Wednesday, July 27, 2016

அமெரிக்க அரசியல் சாசனம்-4

அமெரிக்க அரசியல் சாசனம்-4
செனட்டர் (Senator) என்ற வார்த்தையானது, லத்தீன் மொழியில் உள்ள செனட்டஸ் என்ற வார்த்தையிலிருந்து வந்ததாம்; லத்தீன் மொழியில் செனட்டஸ் என்றால் “பெரியவர்கள்” (Elders) என்று பொருளாம்; செனக்ஸ் என்றால் வயதானவர் என்று அர்த்தமாம்!
அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஆர்ட்டிகள்-1 பிரிவு-3-ல் செனட்டர் ஆவதற்கு மூன்று தகுதிகள் சொல்லப்பட்டுள்ளன; 1) குறைந்த பட்சம் 30 வயதைத் தாண்டி இருக்க வேண்டும்: 2) குறைந்த பட்சம் 9 ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்; 3) அந்த மாநிலத்தில் அவர் அப்போது வசித்துக் கொண்டு வர வேண்டும்;

No comments:

Post a Comment