Saturday, June 27, 2020

வழக்குகள் 5

வழக்குகள் – 5

பிரதிவாதியின் சொத்து ஏலத்துக்கு வருகிறது. அதை வாதி ஏலம் எடுக்கிறார். கோர்ட் மூலம் formal possession சொத்து ஒப்படைப்பு செய்யப் படுகிறது. ஆனால் உண்மையில் அவருக்கு சொத்தின் சுவாதீனம் கிடைக்கவில்லை. பிரதிவாதியே சொத்தில் அனுபவத்தில் இருந்து வருகிறார்.

எனவே வாதி, ஒரு வழக்குப் போட்டு அதில் சொத்தின் physical possession என்னும் உண்மையான சுவாதீனத்தைக் கேட்கிறார். ஆனால் பிரதிவாதி, “ஏலம் விடப்பட்ட தேதியில் இருந்து நான் தான் சுவாதீனத்தில் இருக்கிறேன். ஏலத்தேதியிலிருந்து வழக்குத் தேதிவரை 12 வருடங்களுக்கு மேலாகி விட்டது. எனவே வாதி சுவாதீனம் கேட்க முடியாது” என்று சொல்கிறார்.

ஆனால் கீழ்கோர்ட், “சொத்தின் ஏலத் தேதியை கணக்கில் எடுக்க முடியாது. கோர்ட் சொத்தை ஒப்படைத்த தேதியைத் தான் கணக்கில் எடுக்க வேண்டும். அன்றிலிருந்து கணக்கெடுத்தால், 12 வருடங்கள் முடிவடையவில்லை. எனவே வாதிக்கு சுவாதீனம் கொடுக்கலாம்” என்று தீர்ப்புக் கூறி விட்டது.

அதை எதிர்த்து பிரதிவாதி, மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அப்பீல் கோர்ட், “கோர்ட் formal possession கொடுத்த தேதியை கணக்கில் எடுக்க முடியாது. ஏலத் தேதியைத்தான் கணக்கில் எடுக்க முடியம். எனவே 12 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தள்ளுபடி செய்து விட்டது.

அதை எதிர்த்து வாதி, அலகாபாத் ஐகோர்ட்டில் 1897-ல் அப்பீல் செய்கிறார்.

ஐகோர்ட்டில்:

If possession was delivered to the auction purchaser through the Court in the manner required by CPC, that delivery of possession gave to the auction-purchaser, as against the judgment-debtor whose rights were purchased by him, a conclusive title, and must, as observed by the Calcutta High Court in the case of Juggobundhu Mukerjee v. Ram Chunder Bysack, ILR 5 Cal.584, be deemed to be equivalent to actual possession.

On the date of delivery of possession the auction-purchaser must be held to have obtained actual possession as against the judgment-debtor, and it is only during the period following that date that the possession of the judgment-debtor, if he continued in possession, could be regarded as adverse.

This view is supported by the Full Bench ruling of the Calcutta High Court in the case of Joggobandhu Mitter v. Purnananund Gossami, ILR 16 Cal. 530. In which it was held that limitation should be computed in a suit for possession against the judgment-debtor from the date of of delivery of formal possession.

எனவே கீழ்கோர்ட் சொன்னபடி, கோர்ட் சுவாதீனம் கொடுத்த தேதியைத் தான் கணக்கில் எடுக்க வேண்டும். ஏலத் தேதியை எடுக்கக் கூடாது. எனவே சொத்தைக் கோர்ட் மூலம் சுவாதீனம் (formal possession) பெற்ற தேதியிலிருந்து 12 வருடங்கள் ஆகவில்லை. எனவே வாதிக்கு சொத்தின் சுவாதீனத்தைக் கொடுக்கலாம் என்று தீர்ப்புக் கூறியது.

**.


No comments:

Post a Comment