அமெரிக்க அரசியல் சாசனம்-3
இந்த முறையைத்தான், அமெரிக்கா, சுதந்திரம் அடைந்து 1789-ல் அமெரிக்க
அரசியல் சாசன சட்டத்தைக் கொண்டு
வரும்போதும், கடைப்பிடித்தது; அமெரிக்க மேல்சபைக்கு செனட் என்று பெயர் வைத்துக்
கொண்டது; இதில் 50 மாநிலங்களுக்கும் தலா இருவர் வீதம் மொத்தம் 100 செனட்டர்களை
தேர்ந்தெடுக்கும்; ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பார்; மொத்தமுள்ள 100
செனட்டர்களில் மூன்றில் ஒரு பங்கு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளில் பதவி விலகும்; இதில்
மக்கள் பிரதிநிதிகள் என்னும் எம்பி-க்களைக் கொண்டு தேர்தெடுப்பர்;
இங்கிலாந்தில் இருந்தவரும் இந்த பழமையான முறையானது, ஆதியில் ரோமன்
செனட் சபை பிரதிபலிப்புத்தான் என்றும் சொல்வர்; அமெரிக்காவும், இந்த ரோமன் செனட்
சபை முறையைத் தான் அப்போது நடைமுறைப் படுத்தியதாகவும் சொல்வர்;
ரோமனில் புரூட்டஸ் இந்த முறையைக் கொண்டுவந்ததாகச் சரித்திரம்
சொல்கிறது; இவர் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 500 வருடங்களுக்கு முன்னர்
வாழ்ந்தவர்; அப்போது இருந்த ஒரு ரோமன் மன்னர், ஒரு பெரிய இடத்துப் பெண்ணை
கற்பழித்து விட்டார் என்ற காரணத்துக்காக, அவருக்கு எதிராக புரட்சி செய்த
புரூட்டஸ், அரசரை பதவி இறக்கி விரட்டி விட்டுவிட்டு, இவர் மக்களாட்சி முறையை
கொண்டு வந்தார்; அதில் முதல் ரோமன் கான்சல்-ஆக புரூட்டஸ் நியமிக்கப்பட்டார்;
அவருக்கு கீழ், 300 செனட்டர்கள் இருந்தனர்; இவர்களைக் கொண்ட சபையே நாட்டை ஆண்டது;
மன்னர் ஆட்சி இல்லை; இந்த முறையைத்தான் இங்கிலாந்திலும் அரசருக்கு அதிகாரத்தை
குறைத்து இரு சபைகளைக் கொண்டு ஆட்சி செய்தனர்; அதே முறையைத்தான் அமெரிக்காவும்
பின்பற்றியது; இந்தியாவிலும் இதே இரண்டு சபைகள் முறையே உள்ளது;
No comments:
Post a Comment