வழக்குகள்
2
மிராசுதார்கள்:
பழைய
இந்தியாவின் மராத்தா அரசுகள் இருந்த பகுதிகளில் பெரும் நிலச் சுவானதார்கள் இருந்தார்கள். அவர்களை
மிராசுதார் (Mirasdar) என்று சொல்வர். அப்போது அங்கு சொத்தின்
பேரில் கடன் கொடுப்பது அதிகமாக இருந்தது. மீட்கவும் முடியாமல் போய்விடும். இதனால் அந்தப்
பகுதியில் எப்போதும் கலகமும் உண்டாகும். கடனுக்கு நில சொத்துக்களை கொடுப்பதற்குப் பதிலாக,
ஆடுமாடுகள், விவசாயத்தின் மகசூல் இவைகளை செக்யூரிட்டியாக பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தனர்.
எனவே அவைகளை ஜப்தி செய்யப் போகும்போது கலவரம் வரும். ஆட்சியாளர்களும் மிராசுகளுக்கு
ஜப்தி செய்வதில் உதவிக்கு வரவில்லை. எனவே மிராசுகள் மிரட்டல் வழிகளை செய்தார்கள். மிராசுவின்
ஆட்கள், அறுவடையின்போது நேரில் சென்றும், அங்கேயே தங்கி இருந்தும் வசூல் செய்து விடுவார்.
The
usual and recognised method for recovery of debt was for the Saukar (சௌக்கார்) to send a mohosul or muhassil (மகசூல்) that is, a servant whose maintenance had to be paid by the
debtor, or to place a servant in dharna at his door, which is the process
called tuquza or tagada or takaza (தக்காஜா முறை) or to confine the debtor in his house, or otherwise subject him
to serverer measures. (See: Wilson’s Glossary pp.138, 502).
கடன்
வசூல் கெடுபுடி முறை:
இந்த
வசூல் முறையின் கொடுமை எப்படி இருக்கும் என்று Mr. Mountsuart Elephinstone
கூறுகிறார்: எல்லா நெருக்கடியும் கொடுப்பார்கள். தடியன்களை அனுப்பி,
கடன்காரன் வீட்டில் அவன் சாப்பிடும்போது கொடுமைப் படுத்துவான். கழுத்தையும் காலையும்
கட்டிப் போடுவான் சாப்பிட விடாமல் கொடுமைப் படுத்துவான். உச்சி வெயிலில் தலையில் பெரிய
கல்லைத் தூக்கி வைத்து ஒற்றைக் காலில் நிற்க வைப்பான். (See: Revenue
Collections 193, Report of 25th Oct. 1819 & Captain Grant’s Report
of 30th April 1819).
பழைய
இந்து சட்டத்தில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது: ஒருவர் தனது சொத்தை விற்க வேண்டும் என்றால்,
அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் சம்மதம் வேண்டுமாம். அல்லது அங்குள்ள மன்னரின் அனுமதி
வேண்டுமாம்.
சொத்துள்ள
மிராசுதார்கள் சொத்தை விற்க வேண்டிய அவசியம் இருக்காது. நிலத்தை விவசாயம் பார்க்கிறவன்
நெருக்கடியில் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் அடிக்கடி ஏற்பட்டது.
பிரிட்டீஸ்
கோர்ட்டுகளின் சலுகை:
பிரிட்டீஸ்
கோர்ட்டுகள் வந்தபின்னர், Ramji v. Chinto, 1 Bom.HC Rep 199 என்ற வழக்கில் பாம்பே மாகாணத்தில், புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. Once a mortgage always a mortgage. அடமானம் வைத்த சொத்து, கிரயமாக மாறாது, எப்போதும் அது அடமானம் தான். எனவே எப்போதும்
மீட்டுக் கொள்ளலாம் என்று ஒரு சட்ட விளக்கத்தைக் கொண்டு வந்தது.
அதன்படி,
அவர்களுக்குள் நடந்தது அடமானக் கடன்தான் என்று தெரிய வந்தால், பத்திரம் எப்படி எழுதி
கொண்டிருந்தாலும், அது அடமானமே என்று கோர்ட்டுகள் முடிவு செய்தன.
Lrod
Manners. C., said: “The fair criterion, by which the Court is to decide whether
the deed be a mortgage or not.”
இப்படிப்பட்ட
சூழ்நிலையில் கடன் கொடுத்தவர் முந்திக் கொண்டு foreclosure என்னும் இனிக் கடனை மீட்ட முடியாது, காலம் கடந்து விட்டது என்று திர்ப்பு வாங்குவதற்கு
வந்தால், அந்த வழக்கிலும், கோர்ட், பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு சொத்துக்காரருக்கு
ஒரு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதை மீறியும் கட்டவில்லை என்றால், அதன் பின்னர்
அவர் கடனை மீட்கும் உரிமையை இழப்பார் என்று தீர்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சட்ட
விதிகளை உண்டாக்கியது. இது ஐரீஸ் கோர்ட் (Irish Court of Chancery) பழக்கத்தின்படி இந்தியாவில் கொண்டு வந்தது.
**
No comments:
Post a Comment