Wednesday, May 27, 2015

Simmons Case

Simmons Case:
சைமன்ஸ் வழக்கு; (அமெரிக்க சிறுவனின் வழக்கு);
கிறிஸ்டோபர் சைமன் என்பவன் ஒரு சிறுவன்; 17 வயது ஆகிறது; அவன் ஒரு கொடுமையான குற்றத்தை செய்கிறான்; அவனை போலீஸ் பிடித்து கிரிமினல் வழக்கு போடுகிறது; ஜூவனைல் கோர்ட்டின் (சிறுவர்களின் குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்) விசாரனை முடிவில், அவனின் செயல் கொடூரமானது என்றும், அதனால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கலாம் என்று கீழ் கோர்ட் தீர்ப்பு கொடுக்கிறது; அதை எதிர்த்து அவன் அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்கிறான்; அப்பீல் கோர்ட்டான மிசோரி சுப்ரீம் கோர்ட்டும் அவனது மரண தண்டனையை உறுதி செய்கிறது;
எனவே, அவன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல் அப்பீல் செய்கிறான்; அதில் அவன் வக்கீல் சொல்லும் காரணம்: "இந்த குற்றம் நடக்கும்போது சிறுவனுக்கு 17 வயதுதான்; சிறுவன் என்பதால், அவனுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்பதே சட்டம்; அது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது மற்றும் 14வது திருத்த சட்டத்திற்கு எதிரானது; எனவே தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்."
இதற்கு முன் நடந்த வேறுஒரு வழக்கின் தீர்ப்பை பார்க்கிறது; அது ஸ்டான்ட்போர்டு vs. கென்டுகி வழக்கு (492 U.S. 361 (1989): அதில்8வது திருத்த சட்டத்தின்படி (அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம்) சிறுவனை தூக்கிலிட சட்டம் இடம் கொடுக்கவில்லை;
மற்றொரு வழக்கும் ஆராயப்படுகிறது; பென்றி -எதிர்- லைநாவ் வழக்கு; இதில் குற்றவாளி ஒரு பைத்தியம்; அதிலும் அந்த பைத்தியத்துக்கு தூக்கு கொடுக்க அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று 1989ல் முடிவாகியுள்ளது;
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்:-
"குற்றம் செய்த சிறுவனை தூக்கில் போடலாமா? அவனுக்கு, தான் ஒரு மோசமான குற்றத்தை செய்கிறோம் என்ற தெளிவான அறிவு இருக்கும் என நாம் நம்பலாமா? சிறுவனுக்கு எப்படி அந்த அறிவு தெரியும்? அறியாச் சிறுவனின் தவறு, ஒரு நடத்தை தவறுதானே ஒழிய, இது குற்றத்தவறாக எடுத்துக் கொள்ள முடியாதே? ஒரு குழந்தை தவறு செய்வதை தாய் மன்னிப்பது போல, அறியாச் சிறுவனின் தவறை மன்னித்து அவனை நல்வழிப் படுத்துவதுதானே நாகரிக உலகின் வாழ்வுமுறை; மனிதனின் நெற்றிப்பகுதியில் முன் மூலையின் ஒரு சிறுபகுதிதான் காரண-காரியல்களை அறியச் செய்யும் ஆற்றல் கொண்டது; அதாவது நல்லது எது, கெட்டது எது, என்ற உலக ஞானத்தை உணர்த்தும்; அது தடுமாறி விட்டால், மனிதன் எந்த தவறையும் துணிச்சலுடன் செய்வான்சிறுவர்களுக்கு இது வளர்ச்சியடையாமல் இருக்கலாம்; அதற்காக அவர்களை தூக்கிலிடுவது எந்தவகை நியாயம்! ஆனாலும், தூக்கில்தான் இடவேண்டும் என்று வாதாடுகிறவர்கள் சொல்லும் காரணம், "அந்த வீணாப்போன விஞ்ஞானத்தை சொல்ல வேண்டாம்; சிறுவர்களுக்கு, குறிப்பான, 16, 17 வயது இளையவனுக்கு, நல்லது கெட்டது தெரியும், அவன் மூளை வளர்ச்சி அடைந்தே இருக்கிறது; வளர்ப்பு முறையும் இதை சொல்லிக் கொடுத்தே இருக்கிறது; கொலை செய்யும் சிறுவன், அதன் காரண-காரியத்தை அறிந்தே செய்கிறான்; அவன் ஒரு வயதுக்கு வந்தவனின் மனநிலையையே கொண்டிருக்கிறான்; அவனை இளையவன், ஜூவனைல், என்றெல்லாம் சின்னக் குழந்தையாகப் பார்க்க வேண்டாம்! இந்த வாதம் சரி என்று 2003ல் அமெரிக்கா 2 சிறுவர்களுக்கு மரணதண்டனை கொடுத்துள்ளது; இதற்கு முன் 2000த்தில் 7 சிறுவர்களை மரணதண்டனை கொடுத்துள்ளது; 1976ம் வருடத்திலிருந்து அமெரிக்காவில் மொத்தம் 7 மாநிலங்கள் மட்டுமே சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது;
பலநாடுகள் இதை எதிர்த்து, சிறுவர்களுக்கு மரணதண்டனை என்பது மனிதஉரிமை மீறல் என்று கண்டித்துள்ளது; மேற்கு ஐரோப்பிய நாடுகள், மரண தண்டனையே வேண்டாம் என்று நீக்கிவிட்டன;
எனவே அமெரிக்கா போன்ற பெரிய ஜனநாயக நாடு இந்த மரணதண்டனையை சட்டமாக தொடரக் கூடாது, அது நாட்டுக்கு ஒரு அவமானம் என கருதவேண்டும் என முன்னர் பல வழக்குகளில் கருத்து சொல்லியுள்ளது;
இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட், "சிறுவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்தான்; அதில் குழப்பம் இல்லை; ஆனால், சிறுவன் என்பவன் 18 வயது முடிவடையாதவன் என்று இருப்பது உறுத்தலாக இருக்கிறது", என்றும், "18 வயது முடிந்து ஒரு மாதம் ஆனவனும், 17 வயது முடிந்து 11 மாதம் ஆனவனும் ஒரு கொடுமையான குற்றத்தை செய்கிறார்கள் என்றால், 18 வயது முடிந்தவனுக்கு மரண தண்டனை உண்டு: மற்ற சிறுவனுக்கு இல்லை; சில மாதங்களே வித்தியாசத்தில் சட்டம் மாறிவிடுகிறது என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இந்த உதாரணத்தை கொடுத்திருக்கிறது:
எனவே சிறுவன் என்பதற்கான வயதை குறைப்பதே சாலச் சிறந்தது என்று கருத்தும் சொல்லி உள்ளது;


No comments:

Post a Comment