மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-4
அதேபோல,
இந்தியாவில் பிரிட்டீஸ் அரசு காலத்திலேயே இந்த இந்து சட்டம் 1956 வருவதற்கு
முன்னரே, 1890-லிருந்து ஒரே சட்டம் இருந்து வருகிறது. இன்றும் அதுதான் நடைமுறையில்
இருக்கிறது. இதற்கு கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890 என்று பெயர். இது எல்லா
மதத்தினருக்கும் உள்ள ஒரு பொதுவான சட்டம். அதாவது பொதுவாக ஒரு மைனரின் சொத்தை
எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும், (மைனரைப்
பாதுகாப்பது என்றால், அவரை படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது, நோய்களிலிருந்து
காப்பாற்றுவது போன்றவை), மைனரின் சொத்துக்களை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரின்
சொத்தை விற்க வேண்டிய நெருக்கடி வந்தால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக
சொல்லி உள்ளது இந்த 1890 சட்டம்.
இந்த
1890 சட்டப்படிதான் எல்லா மைனர்களின் உடல் பாதுகாப்பும், சொத்த பாதுகாப்பும் இருக்க
வேண்டும். அந்த மைனர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த 1890 சட்டம்தான்
அவருக்கு வழிகாட்டி. அப்படியென்றால், இந்துமத மைனர்களுக்கு தனியே ஒரு சட்டம்
இருக்கிறதே. இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 அது எதற்கு என்ற
கேள்வி வரலாம். ஆம். இந்துமத மைனர்களுக்கு இந்த இந்து மைனாரிட்டி &
கார்டியன்ஷிப் சட்டம் 1956ம் அதனுடன் சேர்ந்து பிரிட்டீஸ் காலத்து பழைய சட்டமான
கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890ம் சேர்ந்தே நடைமுறையில் இருக்கும்.
**
No comments:
Post a Comment