மூன்றாம்
பாலினம் - நல்சா வழக்கு 2014
இது
சுப்ரீம் கோர்ட்டில் நடந்து ஒரு முக்கிய வழக்கு.
The
National Legal Services Authority (NALSA) v. Union of India 2014
இந்த
வழக்கில், சுப்ரீம் கோர்ட், டிரான்ஸ்ஜெண்டர் என்னும் பாலினம் மாறியவரை “மூன்றாம்
பாலினம்” என்று குறிப்பிட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தது.
நல்சா
அமைப்பு, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு சட்ட உதவி செய்யும் அமைப்பு.
இந்த
வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான Justice கேஎஸ் பனிக்கர் ராதாகிருஷ்ணன் மற்றும் Justice அர்ஜன்
குமார் சிக்கிரி ஆகிய இருவரும் விசாரித்தார்கள்.
ஆணும்
பெண்ணும் சட்டத்தில் சமம் என்பது போல, மூன்றாம் பாலினமும் சட்டத்தில் சமம் என்றே
கருத வேண்டும். அவர்களையும் ஒரு பாலினப் பிரிவாக சட்டங்களில் அங்கீகரிக்க
வேண்டும். படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு எல்லோரையும் போலவே வாய்ப்பு
வழங்க வேண்டும்.
அவர்களை
தரம் பிரிப்பதில், பயாலாஜிகல் முறைப்படி அல்லாமல் (அவர்களின் பிறப்பு உறுப்பு
அடைப்பையில் அல்லாமல்) அவர்களின் மன விருப்பத்தின்படி, எந்த பாலினத்தை சேர்ந்தவர்
என்று அடையாளப் படுத்த வேண்டும். அவர்களை பிறப்பு உறுப்பு அறுவைச் சிகிச்சை
செய்தால் தான் அந்த பாலினம் என்று அடையாளப்படுத்த முடியும் என்று கட்டாயப் படுத்த
முடியாது. அப்படி செய்தால் அது சட்டவிரோதம்.
இந்த
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு 2008 ஏப்ரல் 15ம் தேதி வந்தது. எனவே அந்த நாளை
“டிரான்ஸ்ஜென்டர் நாளாக” கொண்டாடுகிறார்கள்.
தமிழக
அரசு, “அரவாணி (டிரான்ஸ்ஜென்டர்) வெல்பர் போர்டு என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
அவர்களை
ஓபிசி என்ற நிலையில் வைத்து சலுகைகள் வழங்க வேண்டும்.
அவர்களை
வெறுப்பதை மாற்ற, மத்திய அரசு சமுதாய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
தனி
கழிவறை கட்டித் தர வேண்டும். எல்லா இடங்களிலும்.
ஐபிசி
செக்ஷன் 377ன்படி அவர்களை போலீஸ் தொந்தரவு செய்கிறது. அதை தடுக்க வேண்டும்.
அலிகளை
மட்டும் மாற்று பாலினம் என்று எண்ணாமல், கே, லெஸ்பியன், பை-செக்சுவல் இவர்களையும்
அதே நிலையில் ஏற்க வேண்டும்.
ஐபிசி செக்ஷன் 377:
பிரிட்டீஸ்
ஆட்சியில் 1864-ல் இதைக் கொண்டு வந்தது.
Buggery
Act of 1533 என்ற சட்டத்தின் அடிப்படையில் இதை கொண்டு வந்தனர்.
இயற்கைக்கு
மாறான உடல் உறவு வைப்பவர்களை இந்த சட்டம் தண்டிக்கிறது.
சுப்ரீம்
கோர்ட்டில், 2018, செப் 6-ல் ஒரு தீர்ப்பு அதை ஒட்டி வந்தது. அது, செக்ஷன் 377-ன்
அடிப்படையில் விருப்பத்தின் பேரில் ஹோமோ செக்சுவல் உறவு கொண்ட இருவரை இந்த செக்ஷன்படி
தண்டிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று சொல்லி உள்ளது.
ஆனாலும்,
செக்ஷன் 377-க்கு இன்னும் நடைமுறை உள்ளது. அதன்படி, மைனர்கள், சம்மதம் இல்லாத
உடல்உறவுகள், இயற்கைக்கு புறம்பான உடல் உறவுகள் இவைகளை குற்றம் என்றே சொல்கிறது.
டெல்லி
ஐகோர்ட் ஒரு வழக்கில், ஜூலை 2009-ல் ஹே செக்ஸ் என்பதன் அடிப்படையில் ஐபிசி 377ல்
குற்றம் சுமத்துவது சட்ட விரோதம் என்று சொல்லியது.
பின்னர்,
அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் போனது. 2013 டிச 11ல், டில்லி ஐகோர்ட் தீர்ப்பு தவறு
என்று சொல்லி விட்டது. ஏனென்றால், ஒரு சட்டத்தை திருத்துவதும் மாற்றுவதும்
பார்லிமெண்ட்டின் கையில் தான் உள்ளது. கோர்ட்டுக்கு இல்லை என்று சொல்லி விட்டது.
இதை
எதிர்த்து க்யூரேட்டிவ் பெட்டிசன்கள் போடப்பட்டன.
எனவே
சுப்ரீம்கோர்ட், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, 2016 பிப் 6-ல் இதை
5 நீதிபதிகள் பெஞ்சுக்கு அனுப்பி விட்டது.
5
நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், 2017 ஆக, 24-ல் ஒரு தீர்ப்பை சொன்னது.
அதன்படி, இது ஒரு தனிமனித உரிமை சார்ந்தது என்றும், ஐபிசி 377ன்படி தண்டனைக்கு
உரிய குற்றம் இல்லை என்றும் சொல்லி விட்டது.
பின்னர்
நடந்த சுப்ரீம் கோர்ட் வழக்கில், 2018 ஜன ல் நாஜ் பவுண்டேசன் வழக்கில் ஐபிசி செக்ஷன்
377 அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சொல்லி விட்டது.
**
No comments:
Post a Comment