அக்கினிதேவன் (அக்கினி):
பிரம்மாவின் புத்திரன்
என்பர் ஒருசிலர். கசியபன் புத்திரன் என்பர் ஒருசிலர். இவனுக்கு கால் மூன்று.
நாக்கு ஏழு. முகம் இரண்டு. அர்ஜூனனுக்கு ‘காண்டீவம்’ கொடுத்தது இந்த அக்கினி
தேவரே.
அக்கினி இருவகைப் படும். 1) திரேதாக்கினி, 2) பாஞ்சாக்கினி. இதில்
திரேதாக்கினி என்பது, ‘ஆகவனீயம், தக்ஷிணாக்கினி, காருகபத்தியம், என மூன்று
பிரிவுகளை கொண்டது. அவைகள் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வேதியில்
வளர்க்கப் படுவன. பஞ்சாக்கினி என்பது மேற்சொல்லிய மூன்றுடன் ‘சவ்வியம்’
‘அபசவ்வியம்’ என ஐந்து பிரிவுகள் கொண்டது. இவை இரண்டும் ‘ஈசான’ திசையில் வளர்க்கப்
படுவன.
அக்கினியானது, பூதங்களுள் நடுநிலையில் உள்ளது. இது உருவத்துடனும்,
உருவமில்லாமலும் இரு நிலை உண்டு. விண்ணுலகத்தில் சூரியனிடத்தில் ஜோதியாகவும்,
மேகத்திலே மின்னலாகவும், பூமியிலே தீயாகவும், சமுத்திரத்திலே வடவையாகவும்,
ஜீவன்களில் உடலிலே ஜாடராக்கினியாகவும், பிரபஞ்சதிலே வெகு வேகமாக பரவக்கூடியதாவும்
இருப்பதாக ரிஷிகள் உணர்ந்துள்ளனர். இந்த அக்கினி மண்டலத்தில் உள்ளவர்களை அக்கினித்
தேவர்கள் என அழைப்பர்.
No comments:
Post a Comment