Sunday, January 6, 2019

Concubine meaning

Concubine meaning:

1956ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு. கும்பகோணம் சப்-கோர்ட்டில் நடந்த வழக்கின் அப்பீல் வழக்கு இது.

மகாலிங்கம் என்பவரின் மனைவி அம்சவள்ளி. மனைவி தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டதாகவும், வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகவும் எனவே இவர்களுக்குள் நடந்த திருமணத்தை ரத்து செய்யும்படியும் வழக்கை கணவர் தாக்கல் செய்கிறார்.

ஆனால் கணவர் அவரின் சகோதரி உறவு உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், தான் தட்டிக் கேட்டதால், இவரின் தாலியைப் பறித்துக் கொண்டு, அவரை அடித்து விரட்டி விட்டதாகவும் சொல்கிறார். மனைவியின் கள்ள உறவை நிரூபிக்கவில்லை என கும்பகோணம் கோர்ட், கணவரின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. அதன்மீது, சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை கணவர் தாக்கல் செய்கிறார்.

சென்னை மாகாணச் சட்டம் 6/1949, பிரிவு 5 (1)பி)-ன்படி, ஒரு திருமணம் ஆன பெண், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால், கணவர் அந்த திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று உள்ளது.

இந்த 1949 சட்டம் 1956ல் ரத்து ஆகிறது. அதன் படி புதிய சட்டம் உருவாகிறது. இந்து திருமணச் சட்டம் 25/1955. புதிய சட்டத்தின் பிரிவு 13-ன்படி, மனைவியை ரத்து செய்ய வேண்டும் என்றால், அந்த மனைவி வேறு ஒருவருடன் தொடர்ந்து கள்ளத் தொடர்பில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளது. living in adultery. இல்லையென்றால், பிரிவு 13-படி அத்தகைய குற்றச்சாட்டு, மனைவியை தள்ளிவைத்து வாழ மட்டும் வழி செய்யும். Judicial separation.

வைப்பாட்டி என்ற சொல் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் உபயோகிக்கும் சொல். Concubine. கணவன் மனைவி போல வாழ்பவர்கள் என்று பொருள்.

“con” meaning “with”, “cubere” meaning “to lie”. The definition of a concubine is given as a woman who cohabits with a man without being his wife.  A kept mistress.

A concubinage is defined as the state of a woman who sustains a relation involving continuous and regular illicit intercourse with a man to whom she is not a wife. Such a relation need not exist for any considerable period of time to constitute concubinage. The wife without a title.

Concubinage is that act or practice of cohabiting in sexual intercourse without the authority of law or legal marriage.

வைப்பாட்டி முறை பல நாடுகளில் பின்பற்றபட்டு வந்தாலும், கிறிஸ்தவத்தில் அது இல்லை.

The distinction between a wife and concubine and harlot is that a concubine is below that of a harlot.

In Shakespeare quotation “I know I am too mean to be your Queen: And yet too good to be your concubine.” A concubine is to be distinguished from a harlot. The harlot solicits to immorality, the concubine is reserved by one man.

விபச்சாரி பல பேருடன் தொடர்பில் இருப்பவள். வைப்பாட்டி ஒரேயொரு ஆணுடன் மட்டும் மனைவி போல வாழ்பவள்.

இந்து சட்டத்தில் இந்த வைப்பாட்டி முறை அங்கீகாரம் பெற்றிருந்தது. வைப்பாட்டிக்கு சட்டபூர்வ உரிமையாக வாழ்க்கை ஜீவனாம்சம் கிடைக்க வழி இருந்தது என கார்த்யாயனா மற்றும் நாரதா வியாக்கியானங்களில் சொல்லப் பட்டுள்ளது.

ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டும் திருமணம் ஆகாமல் தொடர்ந்து உறவில் இருந்து வந்தாள் என்றால் அவளை வைப்பாட்டி என்பர். அவளை விபச்சாரி என்று சொல்ல மாட்டார்கள்.

கவி காளிதாசன் எழுதிய மேகதூதம் என்ற நூலில் மூன்று பிரிவாகச் சொல்கிறான். பன்யஸ்திரி, அபிசாரிகா, வேசியா. சமஸ்கிருத பண்டிதர்கள் வைப்பாட்டியையும் விலைமகளையும் வேறுபடுத்தி உள்ளனர். வர்ணதாசி அல்லது பூஜிசிய வேசிமகள் என்றும் ஓவருதா அல்லது வைப்பாட்டி அல்லது இரண்டாம் மனைவி அல்லது ஸ்வைரிணி.

சென்னை மாகாணச் சட்டம் The Madras Suppression of Immoral Traffic Act, Sec.4(e)  ன்படி காசுக்காக உடலை விற்பவர் வேசி என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, இந்த வழக்கில் கணவரின் குற்றச்சாட்டு என்னவென்றால், அவரின் மனைவி வேறு ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். அந்த வீட்டின் மனிதருடன் உறவு வைத்துள்ளார். ஆனால் அங்கு அந்த மனிதருக்கு மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, ஆகி கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். எனவே அவர் இவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் வாழ்கிறார் என்று சொல்லி விட முடியாது என ஐகோரட் முடிவு செய்து அவரின் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இந்த வழக்கு (1956) 2 MLJ 289 என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

**

No comments:

Post a Comment