Tuesday, March 15, 2016

தேசிய அப்பீல் கோர்ட்டுகள் வேண்டுமா?

National Court of Appeal
“தேசிய அப்பீல் கோர்ட்டுகள்” (இந்தியாவில் வருமா?)
அமெரிக்காவின் சட்டதுறையில் கோர்ட்டுகள் வித்தியாசமாகவே இருக்கும்; அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாவட்ட அளவில் உள்ள கோர்ட்டுகள் உள்ளன; அதை அடுத்து அவர்கள் அப்பீல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், சர்க்யூட் கோர்ட்டுக்குத்தான் (Circuit Court) போகமுடியும். அந்த மாநிலத்தில் உள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடியாது; இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஐகோர்ட் என்னும் உயர்நீதி மன்றம் உள்ளது; ஆனால் அமெரிக்காவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சுப்ரீம் கோர்ட் உள்ளது; அது மாநில சுப்ரீம் கோர்ட் ஆகும்; ஆனால் இந்தியாவில் அதற்குப் பெயர் ஐகோர்ட். அதாவது மாநில ஐகோர்ட் ஆகும்;
சுப்ரீம் கோர்ட்:
இந்தியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட் மாதிரியே, அமெரிக்காவில் இருக்கும் சுப்ரீம் கோர்ட்டானது மொத்த அமெரிக்க நாட்டின் சுப்ரீம் கோர்ட் ஆகும்; அதை “அமெரிக்க சுப்ரீம் கோர்ட்” என்பர். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கும், இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமே ஒன்பது நீதிபதிகள்தான்; அங்கு அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் சிக்கல்களை மட்டுமே விசாரனை செய்வர்; தனி மனிதனின் சிவில், கிரிமினல் அப்பீல் வழக்குகளை விசாரிக்க மாட்டார்கள்; ஆனால் இந்தியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில், அரசியலமைப்பு சட்டச் சிக்கல்கள், தனி மனிதனின் சிவில் அப்பீல், கிரிமினல் அப்பீல் வழக்குகள் இவைகளை எல்லாம் விசாரிப்ப்பார்கள்;
அமெரிக்க சர்க்யூட் கோர்ட் முறை:
அமெரிக்காவில், மாநில சுப்ரீம் கோர்ட்டும் அரசியலமைப்பு சட்டங்களை மட்டும் விசாரிக்கும்; தனி மனித சிவில், கிரிமினல் அப்பீல் வழக்குகளை விசாரிக்காது; அதற்கென, தனியே சர்க்யூட் கோர்ட் முறை என்று ஒருவகை கோர்ட்டுகள் உண்டு; அதாவது, இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு ஒரு சர்க்யூட் கோர்ட் முறை இருக்கும்; மொத்த அமெரிக்காவுக்கும் மொத்தம் 13 சர்க்யூட் கோர்ட்டுகள் உள்ளன. அந்த மாநிலத்தின் மாவட்ட கோர்ட்டுகளிலிருந்து வரும் எல்லா சிவில், கிரிமினல் அப்பீல் வழக்குகளை எல்லாம் இந்த சர்க்யூட் கோர்ட்டே விசாரனை செய்யும்; இந்த சர்க்யூட் கோர்ட் தீர்ப்புக்கு மேல், வேறு எங்கும் அப்பீல் போக முடியாது; அதுவே கடைசி; மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கும் போக முடியாது; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கும் போக முடியாது; இப்படிப்பட்ட முறையில், வழக்குகளை எளிதில் குறைந்த காலக் கெடுவுக்குள் ஒரு வழக்கின் முடிவு தெரிந்துவிடும் என்பது சந்தோஷமே!
இந்தியாவில் இப்போது நேஷனல் அப்பீல் கோர்ட் முயற்சி:
அமெரிக்காவில் உள்ளதைப் போல, ஏன் இந்தியாவில் கொண்டுவரலாமே என்று இப்போதுள்ள சட்ட மேதைகள் நினைக்கிறார்கள்; மாநில ஐகோர்ட்டுக்கும், இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்கும் வேலைப்பழு கண்டிப்பாக குறையும்; மக்களுக்கு சீக்கிரம் தீர்ப்பும் கிடைக்கும்; பிரச்சனைக்கு விடிவும் கிடைக்கும் என நினைக்கிறார்கள்;
இந்த நேஷனல் அப்பீல் கோர்ட் அமைப்பது பற்றி, இன்று இந்திய சுப்ரீம் கோர்ட்டில், சென்னை வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்; அந்த வழக்கை விசாரிப்பதற்காக, அரசியலமைப்பு பென்ஞ் அமைக்கப்பட்டுள்ளது; அதன் அடுத்த விசாரனை ஏப்ரல் 4ல் வருமாம்; எதிர்பார்ப்போம் நல்ல தீர்ப்பை!
**


No comments:

Post a Comment