வயதைக்
கணக்கிடுவதில் சிறிய குழப்பம் இருந்து வருகிறது. சட்டபூர்வமாக "ஒரு
நாள்" என்பது அந்த நாள் ஆரம்பிக்கும் நடுஇரவு 12 மணிக்கு ஆரம்பித்து அடுத்து
உள்ள 24 மணி கடந்து வந்த அடுத்த நடுஇரவு வரை ஒரு நாள் ஆகும்.
எனவே
ஒருவருக்கு வயதைக் கணக்கிடும்போது இந்த குழப்பம் ஏற்படுகிறதாம். அவனின் அடுத்த
பிறந்தநாள் வருவதற்கு முதல்நாளே ஒரு வருடம் முடிந்து விடுமாம்.
Rex
v. Scoffin, LR (1930) 1 KB, 741
இங்கிலாந்தில்
1914ல் இருந்த சிறுவர் சட்டப்படி, 21 வயது முடியாதவர் சிறுவர் என்று ஒரு சட்டம் இருந்தது. அப்போது ஒரு
வழக்கு வருகிறது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 வயது ஒரு சிறுவன், 21 முடிந்துவிட்ட பெரியவனா, 21 வயது முடியாத சிறுவனா
என்ற கேள்வி கோர்ட்டுக்கு எழுகிறது.
அந்த
சிறுவன், பிப்ரவரி 17, 1909ல் பிறந்தவன்;
அவன் அந்தக் குற்றத்தை செய்த நாள் பிப்ரவரி 17, 1930. இப்போது அவன் சிறுவனா, பெரியவனா என்ற கேள்வி.
நீதிபதி
சொல்கிறார், "அவனுக்கு 21 வயது முடிந்து,
ஒரு நாள் அதிகமாகி விட்டது; எனவே அவன்
பெரியவன்; சிறுவன் அல்ல; எனவே அவனை
'போர்ஸ்டல்' (Borstal) என்னும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப முடியாது" என்று
தீர்ப்புச் சொல்கிறார்.
எனவே
ஒருவன் அவன் பிறந்தநாளைக் கொண்டாடும் நாளில் அவனுக்கு ஒரு நாள் அதிகமாக உள்ளது
என்று கணக்கில் எடுத்துக் கொள்கிறார்.
In
Halsbury's Laws of England, Simonds Edition, Vol. 37, it is stated thus in
para. 178, page 100:
"In
computing a period of time, at any rate, when counted in years or months, no
regard is generally paid to fractions of a day, in the sense that the period is
regarded as complete although it is short to the extent of a fraction of a day.
Similarly, in calculating a person's age the day of his birth counts as a whole
day; and he attains a specified age on the day next before the anniversary of
his birth day."
**
No comments:
Post a Comment