டைவோர்ஸ்
(டிவோர்ஸ்) Divorce:
இந்து
திருமணச் சட்டப்படி, டைவர்ஸ் கேட்பவர், திருமணம் நடந்து ஒருவருடம் கழித்தே
கோர்ட்டில் மனுபோட வேண்டும் என்று சட்டப் பிரிவு உள்ளது.
சென்னை
ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் இந்த ஒருவருடப் பிரச்சனை அலசப்பட்டது. அதாவது
திருமணம் நடந்த 25 நாட்களுக்குள் கணவர் டைவர்ஸ் மனுப் போட்டார். ஆனால் இந்து
திருமணச் சட்டப்படி திருமணம் நடந்த ஒரு வருடம் கழித்துத்தான் டைவர்ஸ் வழக்கே
போடமுடியும். ஆனாலும் கணவர் போட்ட வழக்கை கோர்ட் ஏற்றுக் கொண்டு மனைவிக்கு சம்மன்
அனுப்பி கோர்ட்டுக்கு கூப்பிட்டது. மனைவியோ, இது என்ன புதுவிதமாக உள்ளது என்று,
அந்த டைவர்ஸ் கோர்ட்டின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் CRP என்னும் ரிவிஷன் வழக்குப் போட்டார்.
அந்த வழக்கில்
ஐகோர்ட், இந்து திருமணச் சட்டத்தில் உள்ள பிரிவு 14(1)ஐ அலசியது.
Sec.14(1) of Hindu
Marriage Act 1955:
It shall not be
competent for any Court to "entertain"
any petition for dissolution of marriage, unless on the date of petition, one
year has elapsed since marriage.
Provided
-- the Court may, upon application made to it, allow a petition to be presented before one year has lapsed since
marriage, on the ground that the case is one of exceptional hardship to the
petitioner or of exceptional depravity on the part of the respondent.
இதில் entertain என்று உள்ள வார்த்தையை எடுத்துக்
கொண்டு, "வழக்கை முழு விசாரனை
செய்வதுதான் entertain என்றும்", வழக்கை கோர்ட்டில் தாக்கல் மட்டும்
செய்து வைப்பது இதில் வராது என்றும், எனவே அந்த வழக்கு கோர்ட்டில் தாக்கல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, விசாரனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும்
கூறிவிட்டது.
இந்த
சட்டப்படி, திருமணமுறிவு என்னும் டைவர்ஸ் வழக்கை, திருமணம் நடந்த
ஒருவருடகாலத்துக்குப் பின்னரே கோர்ட்டில் போடமுடியும் என்பது, "விசாரிக்க
முடியும்" என்ற ரீதியில் உள்ளதாகவும், யாராவது வெளிநாடு செல்லவேண்டிய அவசர,
அவசிய நிலை இருந்தால், அவர் ஒருவருட காலத்திற்குள் வழக்கை மட்டும் தாக்கல்
செய்துவிட்டுச் செல்லலாம் என்றும், ஒருவருட முடிவில் விசாரித்து தீர்ப்பு
வழங்கலாம் என்றும் பொருள்படும் தொனியில் இந்த சட்டப்பிரிவு உள்ளதாக கருதவேண்டி
உள்ளது.
.
No comments:
Post a Comment