Friday, June 5, 2020

Cattle Trespass case

Cattle Trespass Act 1871

1958-ல் ஒரு நாள் காலை 10 மணிக்கு, சுப்பையாத் தேவரின் ஒரு காளை மாடும், பசுமாடும் சேதுராமன் செட்டியாரின் பயிர் நிலத்தில் புகுந்து மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவரின் வேலையாள் நல்லகருப்பன் செட்டியார் அந்த மாட்டைப் பிடித்து பவுண்ட்டுக்கு கொண்டு செல்கிறார். இதைத் தெரிந்த சுப்பையாத் தேவர், அந்த மாடுகளை பவுண்டுக்கு ஓட்டிச் செல்வதைத் தடுத்து தன்னிடமே மாடுகளை ஒப்படைத்து விடும்படி கேட்கிறார். வாக்குவாதம் நடக்கிறது. சுப்பையாத் தேவர் கோபத்தில் தன் செருப்பை கழற்றி அவரை அடித்து விடுகிறார்.

இந்த விஷயம் தெரிந்த சேதுராமன் செட்டியார், தன் வேலையாளை ஒரு போலீஸ் புகார் கொடுக்கும்படி செய்கிறார். கீழ்கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாகச் சொல்லி, அத்துமீறி நிலத்தில் மாடுகளை மேய விட்டதற்காக The Cattle Trespass Act 1871 -ன்படி ரூ.250 அபராதமும், அவரைச் செருப்பால் அடித்து அசிங்கபடுத்தியதற்காக Sec.355 IPC ன்படி ரூ.250 அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆனால் அதை எதிர்த்து சுப்பையாத் தேவர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

வழக்கின் வேடிக்கை என்னவென்றால்:

சுப்பையாத் தேவரின் வக்கீலீன் வாதமாக, Sec.10 of the Cattle Trespass Act 1871 ன்படி இந்த வழக்கில் புகார் கொடுத்தவர் நிலத்தினை பயிர் செய்பவராக இருக்க வேண்டும் அல்லது அந்த நிலத்தை கைவசம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, சேதுராமன் செட்டியார் தான் நிலத்தின் உரிமையாளர். அவரின் வீட்டு ஆளான நல்லகருப்பன் செட்டியார் Trespass புகார் கொடுக்க முடியாது என்று வாதம் செய்கிறார்.

Cultivator என்ற வார்த்தை அந்த சட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு, அந்த நிலத்தை அவரே உழுது பயிர் செய்ய வேண்டும் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அவர் கூலி ஆள் வைத்து விவசாயம் பார்க்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இங்கு இந்த மாடுகளைப் பிடித்துப் போனவர் Cultivator என்று எடுத்துக் கொள்ளமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த Cattle Trespass சட்டம் கொண்டு வந்ததன் நோக்கமே, நிலத்தை பயிரிடுபவரின் பயிரை மாடுகள் மேய்ந்து நஷ்டம் உண்டாக்கிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுதான்.

ஒரு தனியார் காடு உள்ளது. அது ஜமின்தாரி காடு. அதில் மாடுகள் மேயக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அங்கு மெட்ராஸ் பாரஸ்ட் சட்டம் அமலில் இருக்கிறது. அங்கு கூட்டமாக மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கிறது. அதைப்பார்த்த அந்த ஜமீனின் அதிகாரி மாடுகளை சிறைப்பிடித்து ஓட்டிக் கொண்டு வருகிறார். இதைப் பார்த்த மாட்டுக்காரர்கள்,  அவரை அடித்துவிட்டு மாடுகளை மீட்டிக் கொண்டு போய் விட்டார்கள்.  இங்கு ஜமின்தார் தான் அந்தக் காட்டின் சொந்தக்காரர்.  அவருடைய பொறுப்பில் தான் காடு உள்ளது. ஆனால் அவரின் அதிகாரி மாடுகளை சிறைப்பிடித்து இருந்தார். அதில் எப்படி முடிவு எடுக்கப் பட்டது என்றால், நிலம் வேறு ஒருவருக்குச் சொந்தமாக இருந்த போதும், அவரின் வேலையாள் மாடுகளை பிடிக்கலாம். நிலத்தின் சொந்தக்காரரே நேரில் சென்று மாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தீர்ப்புக் கூறி அடித்தவர்களைத் தண்டித்துள்ளது.  இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 1948-ல் நடந்தது. AIR 1948 Mad 467.

எனவே இந்த வழக்கில் சுப்பையாத் தேவரைத் தண்டித்தது சரிதான் என்றும் , ஆனால் மாடுகளை மேயவிட்டதற்காக ரூ.50 அபராதமும், அடித்ததற்காக ரூ.150 அபராதமும் என்று குறைத்துக் கொண்டது சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.  

 


No comments:

Post a Comment