Wednesday, October 21, 2015

வீடு நிலம் விற்பனை--3

வீடு நிலம் விற்பனை--3
அசையாச் சொத்தின் அடுத்த குழப்பத்துக்குப் போவோம்:- ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் மீன்கள் வளர்கின்றன. அதில் மீன் பிடிக்கும் உரிமையை ஒருவர் குத்தகைக்கு வாங்கி உள்ளார். மீன் மட்டும்தான் வாங்கியவருக்குச் சொந்தம். குளம் இருக்கும் நிலமும், அதிலுள்ள நீரும், நிலத்துக்காரரான குத்தகைக்கு விட்டவருக்கே சொந்தம். “நான் உனக்கு மீன்களை மட்டும்தான் பிடித்துக் கொள்ள அனுமதித்தேன். எனவே நீரிலோ, நிலத்திலோ நீ இறங்கக்கூடாது” என்று சொன்னால் அது என்ன உரிமை? எனவேதான், இத்தகைய பலன்களை வாங்கியவர் (மீன் பிடிக்கும் பலன்கள்) அந்த நீரையும், நிலத்தையும் அனுபவிக்க வேண்டி உள்ளதால், “இந்த மீன் பிடிக்கும் உரிமையானது” அசையாச் சொத்து என்றே இந்த சட்டங்கள் கூறிவிட்டன. (மீன் அசைந்தாலும், மீன் பிடிக்கும் உரிமை அசையாது)! நதியில் படகுவிடும் உரிமையும் இதைப் போன்றே அசையாச் சொத்து உரிமையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழைய இந்துச் சட்டத்தில், மொத்தம் நான்குவிதமான சொத்துக்களைச் சொல்கிறது. 1) ஸ்தாவர சொத்துக்கள் (நிலம், வீடு போன்றவை), 2) அடிமைகள், 3) நிபந்தா என்னும் வழிவழிவந்த உரிமைகள் (கோயில்பூசாரி உரிமை போன்றவைகள்), 4) திரவியம் என்னும் நகைகள், பண்டபாத்திரங்கள், ஆடைஅலங்காரங்கள். (There were four kinds of properties, viz. 1) Sthavara (i.e. lands and things connected with lands, 2) Slaves, 3) Nibandha i.e. corrody, and 4) other valuables  called ‘drabya’ like jewellery, utensils, wearing apparel etc.) According to Macnaghten (மேகநாதனாக இருப்போரோ?) in his well-known Principles of Hindu Law, first published in the year 1829, property according to Hindu law was of four descriptions, real, personal, ancestral and acquired. He used the terms. இதன்படி பார்த்தால், இந்த நிபந்தா என்ற வகை உரிமையானது, அரசனிடமிருந்து, சேவைக்காக நிரந்தரமாக பெற்ற உரிமையாகும். Royal Grant என்ற உரிமையில் ஒரு கிராமமே “நிபந்தா” உரிமையாக கிடைத்திருக்கிறது. அதுதான் பின்னர் “இனாம்” அல்லது “மான்யம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகத்துக்காக ஒரு பிராமணருக்கு “நிபந்தா” முறையில் கொடுத்த கிராமத்தை “ஸ்ரோத்திரியம்” என்று பெயரிட்டு இன்றும் அழைக்கிறார்கள். (சென்னையில் சிலபகுதிகளில் இந்த வகையைச் சேர்ந்த கிராமம் Shrotriyam Village இன்றும் உள்ளது).
ஆக, ஒரு நிரந்தர உரிமையும் “அசையாச் சொத்து” என்றே வழங்கி வரப்பட்டுள்ளது. கோயில் பூசாரி உரிமை பரம்பரையாக வரும் என்றால் அது இந்த “நிபந்தா” உரிமையே! தர்மகர்த்தா உரிமையும் அப்படியே! பாரம்பரிய நிர்வாக உரிமையும் அசையாச் சொத்துரிமையே! அப்படியென்றால் இந்த உரிமையானது வாரிசு முறைப்படி தலைமுறைக்கு இருக்கும். இந்த உரிமையை விற்கவும் செய்யலாம். (அரசு வேலையை, சம்பளத்துக்குச் செய்யும் தனியார் வேலையை மட்டும் விற்க முடியாது; மற்ற வேலைகளில் உள்ள உரிமையை விற்பனை செய்யலாம்; அதனால்தான் கோயில்களில் உள்ள Shebait என்னும் கோயில் நிர்வாகி அல்லது கோயில் பூசாரி உரிமையை விற்கலாம் என்று சட்டம் சொல்கிறது.

**

No comments:

Post a Comment