Saturday, July 26, 2014

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி:

வரவேற்போம் Mr. Justice Sanjay Kishan Kaul ஜஸ்டிஸ் சஞ்சய் கிஷன் கவுல் அவர்களை. இவர் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சனிக்கிழமையன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்குமுன், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர்.


56 வயதாகிறது. 26.12.1958ல் பிறந்தவர். எம்ஏ எக்கனாமிக்ஸ் ஹானர்ஸ் படித்து, சட்டப்படிப்பான LLBஐ 1982ல் டில்லியில் படித்து வக்கீலானார்.

2001ல் டில்லி ஐகோர்ட்டில் நீதிபதியானார். பின்னர், 2013ல் பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியானர். இப்போது சென்னை ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக வந்துள்ளார்.

இந்துக் கடவுளை கேலிச்சித்திரமாக பிரபல ஓவியர் MFஹூசேன் வரைந்த பிரச்சனையில், அவரின் பேச்சுரிமை சுதந்திரத்தை உறுதிசெய்தவர்.
இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவர் சென்னை ஐகோர்ட்டின் 27-வது தலைமை நீதிபதியாவார். வாழ்த்துக்கள்.
.

No comments:

Post a Comment