Wednesday, July 27, 2016

அமெரிக்க அரசியல் சாசனம்-2

அமெரிக்க அரசியல் சாசனம்-2
இந்தியாவில் உள்ளது போன்றே, மேல்சபை எம்பி-க்கள் என்னும் செனட்டர்கள்; இவர்களின் பதவிக் காலம் ஆறு வருடங்கள்; இந்த 100 பேரில், மூன்றில் ஒரு பங்கு பதவி விலகி, அடுத்த புதிய எம்பி-க்கள் பதவிக்கு வருவர்; ஒரே நேரத்தில் இது கலைந்து விடாது; அதனால்தான் இது நிரந்தர சபை என்றும் சொல்வர்; இந்தப் பழக்கம் இங்கிலாந்து நாட்டில் பழமையாக இருந்து வரும் முறைப்படியே இங்கும் நிரந்தர சபை உள்ளது; இதை House of Commons என்று இங்கிலாந்தில் சொல்வர்;

ஏன் இப்படி குழப்பம் வந்துள்ளது என்றால் --- மக்கள் பிரதிநிதிகள் என்றும், ஹவுஸ் ஆப் காமன்ஸ் என்றும் இரண்டு எம்பிக்கள் இங்கிலாந்தில் உண்டு; இதையேதான் அமெரிக்காவும் பின்பற்றுகிறது; இதையேதான் இந்தியாவும் பின்பற்றுகிறது; ஏனென்றால் – இங்கிலாந்து நாட்டில் அரசருக்கும் மக்களுக்கும் சண்டை; இதில் சமாதானம் ஏற்படுகிறது; அரசருக்கு/ராணிக்கு உள்ள அதிகாரம் குறைக்கப்படுகிறது; மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே சட்டம் இயற்றுவர் என்று கண்டிப்புடன் சொல்கிறார்கள்; அதை ஏற்றுக் கொண்ட மன்னர், தனக்கும் சிறிய அதிகாரம் வேண்டும் என்று பேசி, மன்னருக்கு வேண்டிய ஆட்களை, எம்பி-க்களாக நியமித்துக் கொள்வார்; இதுவே மேல்சபை; கீழ்சபை என்னும் மக்கள் சபை எந்நச் சட்டத்தை இயற்றினாலும், அதை மேல்சபைக்கு கொண்டு வந்து அதன் சம்மதமும் பெற்ற பின்னரே சட்டமாகும்; இது இங்கிலாந்து நடைமுறை; இதன்படி, மக்கள் பிரதிநிதிகள் சட்டம் இயற்றினாலும், காமன் சபை என்னும் மன்னர் சபையில் அதை ஏற்றுக் கொண்டால்தான் அது சட்டமாகும்; இப்படி ஒரு தடுப்பு இல்லை என்றால், மக்கள் சபை, ஒருநாள், மன்னரே தேவையில்லை என்று ஒரு சட்டம் இயற்றி, அவரை விரட்டி விடவும் வாய்ப்பு உண்டு; அதனால்தான், நாட்டுக்கு நலன் கருதி, மக்கள் சபைக்கு அதிகாரம் இருந்த போதிலும், அதை மேல்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு தடையாக வைத்திருந்தார்கள்; 

No comments:

Post a Comment