அட்வகேட்:
இந்த
வார்த்தையானது லத்தீன் மொழி வார்த்தை. லத்தீன் மொழியில், "உதவிக்கு
வருபவர்" என்று நேரடி அர்த்தமாம்.
இதற்கு முன்,
பாரிஸ்டர் படிப்பு படிக்காமல் கீழ்கோர்ட்டுகளில் சிறிய பிரச்சனையுள்ள
வழக்குகளைநடத்தும் வக்கீலை மட்டுமே 'வக்கீல்' என்பர். நம்ஊர்களில், பழங்காலத்தில், அவரைத்தான்
'நாட்டு வக்கீல்' என்று சொல்வர்.
1961ல்
வக்கீல்கள் சட்டம் வந்தது. அதன்பின், எந்த வக்கீலாக இருந்தாலும், அட்வகேட்,
பாரிஸ்டர், லாயர் என்ற எல்லாப் பெயர்களையும் விட்டுவிட்டு, ஒரே பெயரில் 'அட்வகேட்'
(Advocate)
என்றே அழைக்க வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது.
அடுத்தவர் பிரச்சனைக்கு வக்காலத்து வாங்கி வாதாட வருபவரே வக்கீல். சமுதாயத்தில்,
அட்வகேட் என்னும் வக்கீல் என்பவர்கள் "படித்த, அநியாயத்தை தட்டிக் கேட்கும்
துணிச்சலான போர்வீரன் போன்ற, நட்புள்ள, ஜென்டில்மேன்" என்று விளக்கம்
கூறப்பட்டுள்ளது.
ஒரு
வக்கீலுக்குறிய குணங்கள்:
1. கோர்ட்டில்
எந்த சூழ்நிலையிலும் தன் உணர்வை இழக்காமல் இருக்கவேண்டும். கோபமே படக்கூடாது.
தனக்கு சாதகமாக தீர்ப்பு இருந்தாலும், தனக்கு எதிராக இருந்தாலும் கோபமே
காண்பிக்கக் கூடாது.
2.கோர்ட்
அறையை ஒரு புனித இடமாகவே கருத வேண்டும்.
3. நீதிபதியை
மிகவும் மதிக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும்.
4. நீதிபதி
அந்த இருக்கையில் (சீட்டில்) இருப்பதால் மட்டுமே அந்த இடத்துக்கு மதிப்பை கொண்டு
வருகிறவர். எனவே அந்த பதவிக்குறிய மதிப்பை வக்கீல் கொடுக்க வேண்டும்.
இவ்வளவு
கண்ணியம் வாய்ந்த அந்த தொழிலை அதைச் செய்யும் வக்கீலே காப்பாற்ற வேண்டிய கடமையும்
பொறுப்பும் உள்ளது.
கண்ணியமுள்ள
வக்கீல் என்பது பயப்படும் வக்கீல் என்பதல்ல. தரக்குறைவான காரியங்களை செய்யாமல்,
நீதியை நிலைநாட்ட சட்டபூர்வமான அனைத்து செயல்களையும் செய்யும் துணிச்சல் இருக்க
வேண்டும்.
சமுதாயத்தில்,
தற்போது வக்கீல்கள் மீது பொதுவாக அதிருப்தியே உள்ளது. தரம் குறையும்போது, நம்பிக்கையும் குறைந்துவிடும் என்பது இயற்கை நியதி.
.
No comments:
Post a Comment