Saturday, September 25, 2021

Koor Chit கூர் சீட்டு என்னும் பாகப் பத்திரம்:

Koor Chit
கூர் சீட்டு என்னும் பாகப் பத்திரம்:

பொதுவாக சொத்துக்களைப் பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவும், அல்லது எழுத்து பூர்வமாகவும் பாகம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.

பாகப் பிரிவினை என்பது இருக்கும் சொத்தை பாகங்களாக பிரித்துக் கொள்வதால், அது ஒரு "சொத்து மாற்றம் இல்லை" (Not a Transfer of Property) என்பதால், அதை வாய்மொழியாகவும் பாகம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. 

விவசாய நிலங்களை வாய்மொழியாகவே பாகம் செய்து கொள்கிறார்கள். எனவே ஒரு குடும்பத்து நிலங்களை பஞ்சாயத்துதாரர்கள் முன்னிலையில் முதலில் பாகமாகப் பிரித்துக் கொள்வர். பின்னர் வேறு ஒரு நாளில், அவ்வாறு ஏற்கனவே பிரித்துக் கொண்ட சொத்துக்களை அவரவர் பாகம் இது என்று ஒரு சீட்டில் எழுதிக் கொள்வர். அதை கூர் சீட்டு என்பர். அதாவது சொத்துக்களை கூறு போட்ட சீட்டு என்று பொருள். 

அவ்வாறு ஏற்கனவே பாகமாகப் பிரித்துக் கொண்ட சொத்துக்களை ஒரு ஞாபகத்துக்காக அல்லது உறுதிப் படுத்திக் கொள்வதற்காக எழுதிக் கொள்ளும் பாக கூர் சீட்டை, ஸ்டாம்ப் பேப்பர் பத்திரத்தில் எழுதிக் கொள்ள தேவையில்லை. அதை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், அந்த கூர் சீட்டு ஒரு பாகப் பத்திரம் இல்லை. ஆனால் ஏற்கனவே பாகம் பிரித்துக் கொண்டதை உறுதி செய்து எழுதிய சீட்டு மட்டுமே. எனவே அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், அவ்வாறு எழுதிய கூர்சீட்டிலேயே, அன்றே பாகம் பிரித்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொண்டால், அது ஒரு "பாகப் பிரிவினை பத்திரம்" ஆகிவிடும். அவ்வாறு அன்று பாகம் பிரித்துக் கொண்டதாக கூர் எழுதினால், அதை பத்திரப் பேப்பரில் எழுத வேண்டும். அதை பதிவும் (ரிஜிஸ்டரும்) செய்ய வேண்டும் என்று இந்திய ஸ்டாம்பு சட்டமும், இந்திய பதிவுச் சட்டமும் சொல்கிறது.

எனவே பாகப் பத்திரமாக எழுதினால், அதாவது அந்த பத்திரத்திலேயே, சொத்துக்களை பாகமாக பிரித்து எழுதிக் கொண்டால், அதை பத்திர பேப்பரில் எழுதுவதுடன் அதை பதிவும் செய்வது கட்டாயம். 

ஆனால், ஏற்கனவே பாகம் செய்து கொண்ட சொத்துக்களை, ஒரு சீட்டில் எழுதிக் கொண்டால், அதற்கு பத்திரம் தேவையில்லை, பதிவும் தேவையில்லை.

எனவே கூர் சீட்டு எழுதும்போது கவனமாக இந்த விஷயத்தை பார்த்துக் கொண்டு எழுத வேண்டும்.

அதிகப்படியான வழக்குகள் இந்த கூர் சீட்டை தவறுதலாக எழுதியால் ஏற்பட்டவையே. 

அப்படிப்பட்ட கூர் சீட்டை கோர்ட்டில் ஒரு ஆவணமாக தாக்கல் செய்யும் போது, அதை கோர்ட் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது அதற்கு ஸ்டாம்பு கட்டணமும், அபராதமும் கட்டும்படி நேரிடுகிறது. 

Whether the Koor Chit requires registration?

If they divided the property and took possession in the Koor chit itself, that KoorChit must be properly stamped and it needs registration.

On the question of law relating to admissibility of unregistered koor chit vis-a-vis provisions of Section 49 of the Registration Act read with Section 35 of the Indian Stamp Act, it has to be stated that the law is settled that an unstamped document cannot be relied upon for any purpose. 

Factually, the koor chit is only a record of past event. 
**




No comments:

Post a Comment