அகலிகை: Agaligai (a Stone Lady)
முதற்கலன் மகள். கௌதமர் மனைவி. இவர் அழகைக்கண்டு
தேவேந்திரன் மயங்கி அவரை அடைய நினைத்து, கௌதமரின் ஆசிமம் சென்று சேவல் உருவில்
கூவ, விடிந்ததாக நினைத்த கௌதமர் ஆற்றங்கரைக்கு சென்றார். அப்போது தேவேந்திரன்
கெட்ட எண்ணத்துடன் கௌதமர் போல உருமாறிய தேவேந்திரனை, அவரின் கணவர்தான் என நினைத்த
அகலிகையை வஞ்சித்து அடைந்தான். இதை அறிந்த கௌதம முனிவர் தேவேந்திரனில் உடல்
முழுவதும் ஓட்டைகளாகும்படி சபித்தார். மனைவி அகலிகையை கல் பாறையாக ஆகும்படி சபித்தார்.
வெகுகாலம் கல்லாகவே இருந்து, ஸ்ரீராமர் அந்தவழியே வந்தபோது அவரின் திருப்பாதம்
பட்டு மீண்டும் பெண்ணானாள்.
இதில் அகலிகையின்
தவறென்ன? ஏன் கணவர் இவளையும் தண்டிக்க வேண்டும். தவறித் தவறு செய்பவருக்கும்
தண்டனையா?
No comments:
Post a Comment