US
Constitution -part-4
அமெரிக்க அரசியல் சாசன
சட்டம்
ஆர்ட்டிகிள்-1ல் காங்கிரஸ்
என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தபட வேண்டும் என்றும், அதில்
செனட்டர்கள் இருக்கவேண்டும் என்றும், ஒரு மாநிலத்துக்கு இரண்டு
செனட்டர்கள் வீதம், அமெரிக்காவில் உள்ள மொத்த 50 மாநிலங்களில்,
மாநிலத்துக்கு இரண்டு செனட்டர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும் என்றும், அவர்கள் மேல்சபை உறுப்பினர்கள் என்றும்,
அது இல்லாமல் எம்.பி.க்கள் ஒவ்வொரு எம்பி தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 435 எம்பிக்கள் உள்ளனர். இதை மக்கள்சபை
அல்லது கீழ்சபை என்பர்.
இந்த இரண்டும் சேர்ந்ததுத்தான்
காங்கிரஸ். இந்த காங்கிரஸுக்கும்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. அதை மாற்ற வேறு
யாருக்கும் அதிகாரமில்லை. ஆனாலும், அது அமெரிக்க
அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தனது
Judicial Review அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த சட்டம் சரியா தவறா என்று கூறும்.
எட்டாவது திருத்த சட்டப்படி, ஒவ்வொருவருக்கும் தண்டனை என்பது கொடூரமானதாகவோ இயல்புக்கு மாறாகவோ இருக்க கூடாது
என்று திருத்த சட்டத்தில் உள்ளது. அப்படியென்றால் கொலைக் குற்றம் புரிந்தவன் பைத்தியம்
என்று தெரிந்தும் அவனை தூக்கில் போடலாமா என்ற கேள்வி வருகிறது. இது 8வது திருத்தத்தில்
சொல்லியபடி கொடூரம் என்று எடுத்துக் கொள்ளலாமா.
ஒரு வழக்கு வருகிறது;
Atkins
v. Virginia 536 US 304 (2002)
அட்கின்ஸ் வழக்கில், 18 வயது சிறுவன்கள் இருவர் (ஒருவர்
அட்கின்ஸ், மற்றவர் அவரின் நண்பர் ஜோன்ஸ்). அவர்கள் இருவரும்
சாராயம் குடித்துவிட்டு, கஞ்சா பிடித்துக் கொண்டு திரிகிறார்கள்.
வழியில் ஒரு ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் நபரை வழிமறித்து அவரிடமிருந்து பர்ஸ் பிடுங்கி
பார்க்கிறார்கள், 60 டாலர் பணம் மட்டுமே இருக்கிறது, பிடுங்கிக் கொள்கிறார்கள். அவரை பக்கத்ததிலுள்ள ஏடிஎம்-க்கு கூட்டிச் சென்று
அவர் கணக்கிலிருந்து 200 டாலர் பணத்தை எடுக்கச் சொல்லி பிடுங்கிக் கொண்டார்கள். அத்துடன்
விடாமல், அவரை வெகுதூரம் காரில் கூட்டிக் கொண்டுபோய்,
அவரை எட்டுமுறை சுட்டு கொலை செய்கிறார்கள். ஏடிஎம்-ல் இருந்த சிசிடிவி-யில்
கிடைத்த உருவங்களை வைத்து இவர்கள் இருவரையும் போலீஸ் பிடித்துவிடுகிறது. விசாரனையில்
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்கிறார்கள், நான் சுடவில்லை அவன்தான்
சுட்டான் என்று இருவருமே மற்றவரை குற்றம் சொல்கிறார்கள். துப்பாக்கியின் விசையை தட்டிவிட்டது
அட்கின்ஸ்-தான் என்று முடிவானது. தீர்ப்பில் அட்கின்ஸ் கொடூரமான கொலைபாதக கொலையை செய்திருக்கிறான் என்று ஜூரிக்கள் சொல்லி விட்டார்கள்.
அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கின்றது கோர்ட். அவனின் வக்கீல் ஒரு வாதததை வைக்கிறார்.
அவன் பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டி விட்டார்கள். அவனது I.Q. அறிவுத்திறன் மிகக் குறைவாக 59 தான் இருக்கிறது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளார்கள்.
அறிவு குறைவாக இருப்பவன், தான் என்ன செய்கிறோம் என்பதை அறிய மாட்டான்.
எனவே அவனை தூக்கிலிடக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டம்
8-வது திருத்தத்தின் படி, கொடூர தண்டனை விதிக்க அரசாங்கத்துக்கு
அதிகாரமில்லை. அதை வெர்ஜீனியா மாவட்ட கோர்ட்
ஏற்றுக் கொள்ளவில்லை. தூக்குத்தான் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டது,
அவனுக்காக, வெர்ஜீனியா மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார்கள். (அமெரிக்காவில்
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சுப்ரீம் கோர்ட் உள்ளது; இந்தியாவில்
அது உயர்நீதிமன்றம் (ஐகோர்ட்) என்ற பெயரில் உள்ளது.)
மாவட்ட கோர்ட் சொன்ன தூக்குத்தண்டனை
தீர்ப்பு சரிதான் என்றே தீர்ப்பு கூறியது.
அந்த தீர்ப்புக்குமேல், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறது வழக்கு. இங்கு வழக்கு போகவேண்டும்
என்றால், அமெரிக்க அரசியல் சாசன சட்டம் மீறப்பட்டிருக்கு வேண்டும்.
அட்கின்ஸ் வழக்கில் 8-வது திருத்தத்தில் சொல்லியுள்ள சட்டத்தை மீறி, கீழ்கோர்ட்டுகள் தண்டனை கொடுக்கிறது. பைத்தியக்காரனை தூக்கிலிட்டால்,
அது 8-வது திருத்தத்துக்கு எதிரான கொடூர தண்டனை ஆகும். அதைத்தான் 8-வது
திருத்தம் தடை செய்கிறது. அவ்வாறு ஒரு கொடூர தண்டனையை கொடுக்க முடியாது. அப்படி ஒரு
சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் சபை சட்டமாக நிறைவேற்ற அமெரிக்க காங்கிரஸ்க்கு அதிகாரமில்லை
என்று வாதிடுகிறார் அட்கின்ஸ்-ன் வக்கீல்.
அப்போது அமெரிக்க சுப்ரீம்
கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் வில்லியம் ரென்குவெஸ்ட். அவருடன் மற்றும் 8
துணை நீதிபதிகளும் சேர்ந்து இந்த வழக்கை விசாரிக்கிறார்கள். 6-க்கு 3-ஆக நீதிபதிகள்
கருத்து மாறுபாடு ஆகிறது. 6 நீதிபதிகளின் தீர்ப்பு என்னவென்றால்: வெர்ஜீனியா மாநில
சட்டப்படி பைத்தியக்காரனையும் தூக்கில் போடலாம் என்று இருந்தாலும், அது 8-வது திருத்தத்துக்கு எதிரானதே. எனவே இந்த வழக்கை திருப்பி கீழ்கோர்ட்டுக்கே
அனுப்புகிறோம். வெர்ஜீனியா சுப்ரீம் கோர்ட் அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் திருத்தம்
8-ன்படி விசாரித்து மறுதீர்ப்பை அளிக்க வேண்டும் என்று கூறினர்;
மற்ற 3 நீதிபதிகளும் எதிர்
தீர்ப்பு கொடுக்கிறார்கள்: அதன்படி, அந்த மாநிலத்தில்
அப்படி சட்டம் இருப்பதால் அதை நிறைவேற்றலாம் என்று கூறுகிறார்கள்.
எனவே வழக்கை மறுபடியும்
விசாரிக்கிறார்கள். அவனுக்கு உண்மையில் பைத்தியம்தானா என்றும் விசாரனை நடக்கிறது. அதில்
தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்கினர்.
**
No comments:
Post a Comment