ஜீவனாம்ச உரிமையை விட்டுக் கொடுக்க
முடியாது:
The Bombay High Court has held that
even when a wife enters into an agreement with her husband waiving off her
right to maintenance, the statutory right to maintenance cannot be bartered,
done away with or negatived by the husband by setting up an agreement to the
contrary.
Sec.125 of the Criminal Procedure
Code, 1973.
கிரிமினல் நடைமுறைச் சட்டம் 1973,
பிரிவு 125-ன்படி, ஒருவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்
கொள்ள வேண்டிய பண வசதி இல்லை என்றால், அவர்களின் மகன், கணவன், தகப்பன் என்ற முறையில்
அவர்களின் வாழ்க்கை வசதிக்கு ஏற்ப ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.
(a)
மனைவி
ஜீவனாம்சம் கணவனிடம் கேட்கலாம்.
(b)
மைனர்
குழந்தைகள் ஜீவனாம்சம் தகப்பனிடம் கேட்கலாம். (சட்டபூர்வ குழந்தையாக இருந்தாலும், சட்டபூர்வமற்ற
குழந்தையாக இருந்தாலும்).
(c)
உடல்
ஊனமுற்ற அல்லது மனநிலை பாதிப்பில் உள்ள மகன்/ மகள் ஜீவனாம்சம் கேட்கலாம் (மேஜர் வயதை
அடைந்திருந்திருந்தாலும் பரவாயில்லை).
(d)
பெற்றோர்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தால் அவர்களும் மகனிடம் ஜீவனாம்சம்
கேட்கலாம்.
இந்த ஜீவனாம்ச மனுவை
மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மாதம் தலைக்கு ரூ.500 வரை அவர் உத்திரவு
கொடுக்கலாம். மனு கொடுத்த தேதியில் இருந்து அல்லது அவர் உத்திரவு கொடுக்கும் தேதியில்
இருந்து இதை கொடுக்கும்படி உத்திரவு கொடுக்கலாம். இந்த உத்தரவை மீறினால் ஒரு மாதம்
சிறை தண்டனையும் உண்டு.
மனைவியை தன்னுடன்
வந்து வாழும்படி கணவன் கேட்கலாம். ஆனால் சரியான காரணம் இல்லாமல் அவள் மறுத்தால் ஜீவனாம்சம்
கிடையாது. ஆனால் அவள் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், ஜீவனாம்சம் கொடுத்தே
ஆக வேண்டும். அவன் வேறு ஒருத்தியுடன் வாழ்ந்தால், மனைவி வந்து வாழ மறுப்பது ஒரு சரியான
காரணமே.
மனைவி, வேறு ஒருவருடன்
கள்ள உறவில் இருந்தால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க அவசியம் இல்லை. கணவனும் மனைவியும்
ஒப்புக் கொண்டு பிரிந்து வாழ்ந்தால் ஜீவனாம்சம் கேட்க முடியாது. ஜீவனாம்சம் வாங்கிக்
கொண்டிருக்கும்போது இதுபோல நடந்தால், மாஜிஸ்டிரேட் ஏற்கனவே கொடுத்த ஜீவனாம்ச உத்தரவை
ரத்தும் செய்யலாம்.
**
Sec.25 of the Hindu Marriage Act,
1955 (Permanent Alimony)
இது இல்லாமல், இந்து திருமணச்
சட்டம் 1955-ல் பிரிவு 25-ல் மனைவி நிரந்தர ஜீவனாம்ச உரிமை கேட்கவும் முடியும்.
இதில் டைவர்ஸ் டிகிரி
வாங்கும் போது, சிவில் கோர்ட்டில் இந்த ஜீவனாம்ச மனுவை தாக்கல் செய்யலாம். அதில் மாத
ஜீவனாம்சம், அல்லது வாழ்நாள் முழுவதற்குமான மொத்த ஜீவனாம்சம் முடிவு செய்து கொடுக்கப்படும்.
அந்த பணத்துக்கு சொத்தினை ஒரு பொறுப்பாகவும் கொடுக்க முடியும். இதில் கொடுக்கும் உத்தரவை
அவ்வப்போது நடக்கும் நிலைமையைப் பொறுத்து மாற்றி உத்தரவும் பெற முடியும்.
இந்த உத்தரவுக்குப்
பின்னர், மனைவி மறுமணம் செய்து கொண்டால், ஜீவனாம்சம் வாங்க முடியாது.
Sec.24 of the Hindu
Marriage Act, 1955 (Maintenance pending litigation)
கோர்ட் செலவுகளுக்கும், வழக்கு
நடக்கும்போது வாழ்க்கை ஜீவனத்துக்கும் ஜீவனாம்சம் கேட்கலாம். தனக்கு தனிப்பட்ட வருமானம்
ஏதும் இல்லை என்று சொல்லி இதை கேட்க வேண்டும். இப்படி வரும் மனுவை 60 நாட்களுக்குள்
முடிவு எடுத்து உத்தரவு கொடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்
ஒரு வழக்கில், Ramesh
Chander v. Veena Kaushal, AIR 1978 SC 1807, mere divorce
does not end the right to maintenance. அதாவது டைவர்ஸ் டிகிரி வாங்கி
விட்டதால், அவள் என் மனைவி இல்லை என்று ஜீவனாம்ச உரிமையை மறுக்க முடியாது. டைவர்ஸ்
ஆன மனைவியும் ஜீவனாம்ச உரிமை பெற உரிமை உள்ளவரே. டைவர்ஸ் ஆன மனைவி, அவள் இறக்கும் வரை
(அவள் மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்தால்) அவள் மனைவி என்ற சட்ட உறவு இருக்கவே செய்யும்.
**
மும்பாய் ஐகோர்ட் தற்போது நடந்த
ஒரு வழக்கில் இப்படி முடிவு எடுத்துகள்ளது:
கணவனும் மனைவியும்
கோர்ட் மூலம் ஒப்புதல் டைவர்ஸ் (consent
divorce) செய்து கொண்டனர். அதில் மனைவி, தனக்கு ஜீவனாம்ச உரிமை ஏதும்
வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்.
பொதுவாக இரண்டு பேர்
ஒப்புதலுடன் ஒரு வழக்கை முடித்துக் கொண்டால், அந்த தீர்ப்பின் மீது அப்பீல் போக முடியாது
என்பது சட்ட விதி.
ஆனால், இங்கு, மனைவி,
தான் அப்படி ஜீவனாம்சம் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கவில்லை என்றும், தன்னை ஏமாற்றி
வாங்கிய சம்மத தீர்ப்பு என்றும், எனவே அதை ரத்து செய்யும்படியும் கோர்ட்டில் மனு செய்கிறார்.
அதை கீழ்கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிட்மனு தாக்கல்
செய்கிறார். அதில் –
“ஜீவனாம்சம் வேண்டாம்
என்று மனைவி சொன்னாலும், எழுதிக் கொடுத்திருந்தாலும், அல்லது அப்படி ஒரு தீர்ப்பை கோர்ட்
கொடுத்திருந்தாலும், இவை அனைத்துமே செல்லாது என்றும்; மனைவிக்கு கிடைக்க வேண்டிய ஜீவனாம்ச
தொகையை வேண்டாம் என்று முடிவு செய்ய பார்ட்டிகளால் சட்டப்படி முடியாது என்றும்; அப்படியே
எழுதிக் கொடுத்திருந்தாலும் அதுவும் செல்லாது என்றும்; எப்போது வேண்டுமானாலும், மனைவி,
தனக்கு கிடைக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையைப் பெற சட்டப்படி உரிமை பெற்றவர் என்றும்” மும்பாய்
ஐகோர்ட் தனது தீர்ப்பில் சமீபத்தில் கூறி உள்ளது.
The consent decrees
made by the courts are in effect of nothing but contracts with the seal of the
court super-added to them. Accordingly, if the term of the contract is itself
opposed to public policy then, such term, is void and unenforceable. If the
term is severable then, perhaps, the entire contract may fall.
**
No comments:
Post a Comment