மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-6
இந்து
மைனர்களுக்கு கார்டியன்கள்;
18
வயதுக்கு குறைந்த வயதுடைய மைனருக்கு கார்டியன்களை, இரண்டு வகையாக சொல்கிறார்கள்.
ஒன்று, இயற்கை கார்டியன்; மற்றொன்று உயில்மூலம் ஏற்பட்ட கார்டியன். இயற்கை
கார்டியன் என்பவர் அந்த மைனர் குழந்தையின் தந்தை மற்றும் தந்தைக்கு அடுத்த அந்த
மைனரின் தாய் ஆகிய இருவரையும் இயற்கை கார்டியன் என்கிறார்கள். இயற்கை கார்டியனான
தந்தை ஏதாவது ஒரு உயில் எழுதிவைத்து அதன்படி அவரின் இறப்புக்குப் பின்னர் அவரின்
மைனர் குழந்தைக்கு யாரையாவது அவர் நம்பும் நபரை கார்டியனாக இருந்து மைனரையும்
அவரின் சொத்துக்களையும் பாதுகாத்து அவர் மேஜர் வயதை அடைந்தவுடன் அவரிடம்
ஒப்படைக்கும்படி ஒரு உயில் எழுதி வைத்திருப்பார். அப்படி உயில் மூலம்
நியமிக்கப்பட்ட கார்டியனை டெஸ்டமெண்டரி கார்டியன் அல்லது உயில் கார்டியன் என்பர்.
டெஸ்ட்டமெண்டரி என்றால் உயிலை விட்டுச் சென்றவர் என்று பொருள்.
இந்த
இரண்டு வகை கார்டியன்கள் இல்லாமல் மற்றொரு வகை கார்டியனும் உண்டு. அது கோர்ட்டால்
நியமிக்கப்படும் கார்டியன். இந்த வகை கார்டியன்கள் இல்லாமல் பல காலத்தில்
(1956க்கு முன்னர்) வேறு ஒருவகையான கார்டியனும் இருந்தது. அந்த கார்டியனுக்கு டி-பேக்டோ
கார்டியன் de-facto என்று பெயர். அந்த டி-பேக்டோ
கார்டியனை இப்போது சட்டம் அனுமதிக்கவில்லை.
ஆனால்,
இதற்கு முன்னர் டி-பேக்டோ கார்டியனான அந்த மைனரின் சகோதரர், பெரியப்பா, சித்தப்பா,
தாத்தா, பாட்டன், மாமா, போன்றோர், அந்த மைனரின் உடலுக்கு கார்டியனாக (guardian
to the person) இருந்தார்கள். அவர்கள் மைனரின் சொத்துக்கு
கார்டியனாக இருக்க முடியாது. இப்போது இந்த டி-பேக்டோ கார்டியன்கள் சட்டப்படி
செல்லாது. இயற்கை கார்டியனாக தந்தை, தாய் மட்டுமே கார்டியனாக இருக்க முடியும்.
அப்படி இல்லையென்றால், கோர்ட் மூலம் கார்டியனை நியமிக்கலாம். கோர்ட்டானது, யார்
சரியான கார்டியன் என முடிவு செய்து நியமிக்கும்.
**
No comments:
Post a Comment