மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-7
இயற்கை
கார்டியன்:
இயற்கை
கார்டியனாக (Natural Guardian) முதலில் தந்தையும், தந்தைக்கு
பின்னர் தாயும் கார்டியன் என்று சட்டம் சொல்கிறது. எப்போது தந்தை கார்டியன்,
எப்போது தாய் கார்டியன் என்றும் பிரித்துச் சொல்லவில்லை. ஆனாலும், பிறந்த
குழந்தையிலிருந்து அதன் ஐந்து வருடங்களை வரை கண்டிப்பாக அந்தக் குழந்தை தன்
தாயிடம்தான் இருக்க வேண்டும் கூறுகிறது. தாய் கார்டியன் என்று சொல்லவில்லை. தாயின்
பாதுகாப்பில் இருக்கும் அந்தக் குழந்தை என்றுதான் சொல்கிறது. தந்தை மதம்
மாறிவிட்டாலும், சந்நியாசியாக ஆகி விட்டாலும் அவரின் மைனர் குழந்தைக்கு கார்டியனாக
இருக்க முடியாது.
1980ல்
ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், “தந்தை தான்தோன்றித் தனமாக திரிந்து கொண்டு
குழந்தையை பராமரிக்காமல் அவரின் கடமையை செய்யாமல் இருந்தாலும் அவர் உயிருடன்
இருக்கிறார் என்றால் அவரேதான் கார்டியனாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக
மைனரின் தாய் கார்டியனாக இருக்க முடியாது என்று ஒரு தீர்ப்பை கொடுத்தது. கேரளா
உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், மைனர் குழந்தை தன் தாயிடம் தனியே பிரிந்து இருந்தாலும்
அந்த தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது. அதன் தகப்பன்தான்
கார்டியனாக இருக்க முடியும். டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், கோர்ட்
உத்தரவின்படி தகப்பன் கார்டியன் நிலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால்தான், அந்த
குழந்தையின் தாய் கார்டியனாக இருக்க முடியும் என்று சொல்லப் பட்டுள்ளது.
**
No comments:
Post a Comment