Saturday, June 27, 2020

வழக்குகள் 6

வழக்குகள் 6

சிவில் கோர்ட்டில் (1) கடனை வசூல் செய்ய வழக்குப் போட்டு, பணத்துக்கான டிகிரியை பெறுவர் (money decree); (2) சொத்தின் மீது வழக்குப் போட்டு சொத்தின் சுவாதீனம் கேட்பர் (suit for possessoin of the property); (3) சொத்தின் மீதான அடமானக் கடனுக்கு வழக்குப் போட்டு அதே சொத்தை ஏலத்தில் விற்பனை செய்யும்படி கேட்பர் (decree to sell the property; (4) வேறு காரணங்களுக்காகவும் வழக்குப் போடுவர்.

இதில், பணத்தை வசூல் செய்ய வாங்கிய money decree-யை வசூல் செய்ய கடன்காரரின் சொத்தை ஏலம் போடும்படி கோர்ட்டை கேட்பர். அப்போது வேறு ஒருவர் வந்து அதை ஆட்சேபனை செய்யலாம். எப்படியென்றால், “சொத்து எனக்குச் சொந்தம், அந்தக் கடன்காரின் சொத்து இது இல்லை” என்று ஆட்சேபம் செய்யலாம். அப்போது executing Court அவரின் ஆட்சேபனை சரி என்றால், அந்த சொத்து விற்பனையை தள்ளிவிடலாம்.

ஆனால், அடமானக் கடனை வசூல் செய்ய போட்ட வழக்கில் அடமானச் சொத்தையே ஏலம் போட கேட்டு, அதற்கு டிகிரி வாங்கி இருப்பார். அப்படிப்பட்ட டிகிரி மீது, அந்தச் சொத்தை ஏலத்துக்குக் கொண்டு வந்தால், அதை மறுத்து எந்த வெளிப் பார்ட்டிகளும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஏனென்றால், அந்த டிகிரியே அந்த சொத்தை விற்பதற்காக கொடுத்த டிகிரி. எனவே executing Court அந்த டிகிரியில் சொல்லி உள்ளதை மாற்றி ஏதும் செய்து விட முடியாது. ஒரு டிகிரியை நிறைவேற்றும் போது, அந்த டிகிரியில் என்ன சொல்லி உள்ளதோ அதை அப்படியே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, நிறைவேற்றும் கோர்ட்டுக்கு (executing Court) உண்டு.

The Court executing a decree cannot take upon itself to alter or vary that decree. Its powers are confined to construing a decree when necessary and executing a decree in its terms so long as the law allows the decree to be executed.

There is an essential difference between “the execution of a decree for money by the sale of the property” and “the execution of a decree for sale of property specified in the decree”.

In the first case (sale of property through money decree) – any third person can intervene in the execution of a decree and show that the decree could not be executed against particular property, if that property was not the property of the judgment-debtor, but was the property of the person opposing.

Similarly, in the case of a decree for money, where the judgment-debtor dies, his representative is entitled to oppose the execution of the decree against any particular property by showing that property was not the property of the judgment-debtor and was the property of the representative, was for example, that it was his self-acquired property.

In such cases, when such objection is taken before the Court executing the decree for money, that Court has power to inquire into and decide on any such objection taken to the execution of the decree against any particular property.     

In the Second case (the decree is a decree for sale of property) – the Court executing the decree must sell the property decreed to be sold and leave any one objecting to the execution of the decree against that particular property to such remedy as he may have by a suit or by resistance to the possession of the purchaser.

**

 


No comments:

Post a Comment