுவை போட்டு அவளை தனது தகப்பன் பாதுகாப்பிலிருந்து
கோர்ட்டுக்கு கொண்டு வந்துவிட்டான். கோர்ட் அந்தப் பெண்ணை ஒரு விடுதியில் தங்க வைக்கிறது. அவர்கள் சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம்
செய்துள்ளார்கள்.
இந்த
நிலையில், அந்த பெண்ணின் தகப்பனார்
அந்த வழக்கில் பதில்மனு செய்து, தான்
அவரின் மகளை சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைக்கவில்லை என்றும், ஒரு தகப்பன் தன் மகளை காப்பாற்றவும், நல்ல வழியில் அவளுக்கு வாழ்க்கை அமைத்துக்
கொடுக்கவும் வேண்டியே என் பாதுகாப்பில் இறுக்கமாக வைத்திருந்தேன் என்றும்
கூறுகிறார்.
இந்த
வழக்கில், ஐகோர்ட் தனது நிலையை
பல்வேறு தீர்ப்புகளைக் கொண்டு பரிசீலிக்கிறது.
ஒரு
வயதுவந்த பெண்ணை அவளின் தகப்பனார், பாதுக்காப்பு
என்ற பெயரில் கட்டுப்படுத்துவது 'சட்டத்துக்கு
புறம்பான சிறைவைப்புச் செயல்' என்று
கூறமுடியுமா? என்ற கேள்வியை கோர்ட்
வைத்தது.
இதே
போன்ற சூழ்நிலை உள்ள ஒரு வழக்கு 1974ல் Full Bench
விசாரனைக்கு வந்தது. 1974
KLT 650.
(Full
Bench என்றால் 3 நீதிபதிகளுக்கு மேல் உள்ள நீதிபதிகள் ஒரே
கோர்ட்டில் ஒரு வழக்கை விசாரிப்பது. மற்றொன்று, Division Bench என்பது
2 நீதிபதிகள் மட்டும் ஒரு வழக்கை
ஒரே கோர்ட்டில் அமர்ந்து விசாரிப்பது).
அந்த
வழக்கில் ஒரு இளைஞன் ஹேபியஸ் கார்பஸ் வழக்குப் போட்டு அதில் அவன் மனைவியை ( 21 வயது) அவளின் தகப்பன் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைத்துள்ளதாக குற்றம்
சாட்டியுள்ளான். அந்த வழக்கில், இங்கிலாந்தில் நடந்த ஒரு வழக்கை மேற்கோள்
காட்டியுள்ளனர்.
அது In Re Agarellis vs. Lascelles (1883 (24) Law Reports Chancery 317).
ஒரு
தகப்பனுக்கு மூன்று நிலைகளில் தடைசெய்யும் உரிமை உண்டு என்று அந்த நீதிமன்றம்
கூறியுள்ளது.
அதில்,
1) Where the father
has fortified the right by his moral turpitude:
2) where he has
abdicated his authority:
3) where he removes
the ward out of jurisdiction.
இந்தமூன்று சூழ்நிலைகளில் ஒரு தகப்பனின் செயல்
சரியே என நியாயப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த
வழக்கில், காதல் பிரதானமாக
இருப்பதால், காதலா, பெற்றோரின் அரவனைப்பா,
வழிகாட்டலுமா என்ற விஷயத்தில் ஹேபியஸ் கார்பஸ் போன்ற ரிட்
மனு அவசியமற்றது என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
The parents have a
duty to put their children in a correct pathway in their life. True that the
girl has become a major. But that does not mean that no duty is cast upon the
parents to advise her on important matters. It is the responsibility of the
parents to see that the daughter is not cheated.
The father has
unbridled right to keep her 'in custody'
The keeping of an
adult major woman in the custody of her parent even agaisnt her will and desire
will not amount to improper restraint or detention or confinement as to justify
invocation of the jurisdiction under Art. 226 of the Constitution.
பெண்
மேஜர் வயதை அடைந்திருந்தாலும், தகப்பன்
என்ற முறையில் அந்த பெண்ணின் நன்மையைக் கருதி அவளைப் பாதுகாத்து வருவது
சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைப்பது என்ற குற்றம் ஆகாது என்னும் வாதத்தை
அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை
ஒரு பொதுவான உதாரணமாகக் கொள்ளலாம்.
சட்டப்படி, ஒரு வயது வந்தவரை எந்தக் காரணம் கொண்டும்
அவரின் விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்க முடியாது. இன்று பெற்றோர் அடைத்து வைப்பது போல, நாளை கணவனும் அடைத்து வைப்பான். இவள் என்ன ஆடு,மாடா அடைத்து வைக்க? தனி மனித சுதந்திரம் என்னாவது?
எனவே
இதுபோன்ற சூழ்நிலையில், பெற்றோர், அவர்களின் பெண்ணுக்கு தகுந்த அறிவுரை கூறலாம், வழிகாட்டலாம். தன் மகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்யும் இவை எல்லாம் சட்ட விரோதமாக
அடைப்பது என்ற குற்றமாகாது.
.
No comments:
Post a Comment