பகவத் கீதை பிறந்த கதை:
பரசுராமனுடைய மகன் வியாச முனிவர். வேதங்களை கொடுத்தவர் இந்த
வியாச முனிவர்தான். இவர்தான் மகாபாரதம் என்னும் இதிகாசத்தை கொடுத்தவர். இந்த வியாச
முனிவர், மனித தர்மத்தை விளக்கும், மனிதனின் வாழ்வுக்கு பின்னர் என்னவாக ஆவோம்
என்பதை விளக்கும், ஒரு அருமையான படிப்பினை கதையை மனதில் யோசித்து வைத்துள்ளார்.
அதை வேகமாக எழுதக்கூடிய ஒருவரிடம் சொல்லி எழுத வேண்டும் என நினைத்தாராம். உடனே
படைக்கும் தேவனான பிரம்மாவின் ஞாபகம் வருகிறது. அவரை நினைத்து அழைக்கிறார். அவர்
நேரில் வந்து, இந்த வேலைக்கு மிகச் சரியானவர் கணபதி தான் (பிள்ளையார்) என்று
சொல்கிறார். எனவே வியாசர், கணபதியை வணங்கி அழைக்கிறார். அவர் நேரில் வந்தவுடன்,
அவரிடம் இதை சொல்கிறார். ஆனால், கணபதி ஒரு நிபந்தனையுடன் எழுத ஒப்புக் கொள்கிறார்.
“நான் எழுதும் போது தடையில்லாமல் சொல்ல வேண்டும்” இதுதான் நிபந்தனை. அதற்கு
ஒப்புக் கொண்ட வியாசர், அவரும் ஒரு நிபந்தனையை கேட்கிறார். கணபதி அவ்வாறு வேகமாக
எழுதும்போது அதன் அர்த்தத்தை உணர்ந்து எழுத வேண்டும் என்கிறார். அதற்கு கணபதியும்
சம்மதித்து எழுதிக் கொடுக்கிறார். இது பின்னர் வியாச
முனிவரின் மகனுக்கு இந்த கதை சொல்லப்பட்டு, நாரதர் முனிவரால் வழிவழியாக
சொல்லப்பட்டு, பின்னர், பரீச்சித் என்ற மன்னனின் மகன் ‘ஜனமேஜய’ என்ற மன்னனின்
அரண்மனையில் பல முனிவர்களுக்கு சொல்லப் பட்டது.
No comments:
Post a Comment