Hindu
Women property rights
இந்து
பெண்களின் சொத்துக்களில் வாரிசுரிமை:
இந்துக்களுக்கு
தனியே, “சொத்து வாரிசுரிமைச் சட்டம்” உள்ளது; அதற்கு The
Hindu Succession Act 1956 என்று பெயர்;
இந்து
சொத்துரிமையை விளங்கிக் கொள்ள, இதிலுள்ள சில அடிப்படைச் சட்ட நுணுக்கங்களையும்
புரிந்து கொள்ள வேண்டும்;
இந்து
சொத்துக்கள் பல வகைப்படும்:
(1) பூர்வீகச்
சொத்து;
(2) இந்து
ஆணின் தனிச் சொத்து; (இதில் ஒரு இந்து ஆண், தனியே தன் பணத்தைக் கொண்டு கிரயம்
வாங்கிய சொத்தும்; தானமாகவோ, செட்டில்மெண்டாகவோ, யாரிடமிருந்தாவது கிடைத்த
சொத்தும், அடங்கும்);
(3) இந்து
பெண்ணின் சொத்துக்களும் இதேபோல பலவகைப்படும்;
ஒரு இந்து பெண்ணுக்கு சீதனமாக கிடைத்த சொத்து;
ஒரு இந்து பெண் தனியே கிரயமாக வாங்கிய சொத்து;
ஒரு இந்து பெண்ணுக்கு, அவளின் கணவர் மூலமோ,
கணவரின் வழியாகவோ வாரிசு முறையில் கிடைத்த சொத்து;
அதேபோல, ஒரு இந்து பெண்ணுக்கு, அவளின் தாய்,
தகப்பன் மூலம் வாரிசு முறையில் கிடைத்த சொத்து;
இதில்
ஒரு இந்து-ஆணின் சொத்துக்கு தனியே வாரிசுரிமை சொல்லப் பட்டுள்ளது; அதேபோல, ஒரு
இந்து-பெண்ணின் சொத்துக்கு தனியே வாரிசுரிமை சொல்லப் பட்டுள்ளது;
இங்கு
ஒரு இந்து பெண்ணின் சொத்தின் வாரிசு உரிமையைப் பற்றி மட்டும் பார்க்கலாம்:
ஒரு
இந்து பெண், தன் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவளின் சொத்துக்களுக்கு யார்
யார் வாரிசு என்பதைப் பார்க்கலாம்:
அவளின்
தனிச் சொத்தாக இருந்தால்;
1) அவளின்
தனிப்பட்ட சொத்துக்களில், அவள் இறந்தபின், அவளின் கணவர், மற்றும் அவளின்
குழந்தைகள் வாரிசுகளாக அவளின் தனிச் சொத்துக்களை எடுத்துக் கொள்வர்; (அவளின்
சீதனச் சொத்தும், அவளின் தனிச் சொத்து என்றே கருத வேண்டும்);
2) கணவர்
இல்லாவிட்டால், அவளின் குழந்தைகள் எடுத்துக் கொள்வர்;
3) அவளுக்கு
குழந்தைகள் இல்லாவிட்டால், அவளின் இறந்த கணவரின் வாரிசுகள் எடுத்துக் கொள்வர்;
(அதாவது அந்த சொத்து அவளின் கணவர் சொத்தாக கருதப்படும்);
அவளுக்கு
குழந்தை இல்லாமல் அவள் இறந்துவிட்டால்:
அவளுக்கு,
அந்தச் சொத்து, அவளின் கணவர் மூலம் கிடைத்த சொத்தாக இருந்தால்:
4) அவளின்
கணவர் எடுத்துக் கொள்ளலாம்; கணவரும் இல்லை என்றால், இறந்த கணவரின் வாரிசுகள்
எடுத்துக் கொள்ளலாம்; (கணவரின் தாயார், கணவரின் உடன்பிறந்தவர்கள் எடுத்துக்
கொள்ளலாம்);
5) ஆனால்,
அந்த சொத்து, அவளின் தாய், தந்தை மூலம் கிடைத்த சொத்தாக இருந்தால் (அதாவது அவள்
பிறந்த வீட்டில் பாகத்தில் கிடைத்த சொத்தாக இருந்தால்), அவளுக்கு குழந்தை இல்லை
என்பதால், அந்த சொத்து, அவளின் கணவர் உயிருடன் இருந்தாலும் அவருக்குபோகாது: அதற்கு
மாறாக, அவளின் தந்தைக்கு போய் சேரும், அவளின் தந்தை இல்லாதபோது, அவளின் தாய்க்குப்
போய்ச் சேரும்; தாயும் இல்லாதபோது, அவளின் இறந்த தந்தையின் வாரிசுகளுக்குப் போய்
சேரும்;
குழந்தை
இல்லாத ஒரு இந்து பெண் இறந்துவிட்டால், சொத்து எங்கிருந்து அவளுக்கு கிடைத்ததோ,
அவர்களுக்கே திரும்பப் போய் சேரும் என்பது இதிலிருந்து தெளிவாகும்;
**
No comments:
Post a Comment