Monday, December 24, 2018

நடுக் கடலில் நடக்கும் குற்றம்


Babu Daldi v. The Queen
Madras High Court Judgment on 26 February, 1882
Judgment by Justice Innes and Justice Muthusamy Iyer.
பாபு தல்தி என்பவர் மங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவரிடம் அரிசி மூட்டைகளை படகில் ஏற்றி அதை கோலிக்கோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் ஒப்படைக்கும்படி அவரின் முதலாளி கூறுகிறார். அவர் அரசி மூட்டைகளை படகில் ஏற்றிக் கொண்டு அரபிக்கடலில் பிரயாணம் செய்கிறார். இது நடந்தது 1869-ல். அப்படியே படகை கடல் வழியாகவே கோவாவுக்குக் கொண்டு சென்று, அங்கு அந்த அரிசி மூட்டைகளை இறக்கி, விற்றுவிடுகிறார்.
எடுத்துச் சென்ற சரக்கை கள்ளத்தனமாக விற்று ஆதாயம் பார்த்து நம்பிக்கை துரோகம் செய்ததால், அவர் மீது ஐசிபி செக்சன் 407-ன்படி வழக்குப் போட்டு, அதில் அவருக்கு நான்கரை ஆண்டுகள் கடும்காவல் சிறையும், ரூ.500 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 15 மாதங்கள் கடுங்காவல் சிறையும் விதித்து 1869-ல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் நடக்கிறது. அதில் கோவாவில் இந்த அரிசியை விற்பனை செய்துள்ளதால், அங்குதான் குற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்பதாலும், அந்த கோவா பகுதி பிரிட்டீஸ் சாம்ராஜ்ஜிய எல்லைக்கு வெளியே இருப்பதாலும், வழக்கு விசாரனையை மறுவிசாரனை செய்து தீர்ப்பு வழங்கும்படி ஐகோர்ட் சொல்லி விட்டது.
இந்த அப்பீல் நிலுவையில் இருக்கும்போது, ஜெயிலில் இருந்து அவர் தப்பி ஓடி விட்டார். சில காலம் கழித்தே அகப்படுகிறார்.
முதல் அப்பீல் வழக்கை விசாரனை செய்த மதராஸ் ஐகோர்ட், “மங்களூர் செசன்ஸ் கோர்ட் இந்த வழக்கை எடுத்து நடத்தி இருக்கிறது. அவர் மங்களூர் தாண்டியவுடன், கடலில் சரக்குப் படகை திசை திருப்பி கோவா கொண்டு சென்று, அங்கு சரக்கை பிரித்து அரிசியை விற்பனை செய்து இருக்கிறார் என்றும், படகை மங்களூர் கடல் பகுதியில் கோவா நோக்கித் திருப்பும் போதே அவரின் கள்ளத்தனம் வெளியாகி விட்டது. சரக்கைத் திருட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் அவர் படகின் திசையை கடலில் மாற்றுகிறார். அங்கு கடலில் அவர் குற்றம் புரிந்தவர் ஆகிறார். எனவே ஐபிசி சென்ஷன்படி இவர் மங்களூர் செசன்ஸ் கோர்ட்டுக்கு விசாரனை வரம்பு உள்ளது என்றும் சொல்லி உள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டத்துக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்கிலேய சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆங்கிலேயச் சட்டப்படி, சரக்கை ஒரு படகில் களவாடிக் கொண்டு செல்லும்போது (larceny by a carrier), எப்போது குற்றம் என்று சொல்ல முடியும் என்றால், அந்த சரக்கை பிரித்து விற்பனை செய்யும்போது மட்டுமே அது குற்றம் ஆகும். வழி மாற்றிக் கொண்டு செல்வது எல்லாம் ஆங்கிலேய சட்டப்படி குற்றம் ஆகாது.
மேலும், அந்த ஆங்கிலேய சட்டப்படி பார்த்தால், சரக்கை கோவா-வில் இறக்கி, பிரித்து விற்பனை செய்து உள்ளார். எனவே கோவா-வில் தான் குற்றம் நிகழ்கிறது. கோவா பகுதி பிரிட்டீஸ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இல்லை (அது போர்ச்சுகீச அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி). எனவே இந்திய தண்டனைச் சட்டத்தை வெளி ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த குற்றத்துக்கு விசாரிக்க முடியாது. ஆனால், மங்களூர் செசன்ஸ் நீதிபதி, Act 1 of 1849-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு, தனக்கு விசாரனை வரம்பு உள்ளது எனக் கருதிக் கொண்டு, அவரை குற்றவாளி என்று தீர்ப்பை வழங்கி உள்ளார்.  அது தவறு. எனவே ஐகோர்ட் மறு விசாரனைக்கு வழக்கை அவருக்கே திருப்பி அனுப்பியது. அந்த மறுவிசாரனை, குற்றவாளி தப்பி விட்டதால் தாமதம் ஆகி விட்டது. மறு விசாரனையில், செசன்ஸ் நீதிபதி, Section 671 Criminal Procedure Code, (Old Code)-ன்படி தனக்கு அதிகாரம் இருப்பதாகச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த சட்டம் Act I of 1849-ன்படி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும், மறுபடியும் இந்த எல்லைப் பிரச்சனைக்காக, இதே வழக்கு திரும்ப மறுவிசாரனைக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில், வழக்கை சாட்சிகளுடன் விசாரித்து ஒரு முழு தீர்ப்பை வழங்கி உள்ளதாக சொல்லி உள்ளார்.
குற்றம் கோவா-வில்தான் நிகழ்ந்து உள்ளது என்று கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கி இருக்க வேண்டும். செசன்ஸ் நீதிபதி சொல்வது போல Section 67 of the Procedure Code cannot give jurisdiction as supposed by the Sessions Judge. That section is part of a Code of Procedure for the trial of offences committed in British India.  அதாவது, பிரிட்டீஸ் ஆட்சிக்கு உட்பட்ட எந்த பகுதிக்கும் அது பொருந்தும் என்று சொல்லி உள்ளதே தவிர, பிரிட்டீஸ் ஆட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதிக்கும் செல்லும் என்று சொல்லப்படவில்லை என்பதை செசன்ஸ் நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். அந்த சட்டத்தில் the words “journey or voyage என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தையானது do not include a voyage on the high seas or in foreign territory. செக்சன் 67 பிரிட்டீஸ் இந்திய எல்லைக்குள் நடக்கும் குற்றங்களை மட்டும் சொல்கிறது. பின்னர் வந்த சட்டம் கூட, “பிரிட்டீஸ் இந்திய பிரஜை ஒருவர் குற்றம் செய்து விட்டு, வெளி பகுதிக்கு ஓடி விட்டால், அந்த பகுதியின் பொலிட்டிகல் ஏஜெண்ட் அனுமதி பெற்றுத் தான், அந்த இந்திய பிரஜையை விசாரிக்கு முடியும்” என்று சொல்லி உள்ளது.
இந்த வழக்கில், அந்த குற்றவாளி, high seas என்னும் உள் கடலில் பிரயாணம் செய்து இருக்கிறார். அவர் இந்திய எல்லைக்குள் பிரயாணம் செய்ததாகவோ, இந்திய எல்லைக்குள் அவர் இந்த சரக்கை களவாட வேண்டும் என்று எண்ணியதாகவோ முடிவை எடுக்க முடியாது. அவர் கோவா கரை ஒதுங்கும் போதுதான், அந்த பகுதியில் அந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்று கருத வேண்டும். ஏனென்றால், ஆங்கிலேய சட்டப்படி, ஒருவர் நடுக்கடலில் இருக்கும் போது, அவர் எந்த நாட்டு எல்லைப் பகுதியில் தவறு செய்தார் என்று சொல்ல முடியாது.
எனவே மங்களூர் செசன்ஸ் நீதிபதி எடுத்த முடிவு தவறானதாகும். ஆகவே, இந்தக் குற்றவாளியை விடுதலை செய்வதாக மதராஸ் ஐகோர்ட் தீர்ப்பு கூறியது.
**
குறிப்பு:
இப்போது இந்த மாதிரியான சட்டம் மாறி விட்டது. நடுக்கடலில் கப்பலில் ஒரு குற்றம் நடந்தால், அது எந்த நாட்டுக் கப்பலோ, அல்லது எந்த நாட்டில் அந்தக் கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நாட்டின் சட்டப்படி அந்த நாட்டில் உள்ள கோர்ட் விசாரிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
**


No comments:

Post a Comment