ஐகோர்ட்
தீர்ப்பின் வெப் சைட் காப்பியே போதுமானது என்று புதிய முறை:
ஐகோர்ட்டின்
தீர்ப்புகளை ஐகோர்ட்டின் வெப் சைட்டில் இருந்து பதிவு இறக்கம் செய்து கொண்ட காப்பிகளே
போதுமானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
பொதுவாக,
ஐகோர்ட் நீதிபதி தன் தீர்ப்பைக் கூறியவுடன், அந்தத் தீர்ப்பின் பேப்பரில் கையெழுத்துப்
போடுவார். அது ஐகோர்ட் அலுவலகத்தின் மூலம் சான்றிட்ட நகலாக அது சம்மந்தப்பட்ட வக்கீல்களுக்கும்,
பார்ட்டிகளுக்கும் கொடுக்கப்படும். இதற்கு காலதாமதம் ஆகி வரும் நிலை இருந்து வருகிறது.
சில தீர்ப்புகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அன்றே தீர்ப்பின் நகல் கிடைக்கும்படி
உத்தரவு இருக்கும். மற்ற வகைகளில் தீர்ப்பின் காப்பியை வாங்க நாள் கணக்கில் ஆகிவிடும்.
எனவே
இதற்கு தீர்வாக, இப்போது, அப்படி நீதிபதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த தீர்ப்பை,
சென்னை ஐகோர்ட்டின் வெப்-சைட்டான www.hcmadras.tn.nic.in. என்ற
முகவரியிலிருந்து சம்மந்தப்பட்ட வக்கீல் பதிவிறக்கம் செய்து, அதை சான்றிட்டு சம்மந்தபட்ட
காரணங்களுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு அரசு அதிகாரிகளும் அந்த காப்பியைப்
பெற்று அதன் உத்தரவுகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும், அவர்களும் அந்த வெப்-சைட்
முகவரியில் அந்த தீர்ப்பை படித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறி உள்ளது.
இது
ஒரு வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இனி, தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கத் தேவையில்லை.
**
No comments:
Post a Comment