Saturday, June 27, 2020

வழக்குகள் 1

வழக்குகள்1

1861-ல் பாட்டியாலா பகுதியில் ஒரு எஸ்டேட் ஒதுக்கப் படுகிறது. ஒரு கலகத்தை அடக்கும்போது, அரசாங்கத்துக்கு உதவியாக இருந்ததற்காக இந்த நிலத்தை ஒதுக்கி உள்ளது. அந்த நிலத்தில் அவர் இண்டகோ பயிர் செய்து, அங்கு ஒரு டை (dye) தயாரிக்கும் கம்பெனியும் நடந்தி வருகிறார்.

இன்டிகோ நீலம்:

Indigo என்றால், இந்திய நீலம் என்று பொருள். அதாவது இந்தியாவில் டை செடிகளில் இருந்து கிடைக்கும் டை ஐரோப்பா வரை சென்றது. இந்த நீலம் கருநீலமாக இருக்கும். எனவே இந்த நீலத்தை இந்தியன்-நீலம் என்று சொல்வதற்காக இண்டிகோ-நீலம் என்று சொல்கிறார்கள். RGB என்னும் அடிப்படை கலர்களான Red, Green, Blue இவைகளில் இந்த நீலக் கலருக்கும் கருமையாக இருப்பதால் இண்டகோ-நீலம் என்றார்கள்.

அந்த டை தயாரிக்கும் நபர் இந்த நிலத்தின் பேரிலும், கம்பெனியின் பேரிலும் அந்தக் காலத்திலேயே ரூ.1,65,000 கடன் வாங்கியிருந்தார். அதற்கு பத்திரம் எழுதிக் கொடுத்து இருந்தார். அந்த அடமானப் பத்திரம் அந்தக் காலத்தில் எப்படி இருக்கும் என்றால், சொத்தை கிரயம் போலவே கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுவார்கள். ஆனாலும், கடன் வட்டி சேர்த்து திருப்பிக் கொடுத்து விட்டால் மீட்டு விடலாம். குறிப்படி காலம் கடந்து விட்டால் அதை மீட்ட முடியாது. அது முழுக்கிரயம் ஆகிவிடும். இதை Mortgage by Conditional Sale என்று சட்டம் சொல்கிறது. இப்படிப்பட்ட அடமானங்கள்தான் அந்தக் காலத்தில் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன.

Redemption அடமானக் கடனை மீட்கும் உரிமை:

இந்த நிலத்தின் சொந்தக்காரர் கடனைத் திருப்பிக் கொடுத்து நிலத்தை கேட்டு redemption (அடமானத்தை மீட்கும்) வழக்குப் போடுகிறார். இந்த அடமானம் Mortgage by Conditinal sale வகையைச் சேரும் என்கிறார். ஆனால் கடன் கொடுத்தவரோ, இந்த பத்திரம் “திரும்ப வாங்கவில்லை என்றால் முழுக்கிரயம்” என்ற வகைப் பத்திரம் என்கிறார். Absolute Sale with a right to repurchase. குறிப்பிட்ட தேதிக்குள் அதில் சொல்லியுள்ள பணத்தைக் கொடுத்து மறுகிரயமாக வாங்கிக் கொள்ளவில்லை என்றால், கடன் கொடுத்தவருக்கே சொந்தமாகிவிடும் வகையைச் சேர்ந்தது.

வழக்கில், கீழ்கோர்ட் தீர்ப்பாக, இது அடமானம் தான் Mortgage by Conditional Sale எனவே வாதி கடனைத் திருப்பிக் கொடுத்து சொத்தை மீட்டுக் கொள்ள உரிமையுண்டு என்று சொல்லிவிட்டது.

கடன் கொடுத்தவர் அதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். இந்த பத்திரங்களைப் படிக்கும்போது ஒரு கிரயப் பத்திரம் போலவே தெரிகிறது.

கடன் கொடுக்கவில்லை என்றால் சொத்து சொந்தமாகிவிடும்:

A Mortgage by Conditional Sale என்றால் என்ன என்பதை சொத்துரிமை மாற்றுச் சட்டம் The Transfer of Property Act 1882 (Act No.IV of 1882) தெளிவுபடுத்தி உள்ளது. “Where the mortgagor ostensibly sells the mortgaged property, on condition that on default of payment of the mortgage-money on a certain date, the sale sale become absoute.” இதன்படி, இப்படிப்பட்ட அடமானப் பத்திரம் உண்மையில் ஒரு கிரயப் பத்திரம் போலவே இருக்கும். ஆனால் அதில் உள்ள வாசகங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தப் பணத்தை கொடுக்காவிட்டால், அந்த கிரயம் முழுக்கிரயம் ஆகிவிடும் என்பது இதன் பொருள்.

எப்போதுமே இரண்டு பார்ட்டிகளுக்குள் எந்தவிதமான பேச்சு வார்த்தையில் இந்தப் பத்திரத்தை எழுதிக் கொண்டிருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கு, பத்திர வாசகங்களை மட்டும் பார்த்தால் போதாது, அதை ஒட்டிய சூழ்நிலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பது சட்ட விதி.

 பத்திரம் ஒன்றைச் சொல்லும். ஆனால் உண்மையோ வேறு மாதிரி இருக்கும். எனவே பார்ட்டிகளின் உண்மையான எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று சூழ்நிலைகளை வைத்தே தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரைவி கவுன்சில் வழக்கு:

பிரைவி கவுன்சில் வழக்கான Bhagwan Sahai v. Bhagwan Din, LR 17 I.A. 98 என்ற வழக்கில்: இரண்டு பத்திரங்கள் உள்ளன. ஒன்று, முழுக்கிரயப் பத்திரம். மற்றொருன்று அதே சொத்தை அதே பார்ட்டிகளுக்குள், ஒரு கிரய உடன்படிக்கை போல செய்து கொண்டுள்ளார்கள். அதன்படி, அந்த கிரயப் பத்திரத்தில் உள்ள தொகையை 10 வருடத்துக்குள் திருப்பிக் கொடுத்து விட்டால், இந்த சொத்தை அவருக்கே திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று நிபந்தனை. நீதிபதிகள் தீர்ப்பாக: இரண்டு பத்திரங்களையும் சேர்த்து படித்துப் பார்க்கும் போது, Absolute Sale with a right to repurchase என்றே தெரிகிறது. எனவே இதை அடமானம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக திருப்பி வாங்கும் உரிமையுள்ள கிரயம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறி உள்ளது.

எனவே இந்த இண்டிகோ நிலத்தை வழக்கின் நிலவரமும், மேற்சொன்ன பகவான் சாகி வழக்குப் போலவே இருக்கிறது என்றே முடிவுக்கு வருகிறோம் என்று தீர்ப்புக் கூறி உள்ளது.

அடமானக் கடன் பத்திரம்:

இந்த மாதிரியான அடமானங்கள் ஏன் மக்களின் புழக்கத்தில் வந்தது என்றால், முகமதியர்களிடம் ஒரு மதப் பழக்கம் உண்டு. அவர்கள் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்கக் கூடாது என்று குரானில் சொல்லியுள்ளது. எனவே கடன் கொடுக்கும்போது, ஒரு பத்திரத்தை கிரயம் பத்திரமாக எழுதிக் கொள்வது. மற்றொரு பத்திரத்தை ஒரு உடன்படிக்கையாக எழுதி, பணத்தை திருப்பிக் கொடுத்தால், நிலத்தை திருப்பி கிரயப் பத்திரம் எழுதித் தருகிறேன் என்று நிபந்தனை விதித்துக் கொள்வது என்று  அந்தக் காலத்தில் வழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கத்தை மற்ற மதத்தினரும் செய்திருக்கிறார்கள் என்று மதராஸ் ஐகோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் Turner C.J.-ம் Ramasamy Sastrigal v. Samiyappa Naicken, ILR 4 Mad. 179 pp. 183 & 184 என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இரண்டு விதமான பத்திரங்களை ஏககாலத்தில் எழுதிக் கொள்வது பிரிட்டீஸ் இந்தியாவின் ஆடசிக்கு முன்னரே சில பகுதிகளில் (Province) இருந்து வந்துள்ளது. எனவே இப்படி இருக்கும் பத்திரங்களை உருது மொழியில் bai-bil-wafa பை-பில்-வாஃபா அடமானம் என்று சொல்லப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட பை-பில்-வாஃபா அடமானத்தில் (கிரயம் போன்ற அடமானம்) கடன் கொடுத்தவர், பணத்தை வாங்காமல் இழுத்தடித்தால், சொத்துக்காரர், அந்தப் பணத்தை திவானி அதலத் (Dewany Adalwlut) என்னும் கோர்ட்டில் செலுத்தி சொத்தை மீட்கலாம். (அத்தகைய திவானி அதலத் (Dewany Adalwlut) கோர்ட்டுகள் பிரட்டீஸ் வருவதற்கு முன்பே முகமதிய அரசர்களால் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு பெருநகரிலும் அல்லது ஜில்லா நகரிலும் இருந்த கோர்ட் இது).

இப்படி எழுதப்பட்ட ஒரு பத்திரம் a mortgage by conditional sale or an absolute sale with an option to repurchase இதில் எந்த வகையில் இருக்கும் என்பதை Bapaji Apaji v. Senavaraji Marvadi, ILR 2 Bom. 231 என்ற வழக்கில் தெளிவுபடுத்தி உள்ளது.  அதில் பிரைவி கவுன்சில் வழக்கான Pattabhiramier v. Venkatarao Naicken 13 Moore I.A. 560 என்ற வழக்கில், Lord Chelmsford (who delivering the judgment in 1870) said: இங்கிலாந்தில் அடமானக் கடன்களை மீட்கும் சட்டம் தர்ம நியாத்தின் அடிப்படையில் இருக்கும். அங்குள்ள நியாயக் கோர்ட்டுகள் (Courts Equity) பத்திரத்தில் எவ்வளவு காலத்துக்குள் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. சொத்துக்காரர் எவ்வளவு காலம் கடந்து கடனைக் கொடுத்தாலும், அவருக்கு சொத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றே இங்கிலாந்து சட்டம் சொல்கிறது. (இந்த பிரைவி கவுன்சில் வழக்கு லண்டன் பிரைவி கவுன்சிலில் 8 வருடம் (from August 1864 down to May 1872) விசாரனையில் இருந்த வழக்கு என்ற பெயரும் பெற்ற பெருமையுடையது).

What is known in the law of England as the “equity of redemption” depends on the doctrine established by Courts of Equity, that the time stipulated in the mortgage deed is not of the essence of the contract.

ஆனால், அப்படிப்பட்ட இங்கிலாந்து சட்டம் இந்தியாவின் பழைய சட்டங்களில் இல்லை. அவைகள் இப்போது அங்கு இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி மூலம் நடைமுறைப் படுத்துவும் முடியாது.

**

 

 


No comments:

Post a Comment