Broker
புரோக்கர்:
1950ல் நடந்த வழக்கு;
சொத்தின் உரிமையாளர், தன் சொத்தை
விற்றுத்தரும்படி ஒரு புரோக்கரை நியமித்து அவருக்கு லெட்டர் கொடுக்கிறார்;
"சொத்தின் விலை ரூ. ஒரு லட்சம்; அதற்குறிய புரோக்கர்
கமிஷன் ரூ.1,000/-;
அதற்கு மேல் விற்பனை செய்து கொடுத்தால், அந்த அதிகபட்சத் தொகையில்
உனக்கு 25% ஸ்பெஷல் கமிஷன் தனியாக தருகிறேன்; இந்த டீல்
இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு மட்டுமே" என்று புரோக்கருக்கு சொத்தின்
உரிமையாளர் லெட்டர் கொடுக்கிறார்;
இரண்டு பேர் வாங்குவதற்கு முன் வருகிறார்கள்; அவர்கள் ரூ.1,10,000/- க்கு வாங்கிக் கொள்ள முன்வருகிறார்கள்; லெட்டர் கொடுக்கிறார்கள்;
இதற்குள் ஒருமாதம் முடிவடைந்து விடுகிறது; எனவே
சொத்தை விற்பவர், வாங்க வந்த நபரின் நாமினியிடம் (அவருக்காக
வேறு ஒரு நபர்) ரூ.1,05,000/- க்கு
அக்ரிமெண்ட் போட்டுக் கொள்கிறார்; கிரயப் பத்திரமும் எழுதிக்
கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டார்;
இதில், சொத்தை விற்றவர் ஏதோ தில்லுமுல்லு செய்திருப்பதாக
புரோக்கருக்கு தெரியவருகிறது; தனக்கு கமிஷனும் கிடைக்கவில்லை;
அவருக்கு கொடுத்த லெட்டர்படி, ஒரு மாதம்
முடிந்துவிட்டது; இருந்தாலும், அதே
பார்ட்டியின் பினாமிக்குத்தான் விற்பனை ஆகியுள்ளது; எனவே
எனக்கு சேர வேண்டிய கமிஷன் தொகையை கொடுக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு
போடுகிறார்;
கல்கத்தா ஹைகோர்ட்டின் ஒரு நீதிபதி கோர்ட்டின்
தீர்ப்பு: கமிஷன் ஏஜெண்டை நியமித்து கமிஷன் தருவதாக லெட்டரும் கொடுத்து, அவர் ஒரு பார்ட்டியை
ஏற்படுத்தி கொடுத்து, அவரும் வாங்குவதற்கு சம்மதமும்
கொடுத்திருக்கிறார்; எனவே புரோக்கருக்கு கமிஷன் கிடைக்க
உரிமையுண்டு: வாங்குபவர் வேறு ஒரு நபர் பெயருக்கு வாங்கினாலும், புரோக்கர்தான் இந்த வியாபாரத்தை முடித்துள்ளார்; எனவே
அவருக்குறிய கமிஷன் அவருக்கு சேர வேண்டும்;
அதை எதிர்த்து எட்டு நீதிபதிகள் கொண்ட கல்கத்தா
பெரிய பெஞ்ச் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார்கள்;
அந்த அப்பீல் கோர்ட் தீர்ப்பு, "வாங்குபவர், முதலில் ரூ.1,10,000/-க்குத்தான்
லெட்டர் கொடுத்திருக்கிறார்: பின்னர், கமிஷன் கொடுக்க
வேண்டும் என நினைத்து, வேறு ஒரு பினாமி பெயரில் ரூ.1,05,000/- க்கு வாங்கி உள்ளார்; இதில், வாங்குபவருக்கு ரூ.5,000
லாபம்; விற்பவருக்கு மொத்த புரோக்கர் கமிஷனும் லாபம்;
(லாபம் கிடைத்தால், அடுத்தவரை ஏமாற்றலாம்போல);
ஆக இதில் ஏமாற்று வேலை நடந்துள்ளது தெரியவருகிறது; வேறு ஒரு பார்ட்டிதான் சொத்தை வாங்கி இருக்கிறார்: எனவே கமிஷன் கொடுக்க
முடியாது என்ற வாதத்தை ஏற்கமுடியாது; அதிக தொகைக்கு
புரோக்கர் ஒரு பார்ட்டியை கூட்டிவந்து லெட்டரும் வாங்கிக் கொடுத்திருக்கும்போது,
ஏன் அதைவிட குறைந்த விலைக்கு வேறு ஒருவருக்கு விற்க வேண்டும்?
தில்லு முல்லு!
எனவே புரோக்கருக்கு கமிஷன் கிடைக்க உரிமையுண்டு
என அப்பீல் அனுமதிக்கப்பட்டது;
AIR 1950 SC 15 Abdulla Ahmed vs Animendra Kissen Mitter.
No comments:
Post a Comment