Saturday, June 27, 2020

வழக்குகள் - 3

வழக்குகள் 3

1897-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு. இதில் ஹூசைனி பேகம் என்பவர் முஸ்லீம் பெண்மணி. இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். இவர் முகமதிய திருமண முறைப்படி கார்டுனர் என்ற ஒரு கிறிஸ்தவரைத் திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட பழக்க வழக்கம் அந்தப் பெண்மணியின் குடும்பத்தில் இருந்து வந்தது என்கிறார்கள்.

இந்த முஸ்லீம் பெண்மணி, அவரின் சொத்தை அடமானம் வைத்து ஒருவரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அவர் இறந்து விட்டார். அந்த சொத்து அந்த முஸ்லீம் பெண்மணியின் கணவருக்கு கிடைத்து, அதை அவர் அவரின் உறவினருக்குக் கொடுத்து விட்டார்.  அந்த உறவினர் இந்த சொத்தினை பெறுவதற்காக வழக்குப் போடுகிறார்.

கோர்ட்டில், பிரதிவாதியின் வாதம் என்னவென்றால்: முஸ்லீம் பெண்மணி, முஸ்லீம் அல்லாதவரை, முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்திருந்தாலும், அந்தத் திருமணம் செல்லாது என்றும், எனவே அந்த பெண்மணிக்குப் பின்னர், அவளின் கணவருக்கு சொத்து வாரிசு உரிமைப்படி கிடைக்காது என்றும் வாதம்.  இந்த வாதம் சரிதான் என்று எல்லாக் கோர்ட்டுகளும் தீர்ப்புச் சொல்லி விட்டன.

Baillie’s Digest of Muhammadan Law, Imameea Code:

It is there laid down that if the wife of a Kitabee (புத்தகவழி வழிபாட்டு முறை உள்ளவர்) should embrace the faith of Islam, that circumstance would cancel the marriage.

The author infers from this that a Muhammadan cannot be legally married to anyone who is not of that faith. ஒரு முஸ்லீம், மற்றொரு முஸ்லீம் அல்லாதவரைத் திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம் செல்லாது.

மேலும், முஸ்லீம்களுக்குள் மூட்டா திருமணம் (Moota Marriage) அல்லது தற்காலிக காலத்துக்கு மட்டும் ஏற்படுத்திக் கொள்ளும் திருமணம் (Temporary marriage) செய்து கொள்ளலாம் அது செல்லுபடியாகும்.

ஆனால், ஒரு முஸ்லீம் பெண், வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவரை, இந்த மூட்டா முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது.

எனவே இந்த வழக்கில் உள்ள முஸ்லீம் பெண்மணி, முஸ்லீம் முறைப்படி ஒரு முஸ்லீம் ஆணைத் திருமணம் செய்யவில்லை. மேலும், அவர் மூட்டா முறைப்படி திருமணம் செய்திருந்தார் என ஒப்புக் கொண்டாலும், அதன்படியும், அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரை இந்த மூட்டா திருமணம் செய்திருந்தாலும் அதுவும் செல்லாது என்று அலகாபாத் ஐகோர்ட் 1897-ல் தீர்ப்புக் கூறி விட்டது.

**.

 


No comments:

Post a Comment