Monday, June 27, 2016

டெனன்சி-இன்-காமன் Tenancy-in-Common

டெனன்சி-இன்-காமன் Tenancy-in-Common
கூட்டுப் பங்குரிமை என்னும் ஜாயிண்ட் டெனன்சி Joint Tenancy என்ற முறைக்கு எதிரானது இந்த டெனன்சி-இன்-காமன் Tenancy-in-common. இரண்டுமே கூட்டாக சொத்தை அனுபவிப்பதுதான்; ஆனால் ஜாயிண்ட் டெனன்சியில் ஒருவர் இறந்து விட்டால், மற்றவர் அந்த சொத்தை முழுதாக அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம்; ஆனால் டெனன்சி-இன்-காமன் முறையில்  கூட்டுச் சொத்தில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரின் பங்கு அவரின் வாரிசுகளுக்குப் போய் சேரும்; 1956 முன்பு வரை இந்துக்களின் சொத்துக்கள் ஜாயிண்ட் டெனன்சி முறைப்படிதான் இருந்தது; 1956ல் புதிதாக இந்து வாரிசுரிமைச் சட்டம் வந்தது; அதன்படி, கூட்டுப் பங்குரிமை சொத்தில் ஒருவர் இறந்துவிட்டால், அவரின் பங்கு அவரின் வாரிசுகளுக்குப் போய் சேரும் என்று சட்டத்தை திருத்தி விட்டார்கள்; இப்போது இந்த புதிய முறைப்படியே டெனன்சி-இன்-காமன் சட்ட முறைப்படியே இருக்கிறது;
 **


No comments:

Post a Comment