JASTA
(The Justice Against Sponsors of Terrorism Act)
ஜஸ்டா சட்டம்: இதை அமெரிக்கா மிக அவசரமாகக் கொண்டு வந்துள்ளது.
2001-ல் அமெரிக்கா ஒரு துயர சம்பவத்தை சந்தித்தது. உலக நாடுகளே அதிர்ந்து நின்றன!
2001 செப்டம்பர் 11. அந்த நாளை அமெரிக்காவால் மறக்க முடியாது. விமானத்தைக் கடத்தி,
அதைக் கொண்டே, அமெரிக்க இரட்டைக் கோபுரத்தையும், பென்டகனையும் தகர்த்தனர். இதில்
19 நபர்கள் கலந்து கொண்டதாகவும், அதில் 15 பேர்கள் சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்றும் கூறப்படுகிறது; அந்த 15 பேரும் சவுதி அரசாங்கத்தின் உதவியை பெற்றிருந்தனர் என்றும்
குற்றச்சாட்டை அமெரிக்கா வைக்கிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க காங்கிரஸ் சபையில் (செனட் மற்றும்
மக்கள் சபை) ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டது. அதன் பெயர்தான் ஜஸ்டா சட்டம்; அந்தச்
சட்டப்படி அமெரிக்க மண்ணில் நடந்த தீவிரவாதச் செயல்களுக்கு வேறு நாடுகள் துணை போயிருந்தால்,
அதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள், அமெரிக்கா கோர்ட்டில், அந்த வெளிநாட்டின் அரசாங்கத்தின்
மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரலாம் என்பதே அந்தச் சட்டத்தின் சாராம்சம்;
இதைக் கேள்விப்பட்ட சவுதி அரேபிய அரசாங்கம், “இப்படிப்பட்ட
சட்டத்தை அமெரிக்க இயற்றியது, அந்தந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், அதனால்
பெரும் விளைகள் ஏற்பட வாய்ப்பாகும்” என்றும்
கண்டித்துள்ளது; ஒரு நாட்டையே குற்றம் சுமத்தி, அமெரிக்க கோர்ட் விசாரணை செய்வது என்பது,
அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்காத செயல் போல் ஆகும் என்று கண்டித்துள்ளது;
2001 செப். 9 தேதியில் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர அசம்பாவித
நிகழ்வில் ஒரு நேவி கமாண்டர் பேட்ரிக் டண் என்பவர் கொல்லப்பட்டார்; அப்போது அவரின்
மனைவி ஸ்டீபைன் டீசைமன் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்; குழந்தை பிறந்து இப்போது
அந்தக் குழந்தை 15 வயதில் உள்ளது; இந்தக் கோரச் சம்பவத்தில் கணவனை இழந்த அந்த மனைவியும்
அவளின் மகளும், சவுதி அரேபிய அரசிடம் நஷ்டஈடு கேட்டு, அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் வழக்கு
போட்டுள்ளார்; அவர் வழக்கு இந்த ஜஸ்டா சட்டம் வந்தவுடன் உடனடியாகப் போடப்பட்ட வழக்காகும்;
இந்தச் சட்டம் நிறைவேறிய 2 நாட்களில் போடப்பட்ட வழக்கு இது; அதில், தன் கணவர் இறந்ததற்கு
தீவிரவாதிகளே காரணம் என்றும், அந்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்தது சவுதி அரசாங்கம்
என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்;
அமெரிக்க காங்கிரஸ் சபையில் (செனட் சபை, மக்கள் சபை) இரண்டு
கட்சி எம்பிக்களும் உள்ளனர்; ஒபாமா கட்சியான டிமாக்கிரெட்டிக் கட்சி எம்பிக்களும்,
எதிர்கட்சியான ரிபப்ளிக்கன் கட்சி எம்பிக்களும் உள்ளனர்; ஆனால் இதில் கட்சி வேறுபாடின்றி
இரண்டு கட்சி எம்பிக்களும் சேர்ந்தே கூட்டாக இந்த ஜஸ்டா சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்
என்பது அமெரிக்க வரலாற்றில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாம்; அதுவும் அமெரிக்க ஜனாதிபதிக்கு
உள்ள “வெட்டோ” என்னும்
தனி அதிகாரத்தையும் மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நினைத்தால், மூக்கில் விரல்
வைக்க வேண்டிய விஷயமாம்!
இந்த வழக்கு இப்போது கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் நடக்க உள்ளது.
DeSimone v. Kingdom of Saudi Arabia, 16-cv-1944, U.S. District Court, District
of Columbia (Washington).
**
No comments:
Post a Comment