Wednesday, July 27, 2016

அமெரிக்க அரசியல் சாசனம்-1

அமெரிக்க அரசியல் சாசனம்-1
மிகப் பழமையான அரசியல் சாசனம் என்றுகூடச் சொல்லலாம்; இது 1789-ல் கொண்டு வரப்பட்டது; பழைய அமெரிக்கா பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது; வடபகுதி (இப்போதைய கனடா) பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தது; கிழக்குப் பகுதி (இப்போதைய கிழக்கு அமெரிக்கா) பிரிட்டீஸ் ஆட்சியில் இருந்தது; அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்து இங்கு வாழ்ந்தவர்கள்தான்; ஆனாலும் அவர்களுக்கு என்று தனி உரிமை ஏதும் கிடையாது; இங்கிலாந்து மன்னர்/ராணி ஆட்சி அங்கு இருந்தது; கிழக்கு அமெரிக்காவில் இருந்த மக்கள், தங்களின் சுதந்திரத்துக்காக போராடி அமெரிக்காவை சுதந்திர நாடாக்கினர்; அவர்கள் அமெரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கும்போது, கிழக்குப் பகுதியில் உள்ள மொத்தம் 13 மாநிலங்கள் மட்டுமே இங்கிலாந்து ஆட்சியில் இருந்தது; எனவே முதன் முதலில் 13 மாநிலங்களுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கி, அவர்களுக்கு உரிய அரசியல் சாசன சட்டத்தை வகுத்துக் கொண்டனர்; பின்னரே, அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு, இப்போது அமெரிக்கா என்பது யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டுள்ளது; இந்த 50ல் சில மாநிலங்கள் மிகச் சிறியவை; சில மிகப் பெரியவை;;

அமெரிக்க அரசியல் சாசனச் சட்டப்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரண்டு செனடர்களை தேர்ந்தெடுப்பர்; அப்படியென்றால், 50 மாநிலங்களுக்கும் மொத்தம் 100 செனட்டர்கள் இருப்பர்; இந்தியாவில் இருப்பதைப் போலவே அங்கும் இரண்டு சபைகள் உண்டு; மேல்சபை, கீழ்சபை; இந்த இரண்டுக்கும் சேர்ந்த பெயரே காங்கிரஸ் (கூட்டுசபை); செனட் என்பது மேல்சபை; இது இல்லாமல் கீழ்சபை என்பது மக்களால் தேர்ந்தெடுத்த எம்பி-க்கள்; இவர்களுக்கு ஹவுஸ் ஆப் ரெப்ரசென்டேடிவ் House of Representatives என்பர்; இவர்கள் மொத்தம் 435 பேர்; மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்பிக்கள்; ஆக காங்கிரஸ் என்னும் கூட்டு சபையில் மொத்தம் 100 + 435 = 535 எம்பிக்கள் இருப்பர்; இவர்கள் அதிகாரம் மிக்கவர்கள்; இவர்களே சட்டத்தை இயற்றுபவர்கள்; 

No comments:

Post a Comment