Saturday, June 27, 2020

வழக்குகள் - 4

வழக்குகள் 4

சொத்துக்களை பாகஸ்தர்களுக்குள் முந்திக்கொண்டு வாங்கும் உரிமை:

முஸ்லீம் சொத்துக்களில் Preferential right to purchase or Pre-emption right to purchase என்ற உரிமை உள்ளது.

இந்த உரிமை என்பது, சொத்து கூட்டாக இருக்க வேண்டும், ஒரு பாகஸ்தர் தனது பாகத்தை வெளியாருக்கு விற்க நினைத்தால், அவர் அதை வெளியாருக்கு முதலில் விற்க முடியாது. அந்தச் சொத்தின் மற்ற பாகஸ்தர்களிடம்தான் விற்க முடியும். அவர்கள் வாங்க மறுத்து விட்டால் மட்டுமே, வெளியாருக்கு விற்க முடியும். இதைத்தான் முஸ்லீம் சட்டத்தில் Pre-emption right (பிரிஎம்ஷன் உரிமை) அல்லது உருது மொழியில் Shaffa என்று சொல்லியுள்ளது.

இந்துக்களில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள குடியிருக்கும் வீட்டை விற்கும்போது மட்டும், பாகஸ்தர்களுக்குள் இந்த Pre emption உரிமையை கொண்டு வர முடியும். மற்ற சொத்துக்களுக்கு இந்த உரிமை கிடையாது.

1897-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு:

ஒரு பொதுப் பாதைவழியைப் பொறுத்து இந்த வழக்கு வருகிறது. பாதைவழி உரிமையுள்ள ஒருவர் அவரின் உரிமையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்கிறார். விற்பனை செய்பவரின் பங்காளி அதை ஆட்சேபனை செய்கிறார். அவருக்குத் தான் முதலில் விற்பனை செய்ய வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்.

ஆனால் பிரதிவாதியோ, “எனக்கு இந்த பாதைவழியில் ஏற்கனவே பங்கு உள்ளது. எனவே நான் வெளியார் இல்லை. பங்கு இருக்கும் எனக்கு எதிராக, Pre emption உரிமையை வாதி கேட்க முடியாது” என்று கூறுகிறார்.

பிரதிவாதியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட கீழ்கோர்ட், வாதியின் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதை எதிர்த்து வாதி, ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

ஐகோர்ட்டில் வாதியின் வாதம்:

முகமதிய சட்டத்தில், பிரதிவாதிக்கு இதேபோன்ற Pre emption உரிமை இருந்தாலும், அதை வாதிக்கு எதிராக பயன்படுத்த முடியாது. அதை ஒரு வெளிநபரிடம்தான் பயன்படுத்த முடியும் என்கிறார். வாதிக்கும் அவரின் பங்காளிக்கும் உள்ள கூட்டுரிமையில், பிரதிவாதி வெளிநபர் ஆவார் என்கிறார்.

The Rule laid down in Book XXXVIII, Chapter I, of the Hedaya, Vol. III, p.566:

When there is a plurality of persons entitled to the privilege of shaffa the right of all is equal is as much applicable when the purchaser is a person having the right of pre-emption as when he is a stranger.

கல்கத்தா ஐகோர்ட்டின் மூன்று முன் தீர்ப்புகள்:

Baboo Moheshee Lal v. G.Christian, 6 WR 250:

இந்த வழக்கில், Pre emption உரிமை என்பது, முகமதியர் சட்டத்தில், கூட்டு உரிமையாளர்களிடம் கேட்க முடியாது. வெளியாரிடம் தான் கேட்க முடியும் என்று சொல்லி உள்ளது.

The right of pre-emption could, under Muhammadan law, only be against strangers or third parties not co-parceners.

மற்றொரு வழக்கான Teeka Dharee Singh v. Mohur Singh, 7 WR 260:

இந்த வழக்கில், சொத்தை வாங்குபவர் வெளிநபர் இல்லையென்றால், அவர் ஏற்கனவே சொத்தில் ஒரு உரிமைதாரராக இருந்தால், அவர்மீது, Pre emption உரிமை கேட்க முடியாது என்று சொல்லியுள்ளது.

The very fact that of the purchaser not being a stranger, but one who is already either a shareholder or a neighbour, proves that the Mohammadan law of pre-emption never intended to apply to such a case.

மற்றொரு வழக்கான Lalla Nowbut Lall v. Lalla Jewan Lall, ILR 4 Cal 831:

இது ஒரு முழு பெஞ்ச் தீர்ப்பாகும். இதன்படி, ஒரு கோபார்சனர், மற்றொரு கோபார்சனர் மீது Pre-emption உரிமை கோர முடியாது. வெளியாள் வாங்கும்போதுதான் கேட்க முடியும்.

A Full Bench held that by the Muhammadan law one coparcener has no right of pre-emption as against another coparcener.

ஹிதாயா சட்டத்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

Hamilton’s Hedaya Vol III Book 38 Ch-I, appears to have been misunderstood in this respect. That rule merely prescribes that any one partner (or coparcener) of a property has a right of shaffa as against a stranger who purchases a share from his coparcener, who may purchase shares from one another.

The object of the rule, as explained in that chapeter, and in Ch-3, is to prevent the inconvenence which may result to families and communities from the introduction of a disagreeable stranger as a coparcener or near neighbour.

But is is obvious that no such annoyance can result from a sale by one coparcener to another. The only result of such sale would be to give the pruchaser a larger share in the joint property than he had before, and perhaps larger than the other coparceners have.

Justice Ameer Ali’s work on Muhammadan Law, Vol-I page 590:

 When one co sharer conveys his share to another co sharer, no other co-sharer, if any, can have a right of pre-emption, the rights of all being equal, and the reason on which the right is founded, therefore, being absent.

In other words, no right of pre-emption arises in favour of a coparcener when the purchaser himself is a co-sharer of the vendor and the claimant.

ஹிதயா சட்ட விளக்கத்தின்படி, இந்த உரிமையானது, கூட்டுக் குடும்பச் சொத்தில் வெளியாரை உள்ளே விடக்கூடாது என்ற கொள்கையில் ஏற்படுத்தப் பட்டது என்பது தெளிவாகிறது.

The Takmila Bahr-ur-Raik (Part-II) Book on Pre-emption: Egyptian Edition, p.143:

It is given in the Tatar Khaniyah that a neighbour purchased a house and there was another neighbour on the other side who claimed pre-emption; the house would be equally divided between the purchaser and the neighbour.

**.


No comments:

Post a Comment