Contempt of Court
Courts have always found it difficult
to give a comprehensive & complete definition of ‘contempt of Court’. But
the definition of these words given in the leading case – “Birch v. Walsh, 10
Irish Eq. R.93” has been accepted by Courts in India.
There, the court gave three categories
of contempt –
(i) Contempt in respect of orders of
Court;
(ii) Contempt by letter or pamphlets
addressed to the Judge who is to decide the case with the intention either by
threats or flattery or bribery to influence his decisions; and
(iii) Constructive contempt depending upon
inference of an intention to obstruct the course of justice.
Before 1926, it was held
that, in matters of contempt a High Court possesses the same jurisdiction as
the old King’s Bench in England had. Act 12 of 1926 expressly empowered High
Courts to exercise the same jurisdiction, power and authority in respect of
courts subordinate to them as they have in respect of contempt of themselves.
The Constitution of India expressly saved the powers of High Court to punish
for contempt of court. The Parliament by Act 32 of 1952 repealed the earlier
Acts and restated in express terms that “subject to the provisions of
sub-sec.(2) every High Court shall have and exercise the same jurisdiction,
powers and authority, in accordance with the same procedure and practice, in
respect of contempt of courts subordinate to it, as it has and exercises in
respect of contempt of itself.”
(Ref: D.Jones Shield v.
Ramesam and ors, AIR 1955 AP 156.)
1952-ல்
ஆந்திரா ஐகோர்ட்டில் நடந்த வழக்கு இது. மாவட்ட கலெக்டர் மீதும், அவரின் தனி அதிகாரி மீதும், துணை மாவட்ட
மாஜிஸ்டிரேட் மீதும், இந்த கோர்ட் அவமதிப்பு வழக்கை ஒருவர்
போடுகிறார்.
வழக்கைப்
போட்டவர்,
ஆந்திராவில் செட்டனப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் உலகப்
போரில் ஜமேதாராக இருந்தவர். பின்னர் ஆந்திராவுக்கு வந்து, தாலுகா
சர்வேயராக சில காலம் வேலை பார்க்கிறார்.
வகாப்
சாகிப் என்பவர் அங்கு சப்-மாஜிஸ்டிரேட்டாக வேலை செய்கிறார். அவர் கோர்ட்டின்
சொத்துக்களைப் பொறுத்து நம்பிக்கை மோசடி செய்து விட்டார் என்று சப்-டிவிஜனல்
மாஜிஸ்டிரேட்டிடம் புகார் செய்கிறார். அந்த மனுவை அவர், துணை முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்டின் விசாரனைக்கு அனுப்பி வைக்கிறார்.
அவர் இந்த புகாரை CrPC சட்டம் பிரிவு 203-ன்படி தள்ளுபடி
செய்து விட்டார். அதை எதிர்த்து செசன்ஸ் கோர்ட்டுக்கு ரிவிஷன் மனுவாக
அனுப்புகிறார். இந்த மனு நிலுவையில் இருக்கும்போது, அவர்கள்
(எதிர் மனுதாரர்கள்) நீதி வழங்குவதில் தடையாக இருக்கிறார்கள் என்று கூறி அவர்கள்
மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை கொண்டு வருகிறார்.
அதாவது, கோர்ட் ரிவிஷன் மனு நிலுவையில் இருக்கும்போதே, அவர்கள்
மீது துறை வாரியான விசாரனை வைத்து, அந்தப் புகாரே ஒரு பொய்
புகார் என்று கூறி விட்டார்களாம். ஏற்கனவே ரிவிஷன் மனு நிவையில் இருக்கும்போது,
இவர்கள் அவசரமாக துறைவாரி விசாரனை நடத்தி அந்தப் புகார் பொய் என்று
கூறி வழக்கை முடித்துக் கொள்வது என்பது, கோர்ட்
அவமதிப்பாகும் என்பது புகார் கொடுத்தவரின் வாதம்.
வழக்கு
கோர்ட்டில் ரிவிஷன் மனுவாக விசாரனையில் இருக்கும்போது, கலெக்டர் தனியே ஒரு விசாரனை நடத்தி வழக்கை முடிப்பது என்பது கோர்ட்
அவமதிப்பாகும் என்கிறார்.
ஆந்திர
ஐகோர்ட்டின் தீர்ப்பு:
உண்மையில்
இது ஒரு கோர்ட் அவமதிப்பு வழக்காக இருந்தால், வழக்கு
செசன்ஸ் கோர்ட்டில் இருந்தாலும், ஐகோர்ட் அதற்கு தண்டனை
வழங்க முடியும். அரசு அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டால், அது
உண்மையில் கோர்ட் அவமதிப்பாகவே கருதலாம். ஆனாலும், வேண்டுமென்றே
அரசு அதிகாரிகள் மீது குற்றம் சொல்வது இப்போது அதிகமாகி விட்டது. அப்படி பொய்
தகவல்களைக் கொண்டு அரசு அதிகாரிகளை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மனுச்
செய்திருந்தால், அவருக்கு தண்டனையாக அதிகபட்ச அபராதம்
விதிக்கப்படும்.
ஒரு
வழக்கு கோர்ட்டில் இருக்கும்போது, அதே விஷயத்துக்காக
துறை சார்ந்த விசாரனை நடத்துவது என்பது கோர்ட் அவமதிப்புத்தான் என்று பாட்னா
ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் தீர்ப்பான King v. Paramanad, AIR 1949 Pat 222 என்ற வழக்கில் கூறப்பட்டுள்ளது. அதில், “Any
enquiry with regard to a matter which is ‘sub-judice’ is bound to interfere
with the even and ordinary course of justice. It is a cardinal principle that
when a matter is pending for decision before a court of justice, nothing should
be done which might disturb the free course of justice and this court will
discountenance any attempt on the part of any executive official, however high
he may be, to prejudge the merits of a case and to usurp the functions of the
court which has got seisn of the case.” என்று சொல்லப் பட்டுள்ளது.
பப்ளிக்
புராசிகியூட்டர், அந்த மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜராகி,
எதிரிகளுக்கு துணையாக இருந்தது தவறு என்று சொல்கிறார். நீதிபதி
கேள்வி கேட்கும்போது, வக்கீல் எப்படி சும்மா இருக்க
முடியும். ஏதாவது ஒரு பதிலைச் சொல்லித் தானே ஆக வேண்டும். எனவே நானும், மனுதாரரின் ரிவிசன் வழக்கு நிலுவையில் உள்ளது என்று சொன்னேன் என்கிறார்.
இது எப்படி கோர்ட் அவமதிப்பு ஆகும் என்றும் சொல்கிறார்.
இதே
போன்ற ஒரு சூழ்நிலையில், Munster v. Lamb,
(1883) 11 QBD 588 என்ற வழக்கும் சென்னை ஐகோர்ட்டில் முழு பெஞ்ச்
தீர்ப்பான Sullivian v. Norton, 10 Mad 28 என்ற தீர்ப்பையும்
சுட்டிக் காட்டுகின்றனர். அதில், ‘ஒரு வக்கீல், அந்த வழக்கை நடத்தும்போது, அதில் அவர் சாட்சிகளிடம்
கேட்கும் கேள்விகள் தவறாக இருந்தாலும், அவர் மீது அதற்காக
வழக்குப் போட முடியாது. அந்த வக்கீலுக்கு அத்தகைய பாதுகாப்பு (privilege) உள்ளது. இல்லை என்றால், அவர் எந்த பயமும் இன்றி அந்த
வழக்கை நடத்த முடியாது.
‘If
anyone need to be free from all fear in the performance of his arduous duty, an
advocate is that person. His is a position of difficulty; he does not speak of
that which he knows, that he has to argue and to support a thesis which it is
for him to contend for, he has to do this in such a way as not to degrade
himself, but he has to do it under difficulties which are often pressing.
If
in this position of difficulty he had to consider whether everything which he
uttered were false or true, relevant or irrelevant, he could not possibly
perform his duty with advantage to his client and the protection which he needs
and the privilege which must be acceded to him is needed and accorded above all
for the benefit and advantage of the public.”
இந்த
வழக்கில்,
பப்ளிக் புராசிகியூட்டர், மாஜிஸ்டிரேட் கேட்ட
கேள்விகளுக்கு பதில் கொடுத்தது ஒரு கோர்ட் அவமதிப்பு ஆகாது.
கலெக்டர்
என்பவர் அந்த மாவட்டத்தின் தலைமை அதிகாரி ஆவார். அதேபோல் மாவட்ட நீதிபதியும் அதே
அளவில் அந்த மாவட்டத்தின் தலைமை நீதிபதி ஆவார். எனவே அந்த வழக்கைப் பற்றி
விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் அதிகாரிகள் என்பதால், அவர்கள் செசன்ஸ் கோர்ட்டின் ரிவிஷன் மனுவின் தீர்ப்பில் தலையிடுவதாகவோ
அல்லது கோர்ட் அவமதிப்பு செய்து விட்டதாகவோ கருதி விட முடியாது என்று கூறி ஆந்திர
ஐகோர்ட், அவரின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
**
No comments:
Post a Comment