1956ல் புதிதாக இந்து
வாரிசு உரிமைச் சட்டம் வந்தது. அந்தச் சட்டமானது ஜூன் 17, 1956 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பழைய இந்து வாரிசு
சட்டத்தை முழுமையாக மாற்றி விட்டது. புதிய முறைப்படி பங்குகள் பிரிக்கப்பட்டன.
இந்த 1956 புதிய சட்டப்படி, இந்து ஆண்களின் சொத்துக்களை இரண்டு விதமாக பிரித்துக் கொண்டனர். (1) பூர்வீகச்
சொத்துக்கள் (அதாவது இந்த 1956 சட்டம் வருவதற்கு முன்னர் ஒருவர் சொத்தை விட்டு விட்டு
இறந்திருந்தால் அது பூர்வீகச் சொத்து); (2) ஒருவர், தான் சொந்தமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தை, இந்த
சட்டம் வந்த 1956க்கு பின்னர் இறந்திருந்தால், அது இறந்தவரின்
"தனிச் சொத்து".
மேலே சொன்ன பூர்வீகச்
சொத்துக்கு ஒரு வகையான சட்டப்பிரிவும், அடுத்துச் சொன்ன
தனிச் சொத்துக்கு ஒரு வகையான சட்டப்பிரிவும் இந்த 1956 சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.
பூர்வீகச் சொத்துக்கு பிரிவு 6 ஏற்படுத்தப்பட்டது. தனிச் சொத்துக்கு பிரிவு 8 ஏற்படுத்தப்பட்டது.
இது இல்லாமல் பெண்களின் சொத்துக்கு தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டது.
பிரிவு
6 பூர்வீகச் சொத்து;
1956க்கு முன்னர் ஒரு
இந்து அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்திருந்தால் அது பூர்வீக சொத்து என்று கருத வேண்டும்.
அந்த சொத்தில் யார் யாருக்கு பங்கு வரும் என்று இந்த பிரிவு 6 சொல்கிறது. அதன்படி, பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு ஒரு இந்து ஆண் (தகப்பன்) இருந்து விடுகிறார்.
அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது, இந்த 1956 சட்டம் பிரிவு 6-ன்படி இவர் இறப்பதற்க்கு முன்னர், இவருக்கும் (தகப்பனுக்கும்) அவரின் இரண்டு மகன்களுக்கும் ஒரு பாகப் பிரிவினை
(கற்பனையாக) நடக்கும்; அதில் தகப்பனுக்கு ஒரு பங்கு, இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு பங்கு; ஆக மூன்று பேருக்கும்
மூன்று பங்காக அந்த சொத்து அல்லது சொத்துக்கள் பிரியும். (அசையும் சொத்து, அசையாச் சொத்து எல்லாமே). இந்த கற்பனைப் பாகப்பிரிவினைப்படி, இறந்தவருக்கு (தகப்பனுக்கு) ஒரு பங்கு கிடைக்கிறது. அந்த பங்கு சொத்து
"பூர்வீகச் சொத்து" கிடையாதாம். அதாவது அது இறந்தவரின் "தனிச் சொத்தாம்".
அந்த சொத்தை அவரின் மனைவியும், மகள்கள் இருவரும், மற்றும் இந்த மகன்கள் இருவரும் ஆக 5 பேரும் தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்ளலாமாம்.
அதாவது ஏற்கனவே கற்பனை பாகப் பிரிவினையில் 1/3 பாகமாக பிரிந்துள்ளது. அந்த தகப்பனின்
1/3 பாகத்தை மறுபடியும் 1/5 ஆக பிரிக்க வேண்டும். அந்த கணக்குப்படி பார்த்தால்,
1/15 பாகம் மனைவிக்கும், 1/15 பாகம் ஒவ்வொரு மகளுக்கும்
கிடைக்கும், மீதி இரண்டு
மகன்களுக்கும் அதேபோல கிடைக்கும். ஏற்கனவே இந்த இரண்டு மகன்களும் தனி பாகமாக தலா
1/3 பாகம் வாங்கி வைத்துள்ளனர். இப்படித்தான் பூர்வீகச் சொத்தானது, இந்த 1956 சட்டம் பிரிவு 6ன்படி பாகம் பிரிக்கப்படும் என்று அந்த சட்டம் சொல்லி
உள்ளது.
(ஆனால், 2005ல் இதையும் மாற்றி புதிய முறை ஒன்றை இதில் புகுத்தி, எல்லா மகள்களுக்கும் (திருமணம் ஆகி கணவன் வீட்டுக்கு போய் இருந்தாலும்,
ஆகாமல் இருந்தாலும், விதவையாக இருந்தாலும்) எல்லோருக்கும்,
ஆண்களான மகன்களைப் போலவே இந்த மகள்களுக்கும் சரிசமமாக பங்கு உண்டு என்று
சட்டம் வந்துள்ளது.
No comments:
Post a Comment