US Constitution – part-3
அரசியலைமைப்பு சட்டம்
என்பதே மக்களின் அடிப்படை உரிமைகளை கொண்டுள்ளதால், அந்த
சட்டத்தை விளக்குவதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு.
அமெரிக்க அரசியல்
சாசன சட்டத்தை முதன்முதலில் சட்டமாக கொண்டுவரும்போது, அந்த சட்டத்தில் உள்ளவற்றை விளக்குவதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம்
இருக்கிறதா, இல்லையா என்று அந்த அமெரிக்க சுப்ரீம்
கோர்ட்டுக்கே தெரியாதாம். பின்னர் வந்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
இதை துணிச்சலாக கொண்டு வந்து வெற்றி கண்டார். அதுமுதல் சட்டங்களை அலசி ஆராய்து சரி,
தப்பு என்று சொல்லும் ரெவ்யூ உரிமை Judicial Review வந்தது. அது வந்தபின்னர்தான்,
சட்டம் சரியா தப்பா என்று அடிப்படை சட்டமான அரசியலைமைப்பு
சட்டத்துடன் உரசிப் பார்த்து சொல்ல வழிகிடைத்தது.
ஆனாலும், சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் கொடுக்கும் தீர்ப்பின் வழிமுறையை அதேபோன்ற
மற்றொரு வழக்கில் உபயோகிக்கலாம்.. இதை Precedent என்பர். ஏற்கனவே
ஒரு சட்ட முடிவை எடுத்திருந்தால், அதையே சட்டமாக
அங்கீகரித்து அதற்குபின் வரும் மற்ற வழக்குகளிலும் உபயோகிக்கலாம் என்று
சொல்லப்பட்டுள்ளது. இந்த கொள்கையை Stare decisis என்கின்றனர்.
உச்ச நீதிமன்றங்கள் எடுக்கும் முடிவும் சட்டமாகும் என்பது நடைமுறை. இதை பொதுச்
சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில் உபயோகிப்பர். மற்ற நாடுகளில், (மதச் சட்டங்களை பின்பற்றும் நாடுகளில்) இது பின்பற்றப்படாது. நெப்போலியன்
சிவில் கோடு என்று 1804 ல் நெப்போலியன் உருவாக்கியது அதில் நீதிமன்றங்கள்
முன்-முடிவை (ஏற்கனவே எடுத்த முடிவை) பின்னர் வழக்குகளில் உயோகிக்க முடியாது.
**
No comments:
Post a Comment